Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் சமரின் கடைசி நிலைவரம்

Featured Replies

கடும் சமரின் கடைசி நிலைவரம்

-தெய்வீகன்-

நான்காம் கட்ட ஈழப்போர் இன்னமும் களத்தில் ஆரம்பிக்கவி;ல்லையாயினும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போதைக்கு தமது ஆத்ம திருப்திக்கு தமது ஊடகங்களில் உத்தியோகப்பற்ற முறையில் ஆரம்பித்து அதற்கு ஆராத்தி எடுத்து வருகின்றன.

உண்மையில் களத்தில் நடந்து கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அழித்தொழிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கையாகும்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களையும் அட்டுழியங்களையும் அநீதிகளையும் அரங்கேற்றிவரும் அரச படைகளின் இலக்குகளை இனம்கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை முற்கூட்டியே தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள்தான் இதுவாகும். அதனை அரச படைகள் ஏதோ பெரும் யுத்தமாக வர்ணித்து தாம் அதில் அசகாய சூரர்களாக களமாடி வருவதாக தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச ஊடகங்களின் காதுகளிலும் பூச்சுற்றிவருகின்றன. உண்மை என்னவெனில் விடுதலைப் புலிகள் இன்னமும் யுத்தத்தை ஆரம்பிக்கவே இல்லை.

அரச படையினரக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த யுத்தமுனைகளை பார்ப்போமானால்

-முதலில் அது திருகோணமலை மாவிலாறை மையமாக கொண்டு ஆரம்பித்தது. பின்னர் அது மூதூர் வரைநீண்டு திருமலை படைத்தளத்தினுள் புலிகளின் ஆட்லறிகள் சென்றுவிழும் வரை சென்றது.

-அடுத்ததாக வடக்கில் முகமாலை முன்னரங்க நிலைகளிலிருந்து புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை படையினரை பலத்த இழப்போடு பின்தள்ளியது.

-இதேவேளை மண்டைதீவு பகுதியினுள் ஊடுருவிய புலிகளின் 'ஈரூடக படையணிகள்" (ஆயசiநெ) அப்பகுதியை பலத்த சமரின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

-மணலாறு பகுதியிலிருந்தும் புலிகளின் அணி படையினர் மீதான சிறு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருந்தது. ஆனால் அது ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்சமராக நீடிக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற சமர்களின்போது தாக்குதல் வியூகங்களின் விரிவாக்கம் மற்றும் தேவை கருதி சில அண்மித்த பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகள் தமது தரையிறக்கம் மற்றும் இதர தாக்குதல் மூலோபாயங்களை செவ்வனே பயன்படுத்தியிருக்கின்றனர்.

முதலில் திருகோணமலையில் மாவிலாறு நடவடிக்கையில் ஆற்றை நோக்கிய படையினரின் தாக்குதலும் அவர்களை விரட்டும் நடவடிக்கையில் புலிகளும் ஈடுபட்டிருந்த அதேவேளை திருமலை கடற்படைத்தளத்துக்கு அண்மித்துள்ள சம்பூரிலிருந்தும் ஈச்சிலம்பற்றிலிருந்தும் மற்றும் மூதூரின் ஒரு பகுதியிலிருந்தும் முன்னேறிய புலிகள் மூதூரை முற்றாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் ஏ-15 வீதியை அண்டிய படையினரின் முகாம்களை தாக்கியழித்தனர். அப்பகுதியிலிருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கிய படையினரின் ஏவுதளங்கள் மற்றும் முக்கிய முகாம்களும் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது திருமலை தளத்திலிருந்து விநியோகங்கள் மற்றும் வான் வழிதாக்குதல்களை பெற்று படையினருக்கு எதிராக சமரிட்டதால் திருமலை படைத்தளத்தின் மீதும் புலிகள் ஆட்லறித் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த படை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு பேரிடியாக விழுந்த புலிகளின் தாக்குதல் இதுவாகும். அதாவது தனது சிங்களப் படைகள் தமது பெரும் கோட்டையாக கருதிவரும் திருமலை கடற்படைத்தளமும் அதனையண்டிய பெருந்தளமும் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆட்லறி வீச்சு எல்லைக்குள் உண்டு என்பதும் புலிகள் ஆட்லறி போன்ற கனரக ஆயுதத் தளவாடங்களை எப்படி திருமலைக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள் என்பதும் படைத்தரப்புக்கு பதில் நடவடிக்கைக்கு முன்னரே அடிவயிற்றில் புளி கரைத்துவிட்டது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் திருமலை கட்டளைத்தளபதி கேணல் சொர்ணத்துடன் மேற்குமுனை கட்டளைத் தளபதி ஜெயமும் இணைந்து களத்தில் நின்று தாக்குதல்களை நெறிப்படுத்தியமை படைத்தரப்புக்கு மனோரீதியான அச்சத்தை கிளப்பிட்டது. அந்தந்த மாவட்ட அணிகளை இப்பிடியான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் புலிகளிள் பழைய பாணி மாறி வடக்கிலிருந்து பிரத்தியே அணிகளும் கிழக்கில் நிலைகொண்டு தாக்குதல்களை வேகப்படுத்தியமை இவர்கள் வடக்கிலிருந்து எவ்வாறு கிழக்குக்கு வந்தார்கள் என்ற குழப்பத்தையும் படையினருக்கு ஏற்படுத்திவிட்டது.

புலிகள் கிழக்கில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று தென்னிலங்கை அரசியல் இராணுவ பரப்புரையாளர்கள் மற்றும் ஒட்டுப்படைகளின் பக்தகோடிகள் காட்டிய பூச்சாண்டியை நம்பி மாவிலாறு விடயத்தை மையமாக வைத்து புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த அரச படைகளுக்கு திருமலை படைத்தளத்துக்கு புலிகள் கொடுத்த அடி பல்லிடுக்கில் அகப்பட்ட பாக்குத்தூள் போல அரியண்டத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

திருமலை படைத்தளத்தை பொறுத்தவரை அது சிங்களப் படைகள் ஆனையிறவிலும் பார்க்க பலமடங்கு நம்பிக்கைவைத்துள்ள பெரும்குகை. சொல்லப்போனால் அரச படையின் இதயமாக திருமலை விளங்கிவருகிறது. ஆனால் அது எமது எறிகளை வீச்சு எல்லையினுள்தான் உள்ளது என்று புலிகள் அநாயாசமாக இருபது ஆட்லறியை அடித்து இடித்து காட்டியபோது அதன் அதிர்ச்சி கொழும்புக்கு மட்டுமல்ல அண்டை நாடுகளுக்கும் பரவியிருந்தது.

இவ்வாறாக மாவிலாறு பிரச்சினை களத்தளவில் பேச்சு, இழுபறி என்ற சகதிகளுக்கும் சிக்கிக்கொண்டிருக்க மூதூரில் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை முடித்துக்கொண்டு தமது பழைய நிலைகளுக்கு திரும்பினர் புலிகள்.

அடுத்ததாக ஆரம்பித்த தாக்குதல்கள் மண்டைதீவு மற்றும் முகமாலை பகுதிகள். முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் என்பது யுத்தம் வெடிக்கும் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்த காலப்பகுதியிலிருந்தே படைத்தரப்பினால் பாரியளவில் வலுவூட்டப்பட்டு வந்த கோட்டை. அவ்வப்போது பலாலிக்கு வரும் படைத்தளபதிகளின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நேரடி நெறிப்படுத்தல்கள் ஆகியவற்றால் திரட்டப்பட்ட படையினரே எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்ற உறுதியுடன் இங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க விசேட படைகளால் பயிற்றப்பட்ட இந்த 53 ஆவது டிவிஷன் படையணி ஸ்ரீலங்கா இராணுவத்தின் பல விசேட அதிசிறப்பு தேர்ச்சி பெற்ற உப படையணிகள் அடங்கியதாகும்.

அது மட்டுமல்லாமல் அங்கிருந்து அவ்வப்போது புலிகளின் முன்னரங்க நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி சீண்டும் நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. நாங்கள் தயார் நீங்கள் தயாரா என்பது போல அங்கிருந்து வேட்டுக்களை தீர்த்துக்கொண்டிருந்த படையினர், கடந்த வாரம் புலிகள் தமது நிலைகளிலிருந்து முன்னகர்ந்தபோது தாக்குதலின் உக்கிரம் தாங்காமல் படைநிலைகளை விட்டு பாதணியைக் கூட கைவிட்டு பின்வாங்கி ஓடினர். புலிகளால் எடுக்கப்பட்ட நேரடி யுத்த களக்காட்சிகள் இதனை அழாகக் காண்பித்தன.

ஆறு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தை மீளக்கைப்பற்றும் படையினரின் முயற்சியை முறியடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் முகமாலை மீதான நவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். தமது முன்னரங்க நிலைகளிலிருந்து மூர்க்கமான தாக்குதலை நடத்தி முன்னேறிய புலிகள் படையினரின் ஆறுக்கும் மேற்பட்ட பதுங்குகுழிகளை கைப்பற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்வரை பின்தள்ளினார். இழந்த தமது நிலைகளை மீளக்கைப்பற்றுவதற்காக புலிகளுடன் படையினர் கடும் சமரிட்டு வருகின்றனர். புலிகளின் இந்த தாக்குதலுக்கு மேலும் வலும் சேரக்கும் வகையில் வெற்றிலைக்கேணி வழியாக தரையிறக்கமுயற்சி ஒன்றை புலிகளின் இன்னொரு அணி ஒன்று மேற்கொண்டதாக தகவல் ஒன்று தெரிவித்தபோதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

படையினரின் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் முகமாலைக்கு அடுத்துள்ள கிளாலி, புலோப்பளை, மண்டுவில், எழுதுமட்டுவாள், வரணி, கச்சாய், மீசாலை, கொடிகாமம் பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகள் தமது ஊடகங்கள் ஊடாக அறிவித்துள்ளனர். ஆனால் மக்கள் இடம்பெயரந்து சென்றால் யாருமற்ற சூனியப் பிரதேசத்திற்குள் தம் மீதான புலிகளின் தாக்குதல் மேலும் உக்கிரமடையும் என்ற அச்சத்தில் குடாநாடெங்கும் ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ள யாழ். படைத்தலைமை கட்டளையகம் மக்களை அவர்களது வீடுகளுக்குள் முடக்கி அவர்களை மனிதக்கேடயங்களாக உபயோகித்து வருகிறது.

இதேவேளை, தமது பூநகரித் தளம் மீதான தாக்குதல் முயற்சியை படையினர் மண்டைதீவிலிருந்து நடத்த திட்டமிட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பூநகரியிலிருந்து கடல் வழியாக மண்டைதீவினுள் ஊடுருவிய புலிகளின் 'ஈருடகப் படையணிகள்" மண்டைதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினருக்கு எதிராக கடும்தாக்குதலை மேற்கொண்டனர். தீவுப்பகுதி மீதான இந்த தாக்குதலை சமாளிக்க பலாலியிலிருந்து படையினர் எறிகணை தாக்குதலையும் வான் வழியான தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர். ஆனால் தொடரணிகளாக நுழைந்த புலிகள் மண்டைதீவை முற்றாக தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அங்கிருந்த கடற்படையினரை அல்லைபிட்டிவரை கலைத்துசென்று தாக்கினர்.

இதேவேளை மண்டைதீவில் உடனடியாக நிலையெடுத்த புலிகளின் அணியொன்று ஊர்காவற்றுறையில் சென்று தரையிறங்கி கடற்படையினரின் அல்லைப்பிட்டி - ஊர்காவற்றுறை முன்னரங்க நிலைகளின் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றது. மண்டைதீவில் படையினரின் இனங்கண்ட நிலைகளை அழித்துவிட்டு தமது பழையநிலைகளுக்கு திரும்பியுள்ளன புலிகளின் 'ஈருடக படையணிகள்".

மண்டைதீவு மண்கும்பான் அல்லைப்பிட்டி ஊர்காவற்றுறைப் பகுதிகளின் மீது யாழ். துரையப்பா விளையாட்டரங்கு பகுதியிலிருந்து வைத்து பல்குழல் எறிகணை தாக்குதலையும் கெலிகொப்டரில் சென்று றொக்கட் தாக்குதல்களையும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய நிலைவரப்படி பூநகரியிலிருந்து பலாலி மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஆட்லறி தாக்குலால் வடக்கில் நிலைகொண்டுள்ள படையினருக்கான வான்வழி விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தென்னிலங்கைக்கான அனைத்து வான் வழி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கெலிக்கொப்டர்கள் மூலமே விசேட தேவைகளை பாதுகாப்பாக படையினர் மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை திருமலை கடற்படைத் தளம் புலிகளின் சம்பூர் தளத்திலிருந்தான ஆட்லறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் வடக்குக்காக கடல்வழி விநியோகமும் பெரிதாக தடைப்பட்டுள்ளது. மீறி கடல்மார்க்க விநியோகத்தை மேற்கொண்டாலும் அவ்வாறு செல்லும் கப்பல் - முன்னர் பேர்ள் க்ருஸ் துருப்புக்காவிக்கு இடம்பெற்றது போல -முல்லைக்கடலில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டிய சாத்தியக்கூறுகள் பலமாக உள்ளன. இவ்வளவு அழுத்தத்தின் மத்தியிலேயே இன்று குடாநாட்டில் உள்ள 40 ஆயிரம் படையினரும் அங்கு நின்று கொழும்பின் கட்டளைக்கேற்ப புலிகளுடன் சமரிடவேண்டிய நிலையில் உள்ளன.

http://www.tamilnaatham.com/articles/2006/...kan20060814.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.