Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் எதேச்சாதிரகாரப் போக்கு அதிகரித்து வருகிறது! நவீபிள்ளை

Featured Replies

Navi-pillay.jpgஇலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.

இலங்கையில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, தன்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கை காவல்துறை, இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்

இதுபோன்று நடந்து கொள்வதற்கு, தம்மைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.

போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள படைகளை இலங்கை ஜனாதிபதி குறைக்க வேண்டும் என்றும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

  • கருத்துக்கள உறவுகள்
navi-pillai-310813-seithy-150.jpg

சிறிலங்காவில் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். "பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. சிறிலங்கா சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

  

இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, சிறிலங்கா மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள படைகளை சிறிலங்கா அதிபர் குறைக்க வேண்டும். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்� என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91596&category=TamilNews&language=tamil

இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, தன்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கை காவல்துறை, இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது

 

 

இதுபோன்று நடந்து கொள்வதற்கு, தம்மைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது

 

 

130831095335_navi_pillay_un_human_rightsஎதேச்சதிகார ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் மக்கள் இன்றளவும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், எதேச்சதிகாரப் பாதையில் நாடு செல்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் தெரிவித்தார்.

 

யுத்தம் முடிந்தாலும் துன்பம் தீரவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் நவி பிள்ளை வலியுறுத்தினார்.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் நாட்டின் பாதுகாப்பு பிரிவினரிடம் இருந்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் என்பது அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தான் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பயணத்தின்போது, தன்னிடம் பேசிய சில மனித உரிமை ஆர்வலர்கள் பிற்பாடு பொலிசாராலும் இராணுவத்தினராலும் தொல்லைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக புகார்கள் வந்திருப்பது சற்றும் சகித்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

"என்னை இங்கே வரவழைத்துவிட்டு, இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்யக்கூடாது. இலங்கையில் ஆட்கள் கண்காணிக்கப்படுவதென்பதும் துன்புறுத்தப்படுவதென்பதும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இங்கே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரேயடியாக மௌனிக்கச் செய்யும் காரியங்களும் நடக்கின்றன."

இதற்கிடையே எமது சிங்கள சேவையின் கொழும்புச் செய்தியாளர் அஸாம் அமீனுக்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கிய பிள்ளை அவர்கள், திருகோணமலை மாணவர்கள் கொலை விவகாரம் மற்றும் மூதூர் அக்ஷசன்பெய்ம் படுகொலை விவகாரம் போன்றவை குறித்து சில இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக தனக்கு சட்டமா அதிபர் விளக்கியதாகக் கூறினார். அது குறித்து அவர் ஓரளவு திருப்தியும் வெளியிட்டார்.

இந்த விஜயத்தின்போது சில அரசாங்க அமைச்சர்கள் கூட உங்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக்கூடிய சில கருத்துக்களை கூறியிருந்தார்களே என்று எமது செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த நவிபிள்ளை அவர்கள், மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில எம்பிக்கள் கூறிய கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தான் எடுத்துச் சென்றதாகவும் மிகவும் மோசமான சில கருத்துக்களுக்காக இலங்கை ஜனாதிபதி தன்னிடம் வருத்தம் தெரிவித்ததை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஒருவார காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பலதரப்பட்ட மக்களையும் சந்தித்திருந்த நவி பிள்ளையின் இலங்கை விஜயம் நிறைவுக்கு வந்துள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130831_navipillay.shtml

இலங்கையில் தான் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பயணத்தின்போது, தன்னிடம் பேசிய சில மனித உரிமை ஆர்வலர்கள் பிற்பாடு பொலிசாராலும் இராணுவத்தினராலும் தொல்லைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக புகார்கள் வந்திருப்பது சற்றும் சகித்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார். :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.