Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீம்பிள்ளையின் பயணத்தினால் மூடப்பட்ட காவலரண்கள் மீண்டும் திறப்பு!

Featured Replies

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு அகற்றப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையானது அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்தார். இவர் வருகையை முன்னிட்டு ஆணையிறவு மற்றும் யாழ். குடாநாட்டிலிருந்த இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டதுடன் இராணுவத்தினரின் ரோந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. வீதிகளிலும் இராணுவத்தினரைக் காண முடியாது அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நவநீதம்பிள்ளை யாழ். முல்லைத்தீவு விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் காவலரண்களும் இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இராணுவத்தினர் மீண்டும் வீதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இத்தகைய செயற்பாடானது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகவே நாம் கருதுகிறோம்.

சர்வதேசத்தின் முன்னால் அரசு உண்மையை மூடிமறைப்பதையே இது தெளிவாக உணர்த்துகிறது என்றும் அவர் சொன்னார்.http://www.sankathi24.com/news/32729/64//d,fullart.aspx

ஒரு விடயம் ஒரு பிள்ளையையும் எமக்கு ஒண்டும் தரப்போவதில்லை .................மீண்டும் அடித்து நெருக்கும் தகுதிக்கு நாம் வரவேண்டும் .....அல்லது இப்படியே அடிமையாய் சாக வேண்டும் .......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் ஒரு பிள்ளையையும் எமக்கு ஒண்டும் தரப்போவதில்லை .................மீண்டும் அடித்து நெருக்கும் தகுதிக்கு நாம் வரவேண்டும் .....அல்லது இப்படியே அடிமையாய் சாக வேண்டும் .......

இப்படி சொன்னால் புலத்தில் இருந்து விசில் அடிக்கும் கூட்டம் என்பார்கள்... சிங்களவனிடம் கதைச்சு பேசி ஒன்றும் வேண்ட ஏலாது....அவன் எப்ப எப்ப எப்படி வேசம் போடனுமோ அப்படி எல்லாம் போடுவான்...வெளி உலகத்துக்கு நல்லவன் போல...உள்ளூர் மக்களுக்கு ரவுடி போலவும்........நான் சொன்னால் நீ கேக்கனும்...மற்றவர்களுக்கு முன்னால் நின்டு நீ அழக் கூடாது ஒன்றும் சொல்லக் கூடாது..அப்படி சொன்னால் அவைக்கு நடந்த்து தான் உங்களுக்கும் நடக்கும் என்று ஒரு மிரட்டல்....இன்னும் எவளவு காலத்துக்கு தான் இந்த அடிமை வாழ்க்கை...

எங்கட சமூகத்தில "சின்னப்பிள்ளை வேளாண்மை விடிஞ்சும் வீடு வந்து சேராது" என்று சொல்லி இளையோரின் முயற்சியை மட்டம் தட்டும் ஆட்கள் தான் அதிகம். 

ஒரு புழுவுக்குக் கூட ஒரு கட்டத்தில்..போராடாமல் வாழ்க்கை இல்லை... எனும் போது.. அதுவும்.. போராடித்தான் ஆகனும்.

உந்தச் சாரம் கட்டின பொடியளை.. ஒரு சிகரெட் ஊதி முடிக்கிற நேரத்துக்க முடிப்பம் என்று வெளிக்கிட்டவை கடைசியில் உருக்குலைந்து முடிந்தது தான் வரலாறு.

காலம்.. எப்போதும் கோழைகளின் கையில் இருந்து விட்டால் வரலாற்றில் வெற்றி என்பதற்கு பக்கங்கள் இருக்காது..!

கூச்சல் போடுறதுகளின்ர கூக்குரலை கேட்க வெளிக்கிட்டால்.. காது தான் செவிடாகுமே தவிர.. வாழ்க்கை சுதந்திரமாக அமையாது..! எங்கள் வாழ்க்கை எங்கள் கையில்..! இதுதான் நிஜம் இந்த உலகில்..! புத்திசாலித்தனமாக.. தகாத காலத்தை தாண்டி.. கடந்து செல்லும் போராட்டமே.. வாழ்வே வெல்லும். நிலைக்கும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.