Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை -யாழில் சரத்பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Sarath%20Gotta%20mahi_CI.jpg

 

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரணடைந்த புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர். தவிரவும் சரணடைந்த ஏனைய 12ஆயிரம் பேர்வரையிலான போராளிகள் புணர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலை மாவட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, இளம்பரிதி, கலைபண்பாட்டுத் துறைப் பொறுப்பாளர் புதுவை ரத்தினதுரை, அரசியல் துறைத் துறைப் பொறுப்பாளர் தங்கன், மூத்த உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்டே ஆயிரக்கணக்காணவர்கள் பிரான்ஸிஸ் பாதர் முன்னிலையில் படையினரிடம் சரணடைந்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சரத் பொன்சேகா அப்படி எவருமே சரணடையவில்லை என மறுத்துள்ளார்.

 

யாழ் மாவட்ட தற்போதைய இராணுவத் தளபதி ஹத்துருசிசிங்க வட மாகாணசபைத் தேர்தலில் தனது சார்பில் சிலரை களமிறக்கி உள்ளதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் புலிகளின் காலத்தில் மாதாந்த வருமானத்திற்கு புலிகளுக்கு தகவல் வழங்கியவர் ஹத்துருசிசிங்க அதனால் இப்போதும் தனக்கு வருமானம் வரும் என நினைத்தால் அதனையும் அவர் செய்வார் எனக் கூறியுள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் காலத்தில் மாதாந்த வருமானத்திற்கு புலிகளுக்கு தகவல் வழங்கியவர் ஹத்துரு சிங்க 

 

 

மீண்டும் கம்பி எண்ண சரத் ஆசைப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் - சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்;ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் எவரும் சரணடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சரணடைந்த தயா மாஸ்டர், குமரன் பத்மநாதன் போன்றவர்கள் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர்களுக்கு மஹிந்த ஹத்துருசிங்க ஒத்துழைப்ப வழங்கி வருவதாகவும் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான தரப்பின் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடமை தவறிச் செயற்படும் இராணுவ அதிகாரிகளினால் அனைத்து இராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96235/language/ta-IN/article.aspx

மீண்டும் கம்பி எண்ண சரத் ஆசைப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. :)

சிங்கள இராஜதந்திரம்.

 

புலிகளுக்கு தகவல் அவர் வழங்கினார். இவர் விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் எனில் அப்போது இவருக்கும் அதில் பங்கு உண்டு. இப்போ கத்துறு சிங்கா நேரே கோத்தாவிடமே கொடுத்துவிடுகிறார்.

 

மாறி மாறி முதுகில் குத்துவதுதான் சிங்கள் ராஜதந்திரம். முதலில் விழுபவர் பொன்சேக்கா மதிரி முழுவதாக விழுவார்கள். அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.