Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்! - பொதுபலசேனா குற்றச்சாட்டு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்! - பொதுபலசேனா குற்றச்சாட்டு!!

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளான ஹமாஸ் மற்றும் அல் குவைதா அமைப்புகளுக்கு பெரும் நிதியுதவி வழங்கிவரும் யூசுப் அல் கர்த்தாவுடன் முக்கியமான சிறிலங்காவின் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவரும் தொடர்பினை மேற்கொண்டு வருவதாகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவரும் யூசுப் அல்கர்த்தாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் இவர்கள் தொடர்பிலான தகவலை தேவை யேற்படின் வெளியிடுவோமென சிறிலங்காவின் இனவாத அமைப்பான பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

 

அத்துடன் நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தாம் வழங்கிய தகவல்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயற்பட்ட சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொடஹத்தே ஹானசார தேரர், காவியுடையணிந்த பிக்குகளை முஸ்லிம் தலைவர்கள் தீவிரவாதிகளாக்கக் கூடாதெனவும் கேட்டுள்ளார்.

 

கிருலப்பனை நதியிலுள்ள போதி பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் உள்ள மக்களை மதரீதியிலான பிரிவினை வாதத்துக்குள் உட்படுத்தும் நடவடிக்கைகளை சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் இயங்கி வருவதாக உலகுக்கு தெரிவித்திருந்தார்.

 

7 மாதங்களுக்கு முன் பொதுபலசேனா அமைப்பு சிறிலங்காவில் இயங்கி வருகின்ற முஸ்லிம் மதவாத மற்றும தீவிரவாத அமைப்புகள் தொடர்பில் வெளியிட்ட ஆதாரங்களைக் கருத்திற் கொண்டு படைத்துறை அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாம் படைத்துறைச் செயலாளருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைக் தெரிவிக்கின்றோம்.

 

சிறிலங்காவில் பத்துக்கும் அதிகமான முஸ்லிம் தீவிரவாதப் போக்குடைய அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கான நிதியுதவிகள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் ஹமாஸ் மற்றும் அல்குவைதா அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிவரும் யூசுப் அல்கர்த்தா என்பவருக்கும் இலங்கையிலுள்ள சில முஸ்லிம் தலைமைகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

 

குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீனும் யூசப் அல் கர்த்தாவுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணி வருகின்றனர். அவர்கள் கட்டாரில் இரகசிய சந்திப்பொன்றினையும் மேற்கொண்டுள்ளனர். தேவையேற்படின் அச்சந்திப்பு தொடர்பிலான ஆதாரங்கள் வெளியிடப்படும்.

 

அத்துடன் இஸ்லாமிய தீவிரவாத  அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிவரும் யூசுப் அல் கர்த்தா சிறிலங்காவிலுள்ள உலமா சபைகளைக் கட்டுப்படுத்தும் சூறா சபையொன்றை அமைப்பதற்கு செயற்பட்டு வருகின்றார். அதற்கான நடவடிக்கைகள் இந்த முஸ்லிம் தலைமைகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=199f1dcb-3af0-4c85-85f6-1ff5282ecc1a

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.