Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கோத்தாவின் பெயரில் சிறிலங்கா கடற்படைத் தளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SLNS-gota.jpg

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் 'எஸ்எல்என்எஸ் கோத்தாபய' தளத்தை, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே திறந்து வைத்துள்ளார். 

இந்தத் தளத்தை ஆரம்பித்து வைக்கும் உத்தரவை, இதன் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கொமாண்டர் உடகமவிடம், சிறிலங்கா கடற்படைத் தளபதி, கையளித்தார். 

2011 ஜனவரி 13ம் நாள் முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை, முகாம் ஒன்றை நிறுவியது. 

பின்னர், இந்த முகாம், பிராந்திய பாதுகாப்பு நிலையமாக 2012 செப்ரெம்பர் 17ம் நாள் தரமுயர்த்தப்பட்டது. 

தற்போது, செம்மலை, நாயாறு, சிலாவத்தை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களுக்குப் பொறுப்பான தளமாக, 'எஸ்எல்என்எஸ் கோத்தாபய' நிறுவப்பட்டுள்ளது. 

கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் கீழ் இது செயற்படும். 

SLNS-gotabhaya.jpg

அதேவேளை, கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் கீழ் திருகோணமலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இரண்டு கடற்படைத் தளங்களை சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். 

கிண்ணியாவில் 'எஸ்எல்என்எஸ் கோகண்ண' என்ற பெயரிலும், தோப்பூரில், 'எஸ்எல்என்எஸ் லங்காபட்டுன' என்ற பெயரிலும் புதிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2008 ஓகஸ்ட் 15ம் நாள் நிறுவப்பட்ட கிண்ணியா கடற்படைத் தளம், மூதூர், இறால்குழி, கிண்ணியா கடற்படை முகாம்களுக்கான தலைமை தளமாகச் செயற்படவுள்ளது. 

2008 ஓகஸ்ட் 16ம் நாள் நிறுவப்பட்ட தோப்பூர் கடற்படை முகாம், புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு, 'லங்காபட்டுன' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தத் தளம், இலக்கந்தை, கல்லடிச்சேனை, பாட்டாளிபுரம், மல்லிமுந்தல்,உப்பூறல், லங்காபட்டுன, முகத்துவாரம், பூனாடி, வெருகல் ஆகிய கடற்படை முகாம்களுக்கான தலைமைத் தளமாக செயற்படவுள்ளது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130914109047

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்களத்தில் மட்டும் எழுதியிருக்கு?? இணக்க அரசியல் வாதிகள் பதில் சொல்வார்களா? குபெக்கில் ஆங்கில்தில் எழுதி படைத்தளம் வைக்க முடியுமா? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.