Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மொழியில் ஈழப்போருக்கு வலுச் சேர்த்த ஊடகப் போராளி ‘பிரியந்த’

Featured Replies

priyantha-300x200.jpg

நேர்மையுடனும் – துணிச்சலுடனும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வீர நடைபோட்ட ஒரு ஊடகப் போராளி பிரியந்த இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான்.பொழியப்பட்ட விமானக் குண்டுகள் மத்தியிலும் வந்துவிழுந்து வெடித்துச் சிதறிய எறிகணைகள் மத்தியிலும் கூடாரச் சேலைகளை கிழித்துப் பாய்ந்த தொலைதூரவேட்டுக்கள் நடுவிலும் நின்று விடுதலைக்குரலை ஒலித்தவன் அவன்;

புலிகளின்குரல் வானொலியின் சிங்கள சேவையின் கட்டுப்பாட்டாளராகவும் பிரதம ஒலிபரப்பாளனாகவும் கடமையாற்றியவன் அவன்.

செய்தி வாசிப்பாளன், நிகழ்ச்சித் தயாரிப்பாளன், நாடக இயக்குநர், நடிகன் எனப் பல முனைகளில் வானொலிப் பணியாற்றிவன். நெருப்பின் நடுவில் நின்ற போதும் விடுதலைக் குரலை சிங்கள மக்களின் செவிகளுக்கு எடுத்துச் சென்றவன் இவன். எங்கள் உரிமைப் போராட்டத்தின் நியாயங்களைச் சிங்கள மக்கள் பலர், குறிப்பாகச் சில படைச் சிப்பாய்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லுமளவுக்கு இவனின் குரல் வலிமை பெற்றிருந்தது.

அந்த வலிமையும் அவன் முன் வைத்த கருத்துக்களும் அவனுக்கு ஏராளமான சிங்கள நேயர்களை உருவாக்கிக் கொடுத்தது. இராணுவ அதிகாரபீடம் இராணுவத்திரை புலிகளின்குரல் சிங்கள சேவையைக் கேட்கக்கூடாது எனக் கட்டளையிட்ட போதும் சிப்பாய்கள் அதை இரகசியமாகக் கேட்குமளவுக்கு இவன் அவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தினான்.

இவன் நெருக்கடிகள் சூழ்ந்த போதும் நிமிர்ந்து நின்றான். சோகத்தால் சுற்றிவளைக்கப்பட்ட போதும் பணிகளில் தவறிவிடவில்லை.

2007 நவம்பர் 27!

ஈழ ஊடக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்!

சிங்கள் இனவெறி ஆட்சியாளர்கள் புலிகளின்குரல் ஊடக வளாகத்தின் மீது விமானக் குண்டு வீசி ஊடகவியலாளர்களைக் கொன்று தன் அநாகரிக வடிவத்தை வெட்கமின்றி வெளிப்படுத்திய நாள்.

இன்னும் சில நிமிடங்களில் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரை புலிகளின்குரல் வானொலி மூலம் உலகெங்கும் ஒலிக்கத் தயாராகிக் கொண்டிருந்த நேரம், அந்த உரையைக் கேட்க உலகமே காத்துக்கிடக்கிறது.

அதை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உடனடியாக ஒலிரப்ப உலக ஊடகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

ஆனால் அந்த உரையை உலகம் கேட்பதைத் தடுக்க முடிவெடுக்கிறது இலங்கை அரச தரப்பு. அந்தக் குரலை உலகின் செவிகளுக்கு வானலையில் ஏற்றிச் செல்லப் போகும் புலிகளின்குரல் வானொலியையே அழித்துவிடத் திட்டமிடுகிறது.

உறுமி வந்த இலங்கை விமானப்படையின் மிகையொலி விமானங்கள் புலிகளின்குரல் வளாகத்தின் மீது குண்டுகளை வீசிவிட்டு ஓடித்தப்புகின்றன.

ஒலிபரப்பாளர் இசைவிழி, தொழில்நுட்பவியலாளர்கள் தர்மலிங்கம், சுரேஷ் லிம்பியோ உட்பட்ட பலர் அந்த இடத்தில் கொல்லப்படுகின்றனர்.
ஒலிபரப்பாளர்கள் சிலர் படுகாயம் அடைகின்றனர். கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன. கூரைகள் நொருக்கப்பட்டன.

ஆனால் இனவெறி அரசின் எதிர்பார்பை முறியடித்து புலிகளின்குரல் எவ்வித தடங்கலுமின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சிங்களசேவையின் ஒலிபரப்பாளர்களாகிய பிரியந்தவும் அவரது சக ஊடகரும் புழுதியில் குளித்து புகைமண்டலத்தின் நடுவே நிற்கின்றனர். அதிஷ்டவசமாக அவர்கள் காயப்படவில்லை.

எனினும் பதட்டம், பரபரப்பு எதிர்பாராத உயிரிழப்புக்கள் என மனங்களைக் குழப்பும் இக்கட்டான நிலை.

தலைவரின் உரை வானொலிகளில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்து மணியோசை, மாவீரர் வணக்கம், தீபமேற்றல், துயிலுமிடப்பாடல்!

அவை நிறைவு பெற தலைவரின் உரையின் சிங்கள மொழிபெயர்ப்பு ஒலிபரப்பட வேண்டும்.

பிரியந்தவையும் கடமை அழைக்கிறது!

பதட்டம், தோழர்கள், தோழியர்களை இழந்த சோகம், அச்சம் எல்லாவற்றையும் ஒரு மூலையில் எறிந்துவிட்டு, பிரியந்த புழுதி படிந்த உடலுடன் ஒலிபரப்புக் கலையகத்தினுள் நுழைகிறான்.

குறிப்பிட்ட நேரத்தில் தலைவரின் உரையின் சிங்கள ஒலிபரப்பு புலிகளின்குரல் சிங்கள சேவையில் ஒலிபரப்பாகிறது.

எத்தனை நெருக்கடிகள் மத்தியிலும் கடமையை செய்து முடிக்கும் புலிகளின் திறனை எண்ணி உலகமே வியக்கிறது.

நெருக்கடிகள் மத்தியிலும் நிமிர்ந்து நின்ற பிரியந்தவின் உணர்வையெண்ணி நாம் வியந்து நிற்கிறோம்!

ஆம்! பிரியந்த ஒரு ஊடகப் போராளி!

உயிர்ப்பயமின்றி கடமையை நிறைவேற்றும் அவனின் அர்ப்பண உணர்வு அற்புதமானது!

போர் விரிய விரிய -

புலிகளின்குரல் வானொலியும் வான் குண்டுகளையும் எறிகணை வீச்சுக்களை தாங்கித் தாங்கி இடம்பெயர்ந்தது.

அவனும் அதனுடன் இணைந்து நடந்தான்!

அவன் குரலும் இணைந்து ஒலித்தது – சிங்களத்தில்
இடப்பெயர்வின் அவலங்களை அவனும் சுமந்தான்.

நிவாரண முகாமென்ற திறந்த வெளிச் சிறையை அவனும் அனுபவித்தான். மீள்குடியேற்றத்தின் அவலங்களையெல்லாம் அவனும் தாங்கினான்.

இறுதியில் இருதய நோய் அவனின் உயிரைக்குடித்துவிட்டது.

“கருங்காலித் தண்டுக்கு நாணாக் கோடரி கருங்கதலித் தண்டுக்கு வளைந்துவிட்டது”

எத்தனையோ இடர்களின் போதும் தப்பிய அவனின் உயிர் இருதய நோய்க்குப் பலியாகிவிட்டது”

எனினும் ஊடக உலகிலும் விடுதலைப்போரிலும் அவனுக்கென ஒரு பதிவு “ஓரு” ஊடகப் போராளியாக நிரந்தரமாக உண்டு.

தமிழ்லீடருக்காக செழியன்

http://tamilleader.com/?p=19674

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.