Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைக்கும், மரத்துக்கும் வாக்களிப்பதால் எதையும் சாதித்துவிட முடியாது : உதுமாலெப்பை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் தரப்பு அரசியல் அதிகாரங்களினூடாகப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் தவறவிடக் கூடாது.  யானைக்கோ மரத்துக்கோ இம்மாவட்ட முஸ்லிம்கள் உங்களது வாக்குகளை அளிப்பதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அப்துல் சத்தாரை ஆதரித்து குருநாகல் மல்வப்பிட்டிய எனும் கிராமத்தில் முன்னால் பிரதேச சபையின் உறுப்பினர் அமான் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆளும் கட்சியில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதன் ஊடாக மாத்திரமே நமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். குருநாகல் மவாட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்கள் சகல துறைகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுவது மிகக் கவலையளிக்கிறது. மத்திய அரசாங்கத்தினால் பொதுவான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் மாகாண அரசாங்கத்தினூடாக கிராமங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த 30 வருடங்களாக கோர யுத்தின் பிடிக்குள் சிறைப்பிடிப்பட்டு சின்னாபின்னமாகிக்கிடந்த கிழக்கு மக்களுக்கு யுத்ததத்தை முடிவுக்குக் கொண்டு வந்தத் மூலம் ஜனாதிபதி கிழக்கு மக்களை சுதந்திரமாக சுவாசிக்க வழி செய்தார். அது மாத்திரமின்றி, வடக்கையும் கிழக்கையும் பிரித்து கிழக்கு மக்கள் தங்களது மக்கள் பிரதிநிதிகளை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் இரு முறை நடத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் பங்களிப்புடன் எங்களது பிரதேசங்களை நாங்களாகவே இன,மத, பிரதேச வேறுபாடின்டி அபிவிருத்தி செய்து வருகின்றோம். அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே கிழக்கில் சக வாழ்வை உருவாக்கி வருகின்றோம். அவ்வாறு உங்களது பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலானது ஜனாதிபதியை மாற்றும் தேர்தலோ அல்லது அரசாங்கத்தை மாற்றும் தேர்லோ அல்ல. மாறாக அரச பங்களிப்புடன் உங்களது பிரதேசங்களை உங்களது பிரதிநிதியினூடாக அபிவிருத்தி செய்வதற்கு உங்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் தேர்தலாகும்.

கடந்த காலங்களில் யானையிலும் மரத்திலும் வந்தவர்களுக்கு வாக்களித்து அவர்களை பெற்றிபெறச் செய்து, மாகாண சபைக்கு அனுப்பியதன் மூலம் இம்மாவட்ட முஸ்லிம்கள் என்ன பலாபலனைப் பெற்றுள்ளீர்கள்.

அத்துடன், வட மேல் மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுவது நிச்சயமாகிவிட்டது. இதனால் யானைக்கோ மரத்துக்கோ இம்மாவட்ட முஸ்லிம்கள் உங்களது வாக்குகளை அளிப்பதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7125

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.