Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

47 வகை நீர்நிலைகள்

Featured Replies

994821_590494931007078_1631810650_n.jpg
47 வகை நீர்நிலைகள்

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட� �ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந� �து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட� � பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய� � உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படு� �் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண� �டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

https://www.facebook.com/photo.php?fbid=590494931007078&set=a.509042252485680.1073741828.508946919161880&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

47 நீர் நிலைகளை வைத்துக்கொண்டா தண்ணீர்ப்பஞ்சம் வரும் என்று உலகம் பயம் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

துரவு, குழாய்க்கிணறு, களப்பு, கொட்டுக் கிணறு (ஏழாலையார் காவியது) என்று இன்னும் பல உள்ளனவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.