Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thamilarasu-ilangai-150.jpg

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

  

முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் 7 ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.

 

வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது. மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன. வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.

 

<*> யாழ் மாவட்டம்

* சாவக்கச்சேரி தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி 22,922 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193 

ஐக்கிய தேசியக் கட்சி - 89

செல்லுப்படியான வாக்குகள் 27,415

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,378

அளிக்கப்பட்ட வாக்குகள் 29,793

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 49,479

 

* பருத்தித்துறை தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி - 17,719 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953 

ஐக்கிய தேசியக் கட்சி - 26

செல்லுப்படியான வாக்குகள் 21,038 

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,444 

அளிக்கப்பட்ட வாக்குகள் 22,482 

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 35,054 

 

* கோப்பாய் தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக்கட்சி - 26,467 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386 

ஐக்கிய தேசியக்கட்சி - 127 

 

* மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 28,210 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 3, 898 

 

* வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசு கட்சி - 23442 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3763 

ஐக்கிய தேசியக் கட்சி - 173 

 

* ஊர்காவத்துறை தேர்தல் தொகுதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு ......8917 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி .......4164 

 

* யாழ்.தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 16421 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2416 ஐக்கிய தேசியக் கட்சி - 60

 

*நல்லூர் தேர்தல் தெகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 23733 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2651 ஐக்கிய தேசியக் கட்சி - 148

 

* உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 18855 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2424 ஐக்கிய தேசியக் கட்சி - 57

 

<*> முல்லைத்தீவு மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு .....28266 ...4 ஆசனங்கள் 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ......7209 ..1 ஆசனம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ........199 

ஜக்கிய தேசிய கட்சி .......197 

 

<*> கிளிநொச்சி மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ......37079.......3 ஆசனங்கள் 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி .......7897........1 ஆசனம் 

 

<*>மன்னார் மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 33,118 (3 ஆசனங்கள்) 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 15,104 (1 ஆசனம்)

முஸ்லிம் காங்கிரஸ் - 4471 (1ஆசனம்) 

ஐக்கிய தேசியக் கட்சி - 180 

 

<*> வவுனியா மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93417&category=TamilNews&language=tamil

இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது120115173824_tna_logo_tamil_national_all

அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.

 

மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.

ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.

ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.

விபரம்:

யாழ்ப்பாணம்:

தமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்

மன்னார் :

தமிழ் அரசுக் கட்சி --- 3

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1

கிளிநொச்சி :

தமிழ் அரசுக் கட்சி --- 3

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1

முல்லைத்தீவு :

தமிழ் அரசுக் கட்சி --- 4

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1

வவுனியா :

தமிழ் அரசுக் கட்சி -- 4

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130921_northresult.shtml

அந்த எட்டு கூட எப்படி போனது என்று கூட்டமைப்பு சிந்திக்கணும் இனிமேல் ஒன்றை கூட இழக்க கூடாது :icon_idea: 


1236908_582707418457199_99269215_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருடைய உதயன்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.