Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்

Featured Replies

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

130829123357_mars_304x171_nasa_nocredit.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

நீண்ட தூரம்
130829065007_mars_304x171_jplnasa_nocred

செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி

இதற்கு முன்பு இந்தியா 2008 ஆம் ஆண்டு சந்திர மண்டலத்தை ஆராய சந்திரயானை வெற்றிகரமாக ஏவியது. பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருக்கும் கோளான செவ்வாயோ இதை விட ஆயிரம் மடங்கு தூரத்தில் அதாவது 400 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஒவ்வொறு 26 மாத கால இடைவெளியிலும் செவ்வாய் பூமிக்கு சற்றே அருகில் அதாவது 56 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வருகிறது. அப்படி செவ்வாய் கிரகம் அடுத்து நெருங்கி வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இந்த கோளை இந்தியா ஏவுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட பிறகு, 1350 கிலோ எடையுள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகதையடைய 10 மாதங்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில் நுட்பத் திறன் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.

செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்த பல சோதனைகளைச் செய்ய 5 உபகரணங்களை மங்கள்யான் ஏந்திச் செல்கிறது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும்.

சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து கருவிகளும் இந்தியாவுடையாதாகவே இருக்கும். அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய் கிரகத்துக்கு கோளை அனுப்பியுள்ளன. சமீப ஆண்டுகளில் விண்வெளியில் வேகமாக முன்னேறிவரும சீனா 2011 இல் செவ்வாய் கிரகத்தை ஆராய கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

http://www.bbc.co.uk/tamil/science/2013/09/130922_indianmarsmission.shtml

அப்பிடியே சோனியா குடும்பத்தையும் அதற்குள் இழுத்து போட்டு அனுப்பிவிடுங்கப்பா ...............மன்மோகன் சிங்கை அனுப்புவது உங்க இஷ்டம்  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரயான் என்று முன்பு அனுப்பினார்களே.. அது சந்திரனில் போய் இறங்கினதா.. அல்லது அப்பிடியே போய்ட்டுதா எண்டு கேட்டுச் சொல்லுங்கப்பா.. :D

  • தொடங்கியவர்

.மன்மோகன் சிங்கை அனுப்புவது உங்க இஷ்டம்  :lol:  :D

 

ஹிஹிஹி  நோ நோ நான் போக மாட்டேன் ஏன் எண்டா சோனியாஜி  சொல்லிச்சு ராஜீவும் மேலே அப்புறம் நீயும் போய்ட்டா நான் என்ன பண்ணுவேன் எண்டு?ஹிஹிஹி 

(தப்பா நினைக்காதிங்க பிரதமருக்கு என்ன பண்ணுறது )

funny-manmohan-singh-as-halwai.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரயான் என்று முன்பு அனுப்பினார்களே.. அது சந்திரனில் போய் இறங்கினதா.. அல்லது அப்பிடியே போய்ட்டுதா எண்டு கேட்டுச் சொல்லுங்கப்பா.. :D

 

M154813223RE_extra.png

 

சந்திராயன் நாமதேய சந்திர வாகன சுப மங்கள சமாதியாய நமஹா! :icon_idea:

சந்திரயான் என்று முன்பு அனுப்பினார்களே.. அது சந்திரனில் போய் இறங்கினதா.. அல்லது அப்பிடியே போய்ட்டுதா எண்டு கேட்டுச் சொல்லுங்கப்பா.. :D

 

சந்திராயன் சந்திரனில் இறங்கவில்லை...அது சந்திரனை சுற்ற அனுப்பிய செயற்கைகோள்...அதனின் எதிர்பார்த்த காலத்துக்கு முதலே செயலிழந்து விட்டது..ஆனால்...சந்திரனில் நீர்த்துகள்கள் இருக்கின்றது என்று சந்திராயன் தான் முதன் முதலில் கண்டுபிடித்தது... அதன் பின் தான் NASA வும் நீர் இருப்பதாக கூறியது...

 

நான் நினைக்கிறேன் இந்தியாவிடமும் ருஷ்சியாவிடமும் சரியான தொலைதொடர்பு (செயற்கை கோளுடன்) தொழிழ்நுட்பம் இல்லை....ஆகவே இது இந்தியாவுக்கு தேவையில்லாத வேலை...

 

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.