Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன், தயாசிறி, அநுராத முதலமைச்சர்கள் ஆகிறார்கள்!

Featured Replies

Vigneswaran_260.jpgவடமேல் சபையின் முதமைச்சராக தயாசிறி ஜயசேகரவும், மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக அந்த மாகாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகன் அநுராத ஜயரத்னவையும் நியமிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகன் அநுராத ஜயரத்ன 1,07,644 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடம் முன்னாள் முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்கவிற்கே கிடைத்துள்ளதுடன் அவரது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 70,171 ஆகும்.

முதலமைச்சர் பதவி தீர்மானிக்கப்படுவது விருப்பு வாக்குகளால் மாத்திரமல்ல, வேறு சில விடயங்களும் கருத்திற் கொண்டே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலில் தெரிவித்திருந்தது. முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது அதிகமான விருப்பு வாக்குகளை எடுக்கும் நபருக்கே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றின் போது கூறியிருந்தார்.

'உங்கள் வாங்கே, எனது வாக்கு' எனக் கூறியே அதனை குறிப்பிட்டிருந்தார்.

என்றபோதிலும், தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டுள்ள அதிகூடிய விருப்பு வாக்குகளை கவனத்திற் கொண்டு வடமேல் மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவி அவருக்கு நிச்சயமாகவே வழங்கப்படுமெனவும், மத்திய மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பிய பின்னர் தீர்மானிக்கப்படுமென அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்திற்கான முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்றத்தின் நீதியரசரான சி.வி. விக்னேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தயாசிறி ஜயசேகர தெற்கின் அரசியல் 'நட்சத்திரமாக' முடிசூடிக்கொள்வது தயாசிறி ஜயசேகரவும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல்வாதியாக திகழ்ந்த விக்னேஷ்வரனும் ஆகும்.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.