Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் ஆணையை மதித்து அதிகாரங்களைப் பகிர வேண்டும் – சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R_Sampanthan.jpg

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் ஜனநாயக ரீதியாக அளித்துள்ள ஏகோபித்த தீர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். 

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர். யாழ்ப்பாணத்தில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையின் ஆட்சியை நடத்துவதற்கு, எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று, நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

வடக்கில் தற்போது இராணுவத் தலையீடுகள் காணப்படுகின்றன. 

சிறிலங்கா இராணுவம் தனக்குரிய பணிகளுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. 

இதுதொடர்ந்து இடம்பெற நாங்கள் இடமளிக்கமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த தீர்ப்பை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். 

தமிழ்மக்களின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

எம்மை தெரிவு செய்த மக்களின் உணர்வுகளை மதித்து, அதனை உணர்ந்து செயற்படுவது என்ற உறுதிப்பாட்டில் நாம் அனைவரும் இருக்கிறோம். 

மாகாணசபையைப் பொறுப்பேற்கும் போது, அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாக, முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிவிப்பார். 

13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 

13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய, தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. 

தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற சிந்தனை சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒருபோதும் இருக்கக்கூடாது. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்படமாட்டோம். 

வடக்கு மாகாணத் தமிழ்மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் அரசியல் வரலாற்றில், முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றியை ஈட்டியுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் 30 ஆசனங்களையும், யாழ்.மாவட்டத்தில் ஏறத்தாழ 90 வீதமான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவாகவுள்ளது. 

ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டுக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையோடும், கௌரவமாகவும், போதிய சுயாட்சி அதிகாரங்களுடன், வாழ்வதன் மூலம், தமிழ்மக்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை அடைய விரும்புகின்றார்கள். 

இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். 

இந்தத் தேர்தலின் முடிவுகள், அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. 

இந்தத் தேர்தலில் நாம் சந்திக்க நேர்ந்த பலவிதமான துன்புறுத்தல்களின் மத்தியிலும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். 

எமது மக்கள் எம்மை முழுமையாக ஆதரிப்பதற்காக எங்கள் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, அவர்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் உறுதி கூறவிரும்புகிறோம். 

இந்தியா எமது தாய் நாடு. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா கடந்தகாலத்தில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டது. 

இடைக்காலத்தில் துரதிஸ்டவசமாக கைவிடப்பட்ட நிலைமை காணப்பட்டது. போர் முடிந்த பின்னர், மீண்டும் எமது பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

அண்மையில் கூட, சிறிலங்கா அரசாங்கம் கொண்டு வரவிருந்த ஒரு சட்டமூலம், இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்தே கைவிடப்பட்டது. 

இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகள் மதிக்கின்றன. இந்தியாவின் கருத்துக்கு எதிராக, எமது பிரச்சினையில் ஏனைய நாடுகள் செயற்படமாட்டாது. 

தமிழ்மக்களின் விடயத்தில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்படுகிறது. 

தமிழகத்தில் உள்ள உறவுகள் எமது விடயத்தில் அக்கறையுடன் செற்படுகின்றனர். 

தமிழ்நாடு மட்டுமன்றி ஏனைய மாநிலங்களில் வாழும் மக்களும் கூட, எமது விடயத்தில் அக்கறையாக இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தலைமைகள் அனைத்தும் ஒரே கருத்துடன் செயற்பட்டால், கூடிய நன்மைகளை நாம் பெறமுடியும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130923109116

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.