Jump to content

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவு


ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம்   

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி.

செய்திகள் பற்றிய ஆர்வம் ஊரில் இருக்கும் பொது போர் களத்தில் செய்தி அறிய அதிகாலையில் பத்திரிக்கை விற்பனை நிலையத்துக்கு ஓடி அடி பட்டு செய்தி தாழ்களை வாங்கி வாசித்ததில் இருந்து ..... பழகிய பழக்கம். அது இங்கும் தொடர்கிறது. கனடாவில் , உலகில் நாளாந்தம் நடக்கும் அரசியல், சமூக, சுகாதார, பொருளாதர பிரச்சனைகள் பற்றிய செய்திகளை வசிப்பது வழாக்கம். காலை வேலைக்கு சென்று/ வீட்டில் கணணியை திறந்தால், மின்னஞ்சலை பார்க்கிறேனோ இல்லையோ, செய்திகளை வசிக்க தவறுவதில்லை. முக்கியமானவற்றை முழுமையாக, சிலவற்றை மேலோட்டமாக அதன் சாராம்சத்தை அறிய. கூகுளின் செய்தி சேவை பல செய்திகளையும் தொகுத்து தருவதால், அங்கு தான் நாளந்த செய்திகளை அறிய போவது.

 

 

அதே போல தொலைக்காட்சி நிகழ்சிகளில், நேரம் கிடைக்கும் போது பலவேறுபட்ட நிகழ்ச்சிகளையும் பார்ப்பது உண்டு டேவிட் சுசுகியின் The nature of things, Dr OZ, Dr.Phill, Ellen, Anderson chopper, history Chanel, National Geographic என பல தொலைகாட்சி நிலைய ஒளிபரப்புகளையும் பார்ப்பது உண்டு.  

 

அண்மையில் ஒரு நாள் வேலையால் வந்து தொலைகட்சியை தட்டி கொண்டு போன பொது Dr.Phill show (நான் Dr.Phill இன் இரசிகன் அல்ல, அவர் சொல்வதை வேத வாக்கு என நம்புபனும் அல்ல) இல் ஒரு பாடசாலையின் பதின்ம வயது American foot ball நட்சத்திர விளையாட்டு வீரனும், அவனது நண்பர்களும் ஒரு பதின்ம வயது (<18) பெண்ணை  அழைத்து மது கொடுத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக சொல்லப்படுவது பற்றிய நிகழ்ச்சி. அதில் அந்த விளையாட்டு வீரன் தான் 18 - 20 Vodka shot குடித்தகவும், பெண்ணுக்கு 3-4 shot கொடுத்ததாகவும் , அதன் பின் அந்த பெண் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தது ஆகவும் கூறினார். தங்கள் வன்புணர்வு செய்யவில்லை என்றும் சொன்னார். அந்த பெண் குடித்து விட்டு தன்னால்  சரியாக கிரகிக்க முடியவில்லை, ஆனால் தான் உடலுறவு கொள்ள கூப்பிடவில்லை எனவும் கூறினார். அத்துடன் பாலியல் வல்லுறவை இந்த பையன்கள் படம் எடுத்து பாடசாலையில் கட்டியதால், தான் மன நல பதிப்புக்கு உள்ளனதாகவும் கூறினார்.

 

 

இடையின் ஒரு குறிப்பை சொல்ல வேண்டும் ....... ஒருவர் 3-4 Vodka shot (நீர்/ சோட கலக்காத ) குடித்தால் அவர் சட்டரிதியில் குடி போதையில் இருக்கிறர் என்று அர்த்தம். அவரால் நிதானமாக முடிவு எடுக்க முடியாது.

 

அதன் அந்த பையனுடைய பெற்றோர் , தந்தை ஒரு போலிஸ் அதிகாரி, தமது மகன் சொலவது முற்றும் சரி (குறிப்பு அவரது மகன் 18 -20 Vodka shot குடித்தாக ஒத்து கொள்கிறார்) ஆனால் 3-4 Vodka shot குடித்த பெண் பொய் சொல்கிறார் என்றும், எதற்காக அந்த பெண் தனது மகனை பாலியல் பலாத்காரம் செய்து விடார் என சொல்ல முடியாது என்பதாக இருந்தது தாய் தந்தையின் கருத்து.

 

அதே போல கனடாவில் Rehtaeh Parsons ஒரு மாணவி சக மாணவர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதால், அதன் தாக்கம் அந்த மாணவர்கள் வல்லுறவு  படங்களை பாடசாலையில் கட்டி, அதன் மூலம் இணையத்தளங்களில் நடந்த தொடர் bulling காரணமாக, சம்பவம் நடந்து 3 வருடங்களின் பின் தற்கொலை செய்து கொண்டார்.

 

http://www.huffingtonpost.ca/2013/04/09/rehtaeh-parsons-suicide-bullying-rape_n_3044885.html

ஆனால் அதை செய்த மாணவர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரின் இறப்பின் பின், ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இருவர் இப்போது கைது செய்யப்படுள்ளனர்.

 

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு பலரும் அறிந்தது. அடிக்கடி செய்திகளில் வருவது.

 

 

 

இந்த பின்னணியில் ஆண்கள் மீதும் பாலியல் வல்லுறவு நடக்கலாம் என்பது தெரியும். ஆனால் அது பெருமளவில் நடப்பதில்லை, அல்லது நடந்தாலும் செய்திய வருவதில்லை, அல்லது அந்த பாதிப்புக்கு உட்படுபவர்கள் அதை பற்றி சொல்ல முன்வருவதில்லை.

 

 

இங்கு யாழ் களத்தில் பல மாதங்களுக்கு முன்/ சில வருடங்கள் முன் ஆண் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்படாதாக வந்த செய்தி இணைக்கப்பட்ட போது ஒரு சிலர், அந்த ஆண் அதிஸ்ட சாலி என்றும், பெண்ணுடன் உறவு கிடைத்து பெரிய விடயம் போலவும், அதை என்னத்துக்கு வெளியில்/போலிசுக்கு சொல்ல வேண்டும் என்ற சாரப்படவும் எழுதி இருந்தனர். அதன் மூலம் எனக்கு உணர கூடியதாக இருந்தது, இவர்கள் அந்த ஆணின் தனியுரிமை மீறப்பட்டது பற்றியோ, அல்லது அந்த சம்பவம் அந்த ஆணின் உளவியல், மன நலனை எவ்வளவு பதித்து இருக்கும் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் இல்லது கருத்து சொல்கிறார்கள் என தோன்றியது. அத்துடன் ஏதோ எல்லா ஆண்களும் எப்ப ஒரு பெண் தன்னுடன் உடலுறவு கொள்ளுவாள் என காய்ஞ்சு போய் காத்திருகிறார்கள் என்று எண்ணுகிறார்கள் என பட்டது.

ஆனால் அதை பற்றி அப்போது எழுத நேரமில்லை/ பேசாப்பொருள் பற்றி எழுதி மன உழைச்சலுக்கு ஆளாகும் விருப்பம் இல்லாத காரணத்தால் தவிர்த்து இருந்தேன்.

 

அண்மையில் கனடாவில் ரொரண்டோ நகரின் ஒரு 19 வயது ஆண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட செய்தி வந்த போது அதன் கீழ் உள்ள மக்களின் கருத்துகளில் பலவும், அந்த ஆண் பல பெண்களின் உடலுறவு கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்ற சாரப்படவும், இதை வெளியில் சொல்லி இருக்கபடாது என்ற தொனியிலும் இருந்தது. அதை பார்த்த பொது இங்கு யாழில் கருத்து எழுதியவர்களின் நினைவு தான் வந்தது.

 

சில தினங்களின் முன்னர், முகப்புத்தகத்தில் நான் இந்த பதிவில் இணைத்த படங்களை கொண்ட இணைப்பை நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். அதை பார்த்த பொது மேலே எழுதிய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. எனவே சரி பாலியல் வல்லுறவுக்கு உள்ளன ஆண்களை பற்றி யாழில் உள்ளவர்களின் மன நிலை/ எண்ணம் எப்படி இருக்கும், அதை எப்படி அணுகுவார்கள் என பார்க்கவே இந்த வாக்கெடுப்பு பதிவு தொடங்கப்பட்டது.

 

 


 

 

இதனால் பெண்களால்... பாலியல் வன்முறைக்கு இலக்கான ஆண்களுக்கு அபகீர்த்தின்னு எவரும் சுட்டிக்காட்டல்ல. அப்புறம்.. உங்கள் கேள்வி மட்டும்.. பெண்களுக்கு அபகீர்த்தியா அமைஞ்சிட்டுதாமோ..?????! என்பதுதான் எங்கள் வினவல்..!

 

 

 

 

அதில் இடப்பட்ட இரண்டு பதில்கள், (1. பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய், 2 மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்) யாழிலும், வெளியில் உள்ள மற்றவர்களதும் கருத்துக்கள் அப்படி இருக்கிறன என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், இப்படி பதில் கொடுப்பார்கள் என்று தெரிந்தே கொடுக்கப்பட்ட பதில்கள். மற்றும்படி பாலியல் வல்லுறவுக்கு உள்ளன ஆண்களை கொச்சைபடுத்தும் நோக்கோடு கொடுக்கப்பட்டாவை அல்ல.

 

 

 

எதற்காக இந்த பதில்கள் கொடுக்கபட்டது, இதே கேள்வியை எதற்காக பெண்களிடமும் கேட்கமுடியாது. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு என்ற கேள்வியை கேட்டபவர்களுக்கு இந்த விளக்கம்

 

 

 

 

 

எனது பதில்கள் என்றால்,

முதல் கெள்வி:  ஆம்.

 

இரண்டாம் முன்றாம் கேள்விகள் ..... வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

நெடுக்காலபோவன் மேலே பல இடங்களில் சொன்னதை போன்று,

ஆணாக  இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரின் அனுமதி இன்றி, இன்னுமொருவர் பாலியல் உறவு கொள்ள முற்படுவது மிக தவறனது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் ஆணுக்கும், பெண்ணை போலவே, உள நல பதிப்பு, அதனால் வாழ்கையில் சரியாக கவனம் செலுத்த முடியாமை என தொடர் பிரச்சனைகள் ஏற்பட சத்தியம் அதிகம்.

 

எமது தமிழ் சமூகம் , மட்டுமல்ல, மேற்கத்தைய சமூகம் கூட ஆணை மையமாக கொண்டு கட்டி எழுப்பபட்டது. அதில், ஆண் தைரியவானக, பணம் திரடுபவனாக, குடும்பத்தை கப்பவனாக, பல்வேறு விளையாடுகளில் அக்கறை உள்ளவனாக, தந்தை இல்லாத போது இளைய சகோதரங்களை கவனிபவனாக ......... இப்படி பல்வேறு சமூக பொறுப்புகள் அவன் அறிந்தோ , அறியாமலோ விதைக்கபடுகிறன. ஒரு அடிபட்டலோ, காயம் பட்டாலோ, ஒரு சிறு பையன் அழுதால், நீ ஒரு ஆண் இதற்காக அழக்கூடது என சொல்லி வளர்க்கப்படுகிறான். இவ்வாறு காவலனாக பலசாலியாக, கருத்தியல் சிந்தனை ஊட்டப்பட்டு வளர்க்கபடும் ஒரு ஆண் இன்னுமொரு ஆணால், பெண்ணால் அல்லது ஆண் குழு/ பெண் குழு வால் பாலியல் வல்லுறவுக்கு உட்படும் பொது, தனது உடலின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது போவது, தன்னுடைய உடல் மற்றவரால் அத்துமீறப்பட்டது, என்பது பெரும் மன உழைச்சலை, உளவியல் பதிப்புகளை கொண்டுவர கூடியது.

 

அத்துடன் இதை வெளியில் சொல்வதால் சமூகம் தன்னை பலமற்றவன், அல்லது  பாலியல் வல்லுறவுக்கு உட்படுபவர்களை கேலி செய்து, ஒதுக்கி வைக்கும் சமூகம் தன்னையும் அவ்வாறு செய்யும் என்ற பயம், தனக்கு நடந்ததற்கு தானே கரணம் என  நினைக்க தலைப்படுதல், ....................................................

 

இப்படி பல காரணங்களால், ஒரு ஆண் வெளியில் சொல்ல தயக்கம் கட்டலாம், அதே நேரம் நடந்ததை நினைத்து ஏற்கனவெ சொன்னது போல உள வள பதிப்புக்கு உட்படலாம். இதை கவனத்தில் எடுத்து தகுந்த சிகிச்சை, counseling போறவற்றை தகுந்த நேரத்தில் எடுக்காவிட்டால், அதன் பதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது.

 

ஆணை பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாது என்பது தவறான எண்ணக்கரு என்பதையும், ஏற்கனவே சொல்லியாகி விட்டது.

 

இறுதியாக இந்த பதிவு ஆண்களும் பாலியல் தொல்லைகளுக்கு/வல்லுறவுக்கு உள்ளாகலாம், அது நகைச்சுவையான விடையம் அல்ல என்பதை வாசிக்கும் ஒரு சிலருக்காவது புரிய வைத்தால் சரி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய இராணுவம் இருந்த நேரம் வட  மாகான சபை தேர்தல் கண்காணிப்பிற்காக எமது பள்ளியின் அருகே இந்திய இராணுவம் வந்து குடியிருந்தது. அதில் ஒரு பகுதியில் பெண்கள் இராணுவமும் இருந்தது. பெண்கள் இராணுவத்தை ஆனையிறவில் மட்டுமே நான் பார்த்திருந்தேன். எமக்கு கிட்டவே வந்து இருந்தது கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் இருந்த பகுதியால் போய் போய் வந்தேன். என்னை பிடித்து பாலியல் வல்லுறவு செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்கள்.
 
இந்த திரியில் ஒரு அனுபவ பகிர்வை எழுதமுடியாத வருத்தம் இப்போது வந்து போகிறது. 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இடையில் பூந்து குழப்புவதுக்கு மன்னிக்கவும்..

 

ஆணும் பெண்ணும் சமமில்லை.. சமம் என்பதே இங்கு பொருத்தமில்லாத வார்த்தை.

 இருவரும் வேறு வேறு  சிந்திப்புதிறன் உடய பிராணிகள்..

 

எதிர்பால் பாலியல் வன்முறை பெண்களை மட்டும்தான் பாதிக்கும்..

ஒத்தபால் பாலியல் வன்முறை ஆண்களை மட்டும்தான் பாதிக்கும்..

 

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.