Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20 வருஷமாச்சு; இருப்பதோ மூன்று பேர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த, 1993, அக்டோபர், 2ம் தேதி தான், ம.தி.மு.க., என்ற கட்சி உதயமாவதற்கு, பிள்ளையார் சுழி போடப்பட்ட நாள். அன்றைய நாளில் தான், அறிவாலயத்தில், நிருபர்களை சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'விடுதலைப் புலிகளின் கொலை திட்டம் குறித்து, மத்திய அரசு கொடுத்த தகவல்' பற்றி, பரபரப்பு பேட்டி அளித்தார். அதை கேட்டு, கோபம் அடைந்த வைகோ, அடையாறில் உள்ள ஒரு வீட்டில், ஆதரவாளர்களை கூட்டினார். எல்.கணேசன், கோவை கண்ணப்பன், பொன் முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ், நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, கணேசமூர்த்தி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், டி.ஏ.கே.லக்குமணன், தங்கவேலு, திருப்பூர் துரைசாமி, மலர்மன்னன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில், 'தனி வாழவா? சக வாழ்வா?' என்ற விவாதம், தீவிரமாக நடந்தது. நீண்ட பேச்சுக்கு பின், தனி வாழ்வு தான் என்று முடிவு எடுக்கப்பட்டது. 'தைரியமாக இருங்கள்; தனிக் கட்சி துவங்குங்கள்; நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்' என்று ஒருமித்த குரலில், எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர். அதன் விளைவாக, ம.தி.மு.க., உருவானது.

இன்றைக்கு, 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன. கட்சி துவங்க ஆதரவாக இருந்தவர்களில், கணேசமூர்த்தி, திருப்பூர் துரைசாமி, மலர்மன்னன் ஆகிய மூவர் மட்டுமே, தற்போதும் ம.தி.மு.க.,வில் தொடர்கின்றனர். மற்றவர் எல்லாரும் மனக்குறையுடன் வெளியேறினர்; சிலர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,விலும், மற்றவர்கள் மீண்டும் தி.மு.க.,விலும் இணைந்து விட்டனர். என்.டி.ஆர்., - எம்.ஜி.ஆர்., - மம்தா போன்ற தலைவர்கள் எல்லாம், தனிக் கட்சி துவங்கிய கொஞ்ச காலத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிட்டனர்; ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும் ம.தி.மு.க.,வால் (அதிகபட்சமாக, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே பெற முடிந்துள்ளது) ஆளும் கட்சிக்கு அடுத்த வரிசையில் கூட இடம் கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்?

இந்த கேள்விக்கு, ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேறியவர்கள் சொல்லும் பதில்: கடந்த, 1996 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., முதன் முதலாக களம் இறங்கியது; எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டது. மூன்றில் மட்டுமே டெபாசிட் பெற முடிந்தது. அப்போதே, ம.தி.மு.க.,வின் பலம் என்ன என்பது தெரிந்துவிட்டது. ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவை, அப்படியே தக்க வைக்க முடியாமல் போனதற்கு வைகோவே பொறுப்பு. இடையில், குறுகிய அரசியல் லாபத்துக்காக, அ.தி.மு.க., தி.மு.க., என்று அணி மாறியதாலும், தி.மு.க.,விடம் கூட்டு சேர பேசி முடிவெடுத்து விட்டு, கடைசி நேரத்தில், போயஸ் கார்டன் போய் நின்றது போன்ற அரசியல் அதிரடிகளாலும், ம.தி.மு.க., தன் செல்வாக்கை இழந்து நிற்கிறது.

அதை அடியோடு மறுக்கும் ம.தி.மு.க., தலைமை வட்டாரம் சொல்லும் பதில்: மற்ற தலைவர்கள் எப்படியோ... வைகோ, கொள்கை அரசியல் வழி நடப்பவர். எந்த காரணத்துக்காகவும் கொள்கையை விட்டு கொடுக்க மறுப்பவர். உடனிருந்தவர் விலகிச் செல்வதும், மீண்டும் வந்து இணைவதும் அரசியலில் சுய லாபத்தை நோக்கி நடப்பவர் செய்யும் காரியம். அதை கொண்டு கட்சியை எடை போட முடியாது; கூடாது. கூட்டணி விவகாரத்தில், இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து எப்படி எழுந்து நிற்கிறோம் என்பதையும் பாருங்கள். சமீப கால சரிவுகளை எல்லாம் சரிக்கட்டும் விதமாக, இனிவரும் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். அதற்கு வைகோவின் கடுமையான உழைப்பும், இன்றைய இளைஞர்களின் ஆதரவும் எங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Dinamalar

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் பிழைக்க தெரியாதா மனிதர் வைகோ எத்தனயோ சந்தர்ப்பங்கள் பதவிகள் வந்தும் தனது முன்கோபத்தால் அவற்றை இழந்து இன்று கட்சியே காணாமல் போய் விடும் நிலைமை

இனிமேலாவது ஒரு MP ஆகி நல்ல ஒரு வெயிட்டான அமைச்சர் ஆகி கட்சியை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கும் தலிவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் இல்லையேல் வெகு சீக்கிரம் கட்சியில் இருக்கும் ஒரு சில தலைவர்களும் காணமல் போய் விடுவார்கள் வெறுமனே அரசியளிக் தூய்மை என்றிட்டு இருந்தா மட்டும் தமிழ் நாட்டில் கட்சியை வளர்க முடியா

சுண்டல் இது எங்களுக்கும் பொருந்துமா?(அவர் எத்தினை பேருடன் இருந்தார் என்பது வரலாறு அல்ல கடைசிவரை கொள்கையுடன் இருந்தார் என்பது தான் வரலாறு) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீது வைக்கும் அதே குற்ற சாட்டு தான் இதுவும். மாகாண சபைய இந்தியாவிடம் இருந்து பணம் பெற்று ஆண்டிருக்கலாம், என்பது போல் இதுவும்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் அவர் இன்னும் தனது நேர்மையை கைவிடவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுதுகிறது..

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வைகோ விற்கு கொள்கை தான் முக்கியம் என்றால் அதை விற்று தி மு க வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார் மாதக்கணக்கில் பொடா சட்டத்தின் ஊடக சிறையிலிட்ட ஜெயலலிதாவை அன்பு சகோதரி என்று காலில் விழுந்திருக்க மாட்டார் தமிழக அரசியலில் கொள்கையாவது மண்ணாங்கட்டி ஆவது .....அரசியலுக்கு வந்தாலே பதவி பணம் இரண்டும் வேண்டும் இல்லையா கட்சியை கலைத்து விட்டு வீரமணி மாதிரியோ இல்லை நெடுமாறன் மாதிரியோ அரசியல் இயக்கத்தை நடத்தட்டுமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றது நான் அறிந்த வரை தினமலர் ஆசரியர் பீடம் வைகோவை என்றுமே உரிமையுடன் தான் விமர்சிக்கும் கடும்ம்தொனியில் ம தி மு க வை விமர்சித்தது குறைவு மற்றை ஏடுகளை விடவும் தனது செய்தித்தாளில் ம தி மு க வின் செய்திகளை முக்கியப்படுத்தி பிரசுரிச்சு இருக்கு மற்றைய இதழ்கள் இருட்டடிப்பு செய்யும் போது

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. நான் குறிப்பிட்டது நேர்மையை.. அதாவது ஒரு கூட்டணியில் இணைந்து மந்திரியாகி எந்த ஊழல் புகாரிலும் சிக்காமல் இருக்கும் தன்மையை.. அவரது கூட்டணி அமைக்கும் கொள்கைகளில் எனக்கும் ஆழ்ந்த விமர்சனங்கள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சியார் மீது குற்றச்சாட்டு வந்தது பிஜேபி அமைச்சரவையில்

பதவி விலக செஞ்சி ராமச்சந்திரனுக்கு கடும் நெருக்கடி

சென்னை:

ஊழல் புகாரில் சிக்கினாலும் பதவி விலக மறுத்துவிட்ட நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் இன்றுடெல்லி நார்த் பிளாக்கில் தனது அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றி வருகிறார்.

தனது கேபினட் அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கையும் அவர் இன்று சந்தித்துப் பேசினார். ஆனாலும் அவரை உடனேபதவி விலகுமாறு ஜஸ்வந்த் சிங்கும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அவராகவேபதவி விலக வேண்டும் என பா.ஜ.கவும் கோரிக்கை விடுத்துள்ளன.

வைகோ கோபம்:

செஞ்சி ராமச்சந்திரன் மீது கடும் கோபத்தில் வைகோ இருப்பதாகத் தெரிகிறது. இன்று தனது கட்சியின் சில மாவட்டத்தலைவர்களை சிறைக்கு வரவழைத்த வைகோ தீவிர ஆலோசனை நடத்தினார். பதவி விலகி விடுமாறு அவர்கள் மூலமாகவேசெஞ்சி ராமச்சந்திரனுக்கு வைகோ தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு மதிமுக அமைச்சரான கண்ணப்பன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இதனால் டெல்லி வட்டாரத்தில் நடப்பதைதனது எம்.பியான சி. கிருஷ்ணன் மூலமாகத் தான் வைகோ அறிந்து வருகிறார். (மதிமுகவுக்கு மொத்தம் வைகோவையும் சேர்த்துமொத்தம் 4 எம்.பிக்கள் உள்ளனர்). அமைச்சரவையில் இருந்து ராமசந்திரன் நீக்கப்பட்டால் அந்த இடம் சி.கிருஷ்ணனுக்குக்கிடைக்க நிறையவே வாய்ப்புள்ளது.

பிரதமரும் கோபம்:

சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டதால் செஞ்சி ராமச்சந்திரனை பதவியில் வைத்திருக்கமுடியாது என வாஜ்பாய் கூறிவிட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றுஅவர் விலகாவிட்டால் நாளை அமைச்சரவை மாற்றத்தின்போது தூக்கிவிட வாஜ்பாய் முடிவுசெய்துள்ளார்.

இதற்கிடையே செஞ்சி ராமச்சந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது. பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், ஊழல் புகாரில்சிக்கிவிட்டவர் அமைச்சரவையில் தொடர்வது சாத்தியமில்லை. பதவி விலகுவது குறித்து செஞ்சிராமச்சந்திரன் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

http://tamil.oneindia.in/news/2003/05/23/vaiko.html

Old news :D

  • கருத்துக்கள உறவுகள்

சார். நான் வைகோ என்கிற தனிமனிதனைப் பற்றிக் குறிப்பிட்டால் நீங்கள் கட்சிக்காரரை சொலலுறீங்க.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அம்மாட்ட பெட்டி வாங்கினதாகவும் அதை திருப்பி கேட்டு கொடுக்கததால பொடா பாஞ்சதாகவும் அரசல் புரசலா ஒரு கதை அடிபட்டது come on அண்ணா பெட்டி வாங்காமல் கொடுக்காமல் இந்தியால அரசியல் பண்ண முடியுமா? சில விஷயங்களா கண்டும் காணாத மாதிரி நாங்க இருந்திடனும் பாஸ் :D

பட் அம்மா கொடுத்த பெட்டி தேர்தல் செலவுக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தேர்தல் நிதியாக இருக்கும்.. :D அது கட்சி விவகாரங்களில் சகஜம்தான்.. ::wub: ஆனால் அந்த நிதியை ஆட்டையைப் போட்டிருந்தார் என்றால் ஸ்பெக்ட்ரம் தலீவர் பிரித்து மேய்ந்திருப்பாரே.. ஆகவே நம்புவதற்கில்லை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அம்மா கொடுத்திட்டு திருப்ப கேட்டது தப்பு தான் அம்மாட்ட இல்லாததா :D

கொள்கை என்பது எந்த கட்சியுடன் கூட்டனி என்று இல்லை. மக்கள் பனத்தை சுருட்டாமல் தனது இனம்,மக்களின் நலன்களை அடகு வைக்காமையே அது.நாம் சொல்வது வைகோ என்ற மனிதரை பற்றி . 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரைக் காக்கும் கடமையில் ஐ.நா. தவறியது 

பான் கி மூன் ஒப்புதல் வாக்குமூலம் 

ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை

வைகோ கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது. ஆனால், பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா. வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன. 

இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார். 

‘யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்’ என்று கூறி இருக்கிறார். 

இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்லÞ பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இனக்கொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள இராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; அவர்கள் கண் எதிரேயே ஈழத்தமிழர்கள் குண்டுவீச்சுக்குப் பலியானதையும், உணவு இன்றிப் பட்டினியால் மடிந்ததையும், மருத்துவ சிகிச்சை இன்றியே பலர் சாக நேர்ந்ததையும் கண்டபின்னரும், மனசாட்சியைப் புதைத்துவிட்டுக் கடமை தவறினர் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சிங்கள அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து, இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி, தமிழர்கள் மரண ஓலம் எழுப்பிக் கொண்டு இருந்த இடங்களில் இருந்து ஐ.நா. அ வெளியேறிய கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. 

பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருÞமன் தiமையிலான மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. 

ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அதுகுறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், வடக்கு மாகாண சபைத் தேர்தலை சிங்கள அரசு நடத்தியது. கொலைகார ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, துன்பத்தில் உழலும் ஈழத்தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்குகளைத் தந்து வெற்றிகளைத் தந்தனர். என்றாவது ஒருநாள் தங்களுக்கு நீதியும் விடுதலையும் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு உள்ள தமிழ் மக்கள், சிங்கள அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே, இந்தத் தீர்ப்பைத் தந்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும்.கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார். 

சிரியாவில், அதிபர் பசார் அல் அÞஸத்தின் இராணுவம் டமாÞகசுக்கு அருகில் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியது என்று, ஐ.நா. மன்றத்தில் பலத்த விவாதம்; அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்Þ நாடுகள் சிரியா மீது போர் தொடுப்போம் என்று மிரட்டல்; இரசாயனக் குண்டுகளை ஒப்படைத்து விடுவேன் என்று சிரியா அதிபர் பசார் அறிவிப்பு என்பதையெல்லாம் எண்ணுகையில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு, உலக நாடுகளின் மனசாட்சி, என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.

புதைக்கப்பட்ட உண்மைகள், ஒருநாள் வெளிவந்தே தீரும்; ஈழத்தமிழர்களுக்கு நீதியும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலும் மலர்வது காலத்தின் கட்டாயம் ஆகும் என்ற நம்பிக்கையோடு, உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், ஈழத்தமிழர் படுகொலை குறித்த நீதி விசாரணைக்கு, ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்; எந்தெந்த வழிகளில், இயலுமோ, அனைத்தையும் செய்வதற்கு தியாக தீபம் திலீபனின் 26 ஆவது நினைவுநாளாகிய இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

26.09.2013

1375874_419891314789340_1839336642_n.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.