Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்-
01 அக்டோபர் 2013


Notes- நிர்வாக கட்டம் தேவiயில்லை தரையில் பாயை விரித்து மாகாண சபைக் கூட்டத்தை மட்டும் நடத்திக்காட்டுங்கள்.

Notes- தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 60ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாப்படுத்த முடியும்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான காலம் தற்போது இல்லை என்பதை கொழும்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று விட்டது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் கற்பனை செய்து பேசுகின்ற விடங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முற்றாக இல்லாமல் செய்து விடுகின்றன. மறுபுறத்தே வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாகன பொமிற் எடுப்பதற்கும், அமைச்சுப் பதவிகளுக்கும் உறுப்பினர் என்பதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவதற்கும் முன்டியடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியமுடிகின்றது.

தரையில் இருந்து கூட்டத்தை நடத்தவும்

மக்கள் தேர்தலில் வாக்களித்த உணர்வுகள் வேறு- தமிழத்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞர்பனத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்பதற்காகவே மக்கள் வாக்களித்தனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபைக்கு அல்ல. அந்த சட்டத்தின் மூலம் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அதற்கான ஒரு நிர்வாக கட்டிடம் கூட வடக்கில் இல்லை. ஆகவே வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மாகாண சபைக் கூட்டத்தை தரையில் பாயை விரித்து விட்டு அதில் இருந்து கூட்டத்தை நடத்திக்காட்ட வேண்டும். அப்போதுதான் நியாயப்படுத்த முடியும். தென்பகுதி அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

மாகாண உறுப்பினர்களுக்கான வசதி வாய்ப்புகளை பெற்றுவதை விட உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் வருடாந்த நிதிகளை கொண்டு குறைந்த பட்சம் முதலில் மக்களின் அடிப்படைத் தேவகைளை செய்ய முடியும். அதற்குக்கூட இராணுவம் தடை விதிக்கலாம். ஆகவே வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ண உரிமையுடன் கூடிய ஒரு தீர்வுக்காக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவே தமிழத் தேசிய கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும். மாகாண சபையின் வெற்றிக்கொண்டாட்டங்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டாம்.

அடுத்த தேர்தலில் இது கிடைக்குமா?

மாகாண சபைக்காக அதிகாரங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறுத்தில் வடமாகாணத்தில் இனவிகிதாசாரத்தை குறைக்கும் செய்றபாடுகளில் இராணுவம் முனைப்பு காட்டுகின்றது. வன்னி பிரதேசத்தின் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் எல்லைக் கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் செய்யபடுகின்ற. காணிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து அபகரிக்கப்படுகின்றன. அந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ குடும்பங்களை குடியமர்த்த திட்டங்கள் வகுகப்பட்டுள்ளன. இது பிரதேச மக்களுக்கு தெரிந்த காரணத்தினால் மாகாண சபைத் தேர்தலில் தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். ஆபத்தில் இருந்து தப்புவதற்காக என்றும் கூறலாம்.

ஆகவே மக்கள் வாக்களிப்பில் காண்பித்த இந்த செய்தியை கருத்தில் எடுத்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். இல்லையேல் அடுத்த ஐந்து வருடங்களில் பின்னர் நடக்கப்போகும் வடமாகாண சபைத் தேர்தலில் குறைந்தது 10 சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அத்துடன் கூட்டமைப்பின் ஆசனங்களும் 20ஆக குறையும். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் 1948ஆம் ஆண்டு சிங்கள குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று திருகோணமலையில் இரண்;டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறையில் நான்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக கிழக்கில் ஏழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையில்

கிழக்கு மாகாண சபையிலும் சிங்கள உறுப்பினர்கள் இருக்கின்றனர். சிங்கள குடியேற்றங்கள் அங்கு இன்னமும் தொடர்ந்து நடைபெறுவதனால் அடுத்த தேர்தல்களில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபையிலும் ஏன் உள்ளுராட்சி சபைகளிலும் சிங்கள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். அதேபோன்ற ஒரு நிலைமைதான் வட மாகாணத்திற்கும் ஏற்படப்போகின்றது. கிழக்கு மாகாணம் இன்று தமிழர்களின் கைகளில் இல்லை. மட்டக்களப்பு மாவட்டம் ஒன்றுதான் தமிழ் மாவட்டமாக உள்ளது. திருகோணமலையும் அம்பாறை மாவட்டமும் பறிபோய்விட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இனவிகிதாசாரம் மாற்றப்படக்கூடிய அபாயகரமான நிலைமை உண்டு. மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள மாடு மேய்க்கும் உண்ணிச்சைக் கிராமத்தில் தற்போது பொலிஸ் கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஆகவே வடமாகாண சபைத் தேர்தல் வெற்றியை பாராட்டினாலும் அதனை தொடர்ந்து தக்க வைப்பதற்கான திட்டங்களை கூட்டமைப்பு முதலில் வகுக்க வேண்டும். அதற்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று கிழக்கு மாகாணத்தில் குடியேற்றங்கள் ஆரமப்பிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட முறை. திருகோணமலையில் சிங்கள நிர்வாகம் குறிப்பாக கல்வித்துறையில் எவ்வாறு உருவாக்கப்பட்டது போன்ற விபரங்களை பெற வேண்டும். அங்கிருந்த வெற்றுக்காணிகள் யாருடை அனுமதியுடன் அளக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன போன்ற விடயங்களை கூட்டமைப்பு அறிந்துகொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற குடியேற்றங்கள், புத்தர் சிலை வைக்கப்பட்டமை, தொல்பொருள் ஆராட்சி நிலையம் என்ற பெயரில் வெற்றுக் காணிகள் அரச உடமையாக்கப்பட்டமை போன்ற விபரங்கள் எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கலாம்

இந்த விபரங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணி பதிவு அலுவலங்களில் பெறலாம். அல்லது நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கேட்கலாம். ஆனாலும் சரியான பதிலை அரசாங்கம் வழங்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குரிய சிறப்புரிமையை பயன்படுத்தி இந்த விபரங்களை குறைந்த பட்சம் பெறமுடியும். மாகாண சபை உறுப்பினர்கள் கூட பெறலாம். ஆகவே வடமாகாணத்pல் இடம்பெறவுள்ள சிங்கள குடியேற்றங்களை தடுக்க அல்லது அறிந்துகொள்ள வேண்டும். குறைந்த பட்ச நவடிக்கைகளை கூட்டமைப்பு செய்யவில்லையானால் வடமாகாண சபை வெற்றியுடன் இருப்பதும் பறிபோகும் நிலை உருவாகலாம்.

மாவட்ட செயலக அதிகாரிகள்.

கிழக்கு மாகாண சபையில் உள்ள மாவட்ட செயலக அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். காணிபதிவு அதிகாரிகள்தான் கூடுதலாக மாற்றப்படுகின்றனர். தற்போது வடமாகாணத்திலும் அவ்வாறுதான் நடைபெறுகின்றது. திருகோணமலை செயலகத்தில் பணியாற்றிய தமிழ் காணிபதிவு அதிகாரி ஒருவர் 2006ஆம் ஆண்டு கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் இதுவரை அங்கு 12 அயிரம் ஏக்கர் காணிகள் இராணுவத்தின் பெயரில் எழுதப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமைதான். தமிழத்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மகாண சபை உறுப்பினர்கள் இந்த விபரங்களை பெற்றுக்கொண்டபோதும் அதனை எதிர்த்து செயற்படுத்த தலைமை உரிய இடம்கொடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் உள்ள காணிபதிவு அதிகாரி ஒருவர் மேலதிகமாக நியமிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகளின் விபரங்கள் பெறப்பட்டன. இது 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் இடம்டபெற்றது. முல்லைத்தீவு செயலகம் தற்போது செயற்பட்டாலும் காணிபதிவு விடயங்கள் அனுராதபுரம் செயலகத்தின் மூலமாகவே இடம்பெறுகின்றன. மன்னார் செயலகத்திலும் இதே நிலைமைதான்.

இதுவரை மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பிரதேசங்களில் இராணுவத்தால் பெறப்பட்ட காணிகளின் விபரங்கள் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்களிடம் உள்ளதா? இல்லை. ஆனால் அந்த மாவட்ட செயலகங்களில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகள் விபரங்களை வைத்துள்ளனர். அவர்கள் அதனை உத்தியோகபூர்வமாக வெளியிட முடியாது. அதனை செய்ய வேண்டியது தமிழ் அரசியல்வாதிகள்தான்.

உள்ளுராட்சி சபையை பலப்படுத்தல்

வடமாகாணத்தில் உள்ளுராட்சி சபையை பலப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழல் தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது. உள்ளுராட்சி சபையில் இருக்கும் அதிகாரங்களை கூட உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை என்ற விடயத்தை தற்போது வெளிப்படுத்த வேண்டும். அப்போதுததான் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பற்றிய கேள்விகள் எழும் இங்கு தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல்ரீதியாக மாத்திரமே செயற்படலாம். ஏனெனில் இரண்டு விடயங்கள். ஒன்று உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் திட்டங்களை அரசாங்கம் செய்யவுள்ளது. மற்றயது மாகாண அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மீள பெற அரசாங்கம் திட்டமிடுகின்றது. ஆகவே இந்த விடயங்களிலும் இருக்கக்கூடிய அரசியல் ரீதியான உரிமைப் பறிப்பு விடயங்களை வெளிக்கொணருவதன் மூலம் மக்களுக்கு அரசியல் விழிபுணர்ச்சியை ஏற்படுத்தலாம்.

பரீட்சித்துப் பாருங்கள்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தற்போது 4 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களும் மூவாயிரம் அரச ஊழியர்களுக்கான வெற்றிடங்களும் உள்ள. இவற்றை நிரப்புமாறு மாகாண அரசு கோரலாம். ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு நிச்சயம் தடை விதிக்கும் அல்லது நிதியில்லை என்று கூறி தட்டிக்கழிக்கும் அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமானால் நிதி வழங்குகின்ற உலவங்கியுடனும் சர்வதேச நாணய நிதியத்துடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தலாம். ஆனாலும் அதற்குக்கூட அனுமதி மறுக்கப்படலாம். மாகாண அரசுகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க முடியாது என்று சட்டதில் கூறப்பட்டாலும் ஒரு மாகாண அரசாங்கம் என்ற முறையில் மத்திய அரசுக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி அவர்களுடைய அழுத்தங்கள் மூலம் மாகாணங்களுக்கு குறைந்த பட்ச நிதியை பெறலாம்.

அதனை ஒரு முயற்சியாக கூட்டமைப்பு செய்யும்போது உண்மை உலகத்துக்கு வெளிச்சமாகும். தமிழ்ஈழம் என்ற கோரிக்கை எதற்காக எழுந்தது என்பது குறித்து பலருடைய சிந்தனைக்கும் அது வழிவகுக்கும். அதற்காக தமிழ் ஈழம்தான் அரசியல் தீர்வு என்பதல்ல. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷடி ஆட்சி முறை ஒன்றின் அவசியத்தை உணர்த்த முடியும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு 1948இல் இருந்து எவ்வாறு இறுக்காமாக இருந்தது என்பதும் அதன்காரணமாகவே இனப்பிரச்சினை இங்கு உருவாகியது என்பதும் நிருபணமாகும். எதனையும் பேசித் தீருங்கள் என்றுதான் சர்வதேசம் கூறுகின்றது. ஆனால் அது இருக்கின்ற அரசியலமைப்பு சட்டத்தினால் கூட முடியாதுள்ளது என்பதை மாத்திரம் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த இந்த மாகாண சபை முறை ஏற்புடையது. இளைஞர்கள் ஏன் ஆயுதம் எடுத்தார்கள் என்ற கேள்விக்கு அது விடையாக இருக்கும்.

அரசியல் ரீதியான திட்டங்கள் அவசியம்

ஆகவே தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தையும் கோடிட்டு காண்பிக்க முடியும். இது பயங்கரவாத போராட்டம் அல்ல ஜனநாயக உரிமைகளை, அடிப்படை உரிமைகளை பெறுவதற்காக 1920ஆம் ஆண்டு தேசிய இயக்கம் பிளவுபட்டது முதல் இன்று வரை பரம்பரையாக கோரப்பட்டு வரும் ஒரு இறைமை அதிகாரம் என்பதை நியாயப்படுத்தலாம். விக்னேஸவரன் சம்பந்தன் ஆகியோருக்கு இந்த வரலாற்றை நியாயப்படுத்தும் கடப்பாடு உண்டு?

விக்னேஸவரன் கூறிய அரசியல் போராட்டம்?

அஹிம்சைப் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை உரிய முறையில் எடுத்துக் காட்டவில்லை. தனியே தமிழர்களுக்கான அதிகாரத்தை கோரியது. அந்த போராட்டம் தோல்வியடைந்தும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தமிழ் ஈழத்தைக் மட்டுமே கோரியது. அதுவும் பயங்கரவாதம் என்ற போர்வையில் அழிக்கப்பட்டது. ஆனால் இப்போது மாகண சபையை கைப்பற்றி அரசியலமைப்பில் உள்ள சட்டரீதியான தடைகள் ஒவ்வொன்றையும் காண்பித்து தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை தனியான வரையறைகளுக்குள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் இதுதூன்.



http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97155/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.