Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகரக்கூடுகளில் கிளிநொச்சி - சிவபுரம் மக்கள்! உரியவர்களின் கவனத்திற்கு - கதை 1.

Featured Replies

கொடும் வெயில் கொதிக்கும் வெம்மையில் தகரக்கூடுகளில் வசிக்கின்றனர் கிளிநொச்சி சிவபுரம் மக்கள். அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் என்று பிரசாரம் செய்யப்படும் நிலையில் சிவபுரம் கிராமத்தின் காட்சிகள் வன்னியின் உட்பக்கங்களில் மக்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துகின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பிரதேசத்தில் உள்ளது சிவபுரம். ஏ-9 வீதியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது இக் கிராமம். இந்தப் பகுதியில் உள்ள சுமார் 250 குடும்பங்கள் வசிப்பதற்கு வீடற்ற நிலையில் தகரக் கூடாரங்களிலும் கூரைகளால் வேயப்பட்ட குடிசைகளிலுமே வசித்து வருகின்றனர். 
 
சுப்புரமணியம் அன்னலட்சுமி: 
 
“நானும் என்னுடைய கணவரும் மட்டுமே தற்பொழுது இங்கு இருக்கின்றோம். எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமகன் எல்லோரும் போரில் இறந்துவிட்டார்கள். மகள் ஒருத்தி விதவையாக இருக்கிறாள். எங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டித்தரவில்லை. எங்கள் குடும்ப எண்ணிக்கை போதாது என்றும் அதனால் புள்ளிகள் இல்லை எனறும் சொல்லிவிட்டார்கள். ஆனால் எங்கள் கிராமத்தில் வசிக்கும் யாருக்குமே வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை” 
 
மீள்குடியேற்றம் நடைபெற்று தற்பொழுது நான்கு வருடங்களைக் கடக்கின்றது. எனினும் இந்த மக்கள தொடர்ந்தும் இவ்வாறான கூடுகளிலும் குடிசைகளிலும் வாழ்கின்றனர். இங்குள்ள பல குடும்பங்களுக்கு இன்னமும் தற்காலிக வீடுகள்கூட கிடைக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் அங்கலாய்ப்போடு தெரிவிக்கின்றனர். 
 
ராசதுரை கண்ணன்: 
 
“நாங்கள் முகாமிலிருந்து கர்ப்பணிகள் வெளிச்செல்லும் அனுமதியில் போய்விட்டோம். அதனால் மிகவும் தாமதமாகவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். அதனால் எங்களுக்கு மிள்குடியேறிகளுக்கு கொடுக்கப்படும் இருபதாயிரம் ரூபா உதவிப் பணம்கூட கிடைக்கவில்லை. பல தடவைகள் அலைந்துவிட்டோம். போனது போனதுதான் என்று அதிகாரிகள் பொறுப்பில்லாமல் சொல்லுகின்றனர்” 
 
அரச காணிகளில் வசிக்கப்படுவதாக அல்லது அரசாங்கத்திற்குத் தேவையான காணிகளில் வசிக்கப்படுவதாக காரணம் கூறப்பட்டு சிவபுரம் பகுதியில் கொண்டு வந்து இந்த மக்கள் குடியேற்றப்பட்டவர்கள். காணிப் பத்திரமும் வீடுவாசலும் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு பரந்தன் இரசாயனச்சாலை போன்ற இடங்களிலிருந்து இந்த மக்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். 
 
மணியம் செந்தூரன்: 
 
“உங்களுக்கு வீடு வாசல் எல்லாம் கட்டித்தருவம் என்றார்கள். நாங்கள் பல வருடங்களாக வாழ்ந்த காணியை விட்டு வந்தோம். அந்தக் காணிகளில் பல பயன்தரு மரங்களையும் உருவாக்கினோம். பரந்தன் இரசாயனசாலையில் இராணுவம் முகாமிட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் அந்தக் காணியில் இருந்து எழுப்பபட்டு இங்கு கொண்டு வந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம்”
 
சிவபுரம் பகுதி ஆண்டிறுதி மழைகாலத்தில் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றது. கிளிநொச்சிப் பகுதியிலிருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்தப் பகுதியால் வழிந்தோடியே ஆனையிறவுப்பகுதியை அடைகின்றது. இதனால் இருக்கின்ற இந்த மக்கள் வசிக்கின்ற குடிசைகளும் வெள்ளத்தில் அள்ளுண்டு போகின்றன. பரு மழைகாலத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் இந்த அவலத்திலேயே மக்கள் வசிக்கின்றனர்.
 
வசந்தா கிருபாகரன்
 
“போன முறை வெள்ளம் அடித்த பொழுதுதான் எனது குழந்தை பிறந்திருந்தது. ஒருநாள் இரவு வெள்ளம் பெருகிவிட்டது. இரவு இந்தக் குழந்தையையும் இழுத்துக் கொண்டு இரண்டரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்குப் போவதற்குள் நான் படாத பாடு பட்டுவிட்டேன். திரும்பவும் இந்த இடத்தில் இந்த வீட்டில்தான் வசிக்க திரும்பி வரவேண்டி ஆகிவிட்டது” 
 
மக்களின் கோரிக்கை இதுவே: 
 
தமது கிராமத்தை மக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்டவர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த மக்களின் அவசியமான அவசரமான கோரிக்கையாக உள்ளது.
 
மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுத்து வெள்ளம் ஏறாதபடி மண்ணை பறித்து வடிகான்கள் அமைத்து சிவபுரத்தை மக்கள் வசிக்கும் கிராமமாக மாற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  இவற்றை செய்யத் தவறும் பட்சத்தில் தாம் முன்னர் வசித்த இடங்களில் சென்று குடியேற நேரிடும் என்றும் மக்கள் எச்சரிக்கின்றனர். 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.