Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனிலா – சுந்தரி -ஜெனட் – ஒரு நினைவுக் குறிப்பு….

Featured Replies

சுனிலா – சுந்தரி -ஜெனட் – ஒரு நினைவுக் குறிப்பு….

sunila.jpg?w=585&h=329புற்றுநோயினால் மரணமடைந்த  மனித உரிமை செயற்பாட்டாளரான சுனிலா அபயசேகரவை நினைவு கூருகின்ற இரண்டு நிகழ்வுகள் கடந்த மாதம் ரொரன்டோவில்   நடைபெற்றன. முதல் நிகழ்வு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆங்கிலத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இது அதிசயமான  ஆச்சரியமதான். ஆனால் ஆரோக்கியமான முன்னனேற்றம்.. இவ்வாறான செயற்பாடுகளை இவர்கள்   எப்பொழுதோ முன்னெடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய செயற்பாடாக இருந்தாலும்   வரவேற்கலாம். இக் நிகழ்வை சேரன்  அவர்கள் வழிநடாத்த தமிழ் செயற்பாட்டாளர்களும் சுனிலாவின் சிங்கள நண்பர்கள்  பலரும் உரையாற்றினார்கள். அடுத்த நிகழ்வு வழமைபோல தேடகம் தோழமை உணர்வுடன் நடாத்தியது. இதனை தேடகம் ஜயகரன் வழிநடாத்த கவிஞர் சேரன், முன்னால் சரிநிகர் ஆசிரியர் விக்கி, கவிஞை (கவிஞர்) சுல்பிகா மற்றும் மட்டக்களப்பு சூரியா அமைப்பின் முன்னால் செயற்பாட்டாளர் விஜி ஆகியோர் தமிழில் உரையாற்றினர். முன்னால் யக்திய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த இணையத்தளம் மூலம் பங்கு கொண்டு உரையாற்றினார். இந்த இரு நிகழ்வுகளும் சுனிலாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனக் குறிப்பிட்டபோதும் அவரது மரணத்தை ஒரு கொண்டாட்டமாகவே நினைவு கூர்ந்தமை நேர்மறையான பார்வையாக இருந்தது.

 

இந்த நிகழ்வு பலவகையில் முக்கியமானது. இதிலிருந்து நாம் கற்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. முதலாவது அடக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் தேசத்திற்காக சிங்கள தேசத்திலிருந்து வந்த குரலை இழந்தமையை நினைவு கூர்ந்தமை. ஏனெனில் இவ்வாறான குரல்கள் உரத்தும் உறுதியுடனும் சிங்கள தேசத்திலிருந்து மிக அரிதாகவே கேட்கின்றன. ஆகவே இவ்வாறான அரிதான குரல்களை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இன்று அதற்கான முக்கியத்துவம் அவசியமான சுழலில் நிற்கின்றோம். இரண்டாவது சிங்கள் மக்கள் மத்தியில் நம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க சிலராவது இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துவது. அதனைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்வது. மூன்றாவது அடக்குகின்ற தேசத்திலிருக்கின்ற ஒருவர் தம் தேசத்தால் அடக்கப்படுகின்ற ஒரு தேசத்திற்காக, எவ்வாறான அடிப்படைகளில், பண்பு நிலைகளில் நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ளவதற்குப் பயனுள்ளது.

 

பல சிங்கள நண்பர்கள் 70ம் ஆண்டுகளிலிருந்து சுனிலா எவ்வாறு அடக்கப்பட்ட மக்களின் குரலாக அரசியல். கலை இலக்கிய மற்றும் மனித உரிமைத் தளங்களில் துணிவுடனும் துடிப்புடனும் தொடர்ச்சியாக செயற்பட்டார் என்பதை நினைவுபடுத்தினர். இரண்டு நிகழ்விலும் குறிப்பாக சேரன் அவர்கள் பல விடயங்களை குறிப்பிட்டும் அனுபவங்களைப் பகிர்ந்தும் சென்றார்.  சுனிலாவிற்கு சுனிலா சுந்தரி ஜெனட் என்ற மூன்று பெயர்கள் இருந்ததையும் அதை அவர் எவ்வாறு தனது சிங்கள அடையாள எதிர்ப்பாகவும் பயன்படுத்தினார் என்பதைக் குறிப்பிட்டார்.  மேலும் சேரன் அவர்கள் சுனிலாவின் தெளிவான உறுதியான அரசியல் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிட்டார். அதாவது தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை சிங்களவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் தமிழர்களே தமக்கான தீர்வை தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள் என்ற நிலைப்பாடுடையவராக இருந்துள்ளார். அதாவது நிபந்தனையற்ற சுயநிர்ணைய உரிமையை ஏற்றவராக இருந்துள்ளார். பலர் சுயநிர்ணைய உரிமைய ஏற்பதாக கூறுகின்ற போதும் பிரிந்து போவதற்கான உரிமை இல்லை என நிபந்தணையுடன் மறுப்பவர்களே அதிகம் இருக்கின்றனர். அந்தவகையில் சுனிலா  இவர்களிடமிருந்து விலகி தனித்துவமாக நிற்கின்றார் என்றார் சேரன்.

 

விக்கி பல விடயங்களைக் குறிப்பிட்டபோதும் முக்கியமாக 1994ம் ஆண்டை நினைவு கூர்ந்தார். சந்திரிக்காவின் சமாதான அலையில் அன்று அனைவரும் அல்லுப்பட்டு சென்றனர். சுனிலாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் விரைவில் சுனிலா அதன் போக்கைப் புரிந்து கொண்டும் தன் தவறை உணர்ந்தும் அதிலிருந்து விலகி வந்தார். ஆனால் பெரும்பான்மையான சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும்  அதில் முழகிப் போனார்கள். இக் காலங்களில் அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது சுனிலா மிக உயர்ந்த பண்பைப் பேணினார் எனக் குறிப்பிட்டார் விக்கி. (இவ்வாறு சென்ற சிலர் காலம் சென்று விழித்துக் கொண்டபோது அவர்கள் அரசின் எதிரியாகி தலைமறைவாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. )இதன்பின்   சுல்பிகாவும் விஜியும் இவர் எவ்வாறு பெண்களுக்கும்  அவர்களது உரிமைகளுக்கும் மட்டுமல்ல பல்வேறு சமூக இனப் பிரச்சனைகளின் போதும் உறுதுணையாக நின்றார். பல்வேறு கஸ்டமான நெருக்கடியான காலங்களில் எங்களுக்கு உதவி செய்ய உடனடியாக முன்நின்றார் எனவும் குறிப்பிட்டார்கள். இந்த நிகழ்வில் உரையாற்றிய  அனைவரும்  சுனிலாவின் வீட்டு வாசல் அனைவருக்காகவும் எப்பொழுதும் திறந்து இருந்ததையும் மற்றும் பலருக்கு அடைக்கலம் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.

 

தமிழ் சமூகத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் குணம், ஆகக் குறைந்தது அதைப் பற்றிக் கதைப்பதாவது, இருக்கின்றபோதும்  சக இனங்களைப் புரிந்து ஆதரித்து கூட்டமைத்து செயற்படும்  பண்பு அரிதாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் சிங்கள பௌத்த இனவாத அரசால் ஒடுக்கப்படுகின்ற தமிழர்கள் என்றவகையில் நாம் சுனிலா போன்றவர்களிடம் கற்பதற்கு நிறயைவே இருக்கின்றன. முக்கியமாக நாம் ஒருபுறம் ஒடுக்கப்பட்டாலும் மறுபுறம் ஒடுக்குகின்ற சமூகமாகவும் இருக்கின்றோம். இந்த இரு தளங்களிலுமிருந்து எவ்வாறு விடுபட்டு சுந்திரத்தை அனுபவிப்பதும்  சக மனிதரின் சுதந்திரத்தை மதிப்பதும் நாம் கற்கவேண்டியவை. பலவழிகளில் ஒடுக்கப்படுகின்ற மக்களுடனான பகை முரண்பாடுகளை நட்பு முரண்பாடுகளாக மாற்றி எவ்வாறு ஒடுக்கும் அரசையும் அதன் ஆதரவு நிறுவனங்களையும் சக்திகளையும் தனிமைப்படுத்துவது என்பதுதான் நம் முன்னுள்ள சவாலான வேலை.

 

சிங்கள பௌத்த இனவாத அரசால் பலவகைகளில் தமிழர்கள் ஒடுக்கி அடக்கப்படுகின்றமை வெளிப்படையானது. அதேநேரம் தமிழர்கள் முஸ்லிம் மக்களை இவ்வாறு நேரடியாக அடக்கி ஒடுக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடுடையவர்கள். இதனை மிக மோசமான இனவாதமாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு கதைப்பதை முஸ்லிம்களின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளினால் நியாயபடுத்துகின்றனர். இந்த இடத்தில் தான் சுனிலா போன்றவர்கள் முக்கியத்துவப்படுகின்றார்கள். தாம் அல்லது தம்மை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசு தமிழர்களை ஒடுக்குகின்றது என்பதை நன்றாகப் புரிந்தவர்கள். இந்தப் புரிதலினால் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை இவர்கள் கக்கவில்லை. அரசுக்கு சார்ப்பாகவும் செயற்படவில்லை. மாறாக தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தினார்கள். தம் தேசத்திலிருக்கின்ற  இனவாதபோக்குகளை சுட்டிக்காடடி விமர்சித்தார்கள். இவற்றைத்தான் தமிழர்களாகிய நாம் இவர்களிடமிருந்து கற்றகலாம். இவ்வாறு கற்பதன் மூலம் சக தேச மக்களுடன் இனவாதப் போக்குகளை வளர்ப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான உறவை வளர்க்கலாம்.

 

அண்மையில் வட மாகாணசபையில் மன்னாரைச் சேர்ந்து முஸ்லிம் பிரதிநிதியை மாகாணசபை அங்கத்தவரா சேர்க்க வேண்டும் என பெரும்பான்மையான தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தது ஆரோக்கியமானதும் முன்னெற்றகரமான செயற்பாடுமாகும்.

 

சேரன் அவர்கள் தனது உரையில் யாழ்ப்பாணத்தவர்கள் பனங்கொட்டை கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏதுவும் தெரியாது வளர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்கு சிங்களவர்கள் என்றால் முதன்முதலில் தெரிந்தது சிங்கள இராணுவம் எனவும் குறிப்பிட்டார். ஆம் நான் அறிந்தவரையில் பெரும்பான்மையானவர்கள் 86ம் ஆண்டு வரை ஆனையிறவைத் தாண்டாதவர்களாகவே இருந்ததை முன்பு அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

நான் அதிர்ஸ்டவசமாக பனங்கொட்டை கலாசாரத்தை மட்டும் உள்வாங்கவில்லை. எனக்குள் தேயில்கொட்டையும் உண்டு கோப்பிக் கொட்டையும் உண்டு. பேரிச்சப்பழக் கொட்டையும் உண்டு. சிங்கள மக்களுடன் சிறுவயதிலிருந்து வளர்ந்தவன் வாழ்ந்தவன்.. பல வகையான சிங்கள மக்களுடன் பலவகை எதிர்மறை நேர்மறை உறவுகளைக் கொண்டிருந்தவன்.

 

1990 ஆண்டு போர் ஆரம்பித்த நாட்களில் புலிகளின் தலைமை பாஸ் முறையை நடைமுறைக்கு கொண்டுவர ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே யாழை விட்டு வெளிக்கிட்ட சிலரில் நானும் ஒருவன். கொழும்பு வந்தபின் புலிகளை ஆதரிக்காமல் அதேநேரம் அரசை எதிர்க்கின்ற செயற்பாடுகளில் பங்குபற்ற தேடியலைந்த காலங்கள் அவை. நம் அலைவரிசையில் சிந்திக்கின்ற நண்பர்கள் அறிமுகமோ அருகாமையிலோ இல்லாத காலங்கள். தனிமை நிறைந்த காலங்கள்.  (போர் ஊக்கிரமடைய ஆரம்பித்தபோதுதான் அலையலையாக மக்கள் வடபகுதியிலிருந்து வெளியேறினார்கள். அதன்பின்பே நாம் உறவாடுவதற்கும் உரையாடுவதற்கும் நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தனர்.) இப்படியான ஒரு சூழலில் தான் சுனிலா மற்றும்  சுனில் விஜயசிறிவர்த்தனா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இதன் பின் எனது கொழும்பு வாழ்க்கை வேகம் எடுக்க ஆரம்பித்தது எனலாம்.  இன்போமில் ஆரம்பமான விபவியின் முதல் திரைப்படக் காட்சியின் பின் விபவி பொரளையில் தனி ஒரு கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்து வளர்ந்தது வரை அவர்களுடன் உறவு தொடர்ந்தது. சிங்கள நண்பர்களுடன் இணைந்து செயற்பட்ட இக் காலங்கள் சுமுகமானவையல்ல. இந்த உறவு பின் சரிநிகருடன் வேலை செய்த காலங்கள்  வரை தொடர்ந்தது. நம்முடன் இணைந்து வேலை செய்த சிங்கள நண்பர்கள் சரிநிகர் குழுவை புலிகள் என முத்திரை குத்திய காலங்களும் இருந்தன. ஆனால் இக் காலங்களில் எல்லாம் எமக்காக உரையாட சுனிலாவைப் போன்றவர்கள் இருந்தார்கள்.

 

இப்படி பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகைகளில் சுனிலா முக்கியமான பங்களிப்பை ஆற்றினார். இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டதை இவருடன் இணைந்து செயற்பட்ட கரி ஆனந்தசங்கரி அவர்கள் குறிப்பிட்டார். இன்றைய இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி மகிந்த  முன்பு ஜ.தே.க அரசாங்கத்தின் எதிர்ப்பாளராக இருந்தபோது மனித உரிமையாளர் என்ற பெயர் பெறுவதற்கு சுனிலாவே காரணமாக இருந்தார். ஆனால் அதே சுனிலாவிற்கு தேசத் துரோகி என்ற பட்டத்தை இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற மகிந்த கொடுத்து சிறப்பித்தார். இதனை சுனிலா மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டதாக  சேரன் குறிப்பிட்டார். இதுதான் வாழ்வின் முரண்நகை.

இன்றைய சுழலில் சுனிலா சுந்தரி ஜெனட் அவர்களின்  மரணம் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒரு இழப்பே என்றால் மிகையான கூற்றல்ல.

 

மீராபாரதி

 

 

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறவுகள்
கட்டுரைக்கு நன்றி மீராபாரதி.யார் விக்கி,சுல்பிகா என்று கூற முடியுமா?
 
  • தொடங்கியவர்

விக்கி முன்னால் சரிநிகர் ஆசிரியர். சுல்பிகா எழுத்hளர் கவிஞை (கவிஞர்). மன நல ஆலோசகர்.

  • கருத்துக்கள உறவுகள்
மிக்க நன்றி.விக்கி நம்மட நிழலியோ என்று நினைத்தேன் :)
 

 

மிக்க நன்றி.விக்கி நம்மட நிழலியோ என்று நினைத்தேன் :)

 

 

ஹி ஹி...

விக்கி முன்னால் சரிநிகர் ஆசிரியர். சுல்பிகா எழுத்hளர் கவிஞை (கவிஞர்). மன நல ஆலோசகர்.

 

விக்கி(னேஸ்வரன்) சரிநிகரின் ஆசிரியராக இருந்தார் என்பது நினைவில் இல்லை. அப்படி இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். முதலில் குகதாசனும் (கடத்தப்பட்டு காணாமல் போனவர்), பின்னர் சேரனும், அதன் பின்னர் சரிநிகர் நிறுத்தப்படும் வரைக்கும் சிவகுமாரும் தான் ஆசிரியர்களாக இருந்தனர். 

 

விக்கி சரிநிகரின் பிரதம ஆசிரியராக இல்லாமல், அதே நேரத்தில் ஆசிரியர் பீடத்திலும் (Editorial board) பத்தி எழுத்தாளராகவும் தொடர்ந்து இருந்தார் என்றுதான் என் நினைவுகள் சொல்கின்றன. அத்துடன் விக்கி     பெண் கவிஞர் ஒளவையின் கணவரும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சுனிலாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைக்கு நன்றி.

சிங்கள புத்திஜீவிகள் மத்தியில் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்தவர்கள் எப்போதுமே இருந்துகொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருப்பதனால், அவர்களின் குரல்கள் இனவாதக் கூச்சலுக்குள் அமிழ்ந்துபோவது உண்மைதான். போர் முற்றுப் பெற்ற நான்கு ஆண்டுகளில்கூட தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற முன்னெடுப்புக்கள் சிங்கள மத்தியில் காணக்கிடைக்கவில்லை. அப்படி எவராவது ஆரம்பித்தாலும் மகிந்த கோத்தபாய பரிவாரங்கள் அவற்றை முளையில் கிள்ளிவிடுவார்கள். எனவே சிங்கள முற்போக்குவாதிகள் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வளவு உதவுவார்கள் என்பது கேள்விக்குறியே.

மீராபாரதியின் நண்பர்களாக இருந்த முற்போக்கான சிங்களவர்களே சரிநிகரை ஒரு புலிசார் பத்திரிகை என்று சந்தேகித்தது பெரிய ஆச்சரியமல்ல. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்தவர்கள் எல்லோரையும் புலிகளோடு ஏதோ வகையில் தொடர்பு உள்ளவர்களாகப் பார்ப்பது வழமையானதுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.