Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபை: அரசியல் தீர்வை கையாள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபை: அரசியல் தீர்வை கையாள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் - யதீந்திரா

வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு பெற்றிருக்கும் அமோக வெற்றியானது, தமிழ் மக்கள் சலுகைகளை விடவும் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்ள முடிந்த அரசாங்கத்தால், தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதையும் மேற்படி வெற்றி நிரூபித்திருக்கிறது. யுத்தத்திற்கு பின்னர் அத்தகையதொரு வாய்ப்பை அரசாங்கம் பெற்றிருந்தும் கூட, அதனை முறையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிருப்தியே கூட்டமைப்பின் மேற்படி தேர்தல் வெற்றியாகும். தவிர, கூட்டமைப்பினர் தேர்தல் மேடைகளில் உச்சரித்த ராஜதந்திரப் போரின் பொருள் புரிந்து மக்கள் வாக்களிக்கவில்லை. மேலும் சாதாரண மக்களுக்கு ஒருபோதுமே ராஜதந்திர மொழியின் அர்த்தங்கள் விளங்கப் போவதுமில்லை. இவ்வாறானதொரு நிலைமையே முன்னர் கிழக்கு மாகாணசபை தேர்தலின் போதும் காணப்பட்டது. ஆனால் மக்கள் அரசாங்கத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது எந்தளவு உண்மையோ, அதற்கு எந்தவகையிலும் குறையாதளவில், கூட்டமைப்பின் மூலம் தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமென்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதும் உண்மையே!

வடக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது மாகாணசபை முறைமைக்கு அல்ல, மாறாக தங்களைத் தாங்களே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமைக்கே அவர்கள் வாக்களித்திருக்கின்றனர் போன்ற அவதானங்களும் நிலவுகின்றன. அவ்வாறான அவதானங்களின் சரி பிழை பற்றிய விவாதத்திற்குள் செல்ல இப்பத்தி விரும்பவில்லை. அவ்வாறானதொரு விவாதத்திற்குள் செல்வதற்கான ஆதாரங்களும் இல்லை. ஆனால் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைக்கான தேர்தலின் போது வெளியிட்டிருந்த விஞ்ஞாபனமானது, மாகாணசபை முறைமையை ஓர் இறுதித் தீர்வாக முன்னிறுத்தியிருக்கவில்லை. அந்த வகையில் வடக்கு மக்கள் மாகாணசபை முறைமையை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒருவர் வாதிடின், அதனை எவராலும் நிராகரிக்க முடியாது என்பதை இப்பத்தி ஏற்றுக்கொள்கிறது. கூட்டமைப்பினர் தமது விஞ்ஞாபனத்தின் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான தங்களின் எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தனர். அரசியல் தீர்வு தொடர்பில் எங்களின் நிலைப்பாடு, (Our stand on a political solution) என்னும் தலைப்பில், கீழ்வரும் ஐந்து விடயங்களில் கூட்டமைப்பு தனது முடிவை பதிவு செய்திருக்கிறது.

நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து (immemorial) தமிழ் மக்கள் இத்தீவில் வாழ்ந்து வருகின்றனர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் (Tamil speaking) மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றனர் (historical habitation). தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையை (right to self-determination) கொண்டிருக்கின்றனர். அதிகாரப் பகிர்விற்கான ஏற்பாடுகள், இணைந்த வடக்கு-கிழக்கில் சமஸ்டி கட்டமைப்பிற்கான (a unit of a merged Northern and Eastern Provinces based on a Federal structure) அடிப்படையை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். மேலும், இது முஸ்லிம் மக்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடானது, இறைமையை பகிர்ந்தளிக்கும் வகையில், தேவைகளுக்கு ஏற்றவாறு, காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நிதி மற்றும் வளப்பகிர்வு, கல்வி, சுகாதாரம் என்பவற்றை உள்ளடக்கியதாக (Devolution of power on the basis of shared sovereignty shall necessarily be over land, law and order, socio-economic development including health and education, resources and fiscal powers) அமைந்திருக்க வேண்டும். இங்கு தமிழ் பேசும் மக்கள் (Tamil Speaking People) என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வரலாற்று வாழ்விடம் என்பதையே கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் சுய-நிர்ணய உரிமைக்கு பொறுப்பானவர்கள் (The Tamil People are entitled to the right to self-determination) என்று அழுத்தியிருப்பதன் ஊடாக, சுய-நிர்ணய உரிமையென்பது வடக்கு கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாகும் என்பதை கூட்டமைப்பு இங்கு அழுத்திக் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மேற்படி விடயங்களின் அடிப்படையில்தான் வடக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக ஒருவர் வாதிடலாம். ஆனால் வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாடு தளம்பல் தன்மையானது. ஏனெனில், கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது இவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை கூட்டமைப்பு மக்கள் முன் வைத்திருக்கவில்லை. எனவே கூட்டமைப்பின் வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பான நிலைப்பாடானது அடிப்படையிலேயே பலவீனமானது ஆகும். தவிர, அத்தகையதொரு விஞ்ஞாபனத்தை முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றிருந்தாலும் கூட, கிழக்கின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களின் ஆதரவை பெறமுடியாதவொரு நிலைமையே காணப்படுகிறது. முஸ்லிம்களை தற்போது பிரதிநிதித்துவம் செய்துவரும் எந்தவொரு அரசியல் கட்சியாலும் அத்தகையதொரு கோரிக்கையை முன்வைத்து மக்களின் ஆதரவை பெறமுடியாதவொரு சூழலே காணப்படுகிறது. ஏனெனில் முஸ்லிம்கள் கிழக்கு தனித்திருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர். இந்த விடயத்தை பல முஸ்லிம் புத்திஜீவிகள் வெளிப்படையாகவே முன்வைத்தும் வருகின்றனர். இந்தவகையில் நோக்கினால், முஸ்லிம்கள் தொடர்பில் கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான புரிதல் இல்லை எனலாம். குறிப்பாக, 90களுக்கு பின்னரான முஸ்லிம்களின் எழுச்சி குறித்து கூட்டமைப்பிடம் எந்தவிதமான மதிப்பீடும் இல்லை என்பது தெளிவாகிறது.

இங்கு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், 'வரலாற்று ரீதியான வாழ்விடம்' மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு ஆகிய இரண்டும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் (1987) குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களாகும். மேலும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் பலவும், நீண்டகாலமாக மிதவாதிகளால் குறிப்பிடப்பட்டு வந்த விடயங்களே அன்றி, புதியவைகள் அல்ல.

2000ஆம் ஆண்டு, இரா.சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக இருந்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தமிழ் மக்கள் சுய-நிர்ணயத்திற்கு உரித்தானவர்கள் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வடக்கு-கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு இத்தகைய கோரிக்கைகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் தொடர்பான விடயம் முக்கியமானது. போரின் இறுதிக்கட்டத்தில் அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதநேய சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான (An Independent International Investigation must be conducted into the allegations of violations of international human rights and humanitarian laws made against both the Government of Sri Lanka and the LTTE during the last stages of the war) குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என்று கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளால் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என்பதானது, விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே துன்புறுத்தியிருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருகிறது.

நடந்து முடிந்த தேர்தலை அடியொற்றி இப்படியெல்லாம் வாதங்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். ஆனால் இப்பத்தியின் அவதானத்தின்படி, தமிழ் மக்கள் கூட்டமைப்பை அமோகமாக ஆதரித்திருப்பதன் ஊடாக ஒரு நிம்மதியான வாழ்விற்கான ஏக்கத்தை, கூட்டமைப்பிற்கும், கொழும்பிற்கும், இலங்கை இன முரண்பாட்டின் மீது கரிசனையுள்ள இந்தியா உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கும் வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்று குறிப்பிடுவதே சரியான ஒரு பார்வையாக அமையும். மக்களின் ஆணையின் அடிப்படையில் கொழும்புடனும், கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் ஏனைய தரப்பினருடனும் இணைந்து, ஒரு நியாயமான தீர்வுக்காக உழைக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு. அந்த வரலாற்று பொறுப்பை நிவர்த்தி செய்வதற்கு இறுதியாக கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்தான் இந்த வடக்கு மாகாணசபை ஆகும்.

கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை எவ்வாறு கையாளுகின்றது என்பதைக் கொண்டே தமிழர்களின் ஆட்சித்திறனை ஏனைய தரப்பினர் மதிப்பிடக்கூடும். எனவே அந்த வகையில், வடக்கு மாகாணசபை என்பது தமிழர்களை அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகும் ஒரு வாகனமாகும். இந்த வாகனத்தை சரியான திசை நோக்கி ஓட்டினால்தான் தமிழர்களுக்கு அடுத்த கட்டம் என்று ஒன்றிருக்கும். இல்லாவிட்டால் இத்துடன் தமிழர் அரசியல் என்பது முடிவுக்கு வரும். அதனை முடித்துவைக்கும் ஓர் அரசியல் கூட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் இடம்பெறும். ஆனால் கூட்டமைப்பு கிடைத்திருக்கும் இந்த வாகனத்தை சரியாக பயன்படுத்துமா?

வடக்கு தேர்தல் முடிந்ததும், உடனடியாகவே அமைச்சரவை நியமனம் தொடர்பான முரண்பாடுகள் வெளித்தெரிகின்றன. இது கூட்டமைப்பின் பலவீனத்தையே வெளிக்காட்டுகின்றது. நிர்வாகத் திறமையுள்ளவர்களுக்கா அல்லது அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கா முதல் இடம் வழங்குவது என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது. இப்பத்தி வெளிவரும் போது ஒருவேளை அமைச்சர்கள் நிமயனம் முற்றுப் பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு சரியான அமைச்சரவை உருவாக்கப்படாது விட்டால், எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அதே அமைச்சரவையே காரணமாக அமையலாம். ஓய்வுபெற்ற மற்றும் வெறும் நிர்வாகத் திறமையுள்ளவர்களால் மட்டுமே வடக்கு மாகாணசபை நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுமாக இருப்பின், மாகாணசபை என்பது ஒரு திணைக்களமாகவே காட்சியளிக்கும். இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு தேவை ஓய்வுபெற்ற நிர்வாகிகள் அல்ல. மாறாக, ஆளுமை மிக்க தலைவர்களே இன்றைய தேவை. ஒரே நேரத்தில் அரசியலையும், மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் சமதளத்தில் கையாளக்கூடிய அரசியல் தலைவர்களே இன்றைய தேவையாகும். வடக்கு மாகாணசபையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=8b6198df-c790-4d91-876c-5286bbc7621f

யத்தீந்திரா சரியான பாவம். எப்படியாவது கூட்டமைப்பை குத்த வழி ஒன்று வலிந்து காணாப்படாவிட்டால் அவர் இரவு தூங்குவதற்கு தூக்க மருந்த்து எடுக்க வேண்டியிருக்கும். அதை தவிர்க்கத்தான் இப்படி பகிடிகள். 

 

தொழில்த் துறை அனுபவம் மட்டும் மந்திரியாக இருக்கப் போதாது. ஆனால் இதை தான் தான் ஒருவர் தெரிந்து வைத்திருப்பத்தாக நினைத்து கட்டுரை எழுதுவது சிறுபிள்ளைத்தனம். மேலும் இளைப்பாறிவர்கள் கூடாது என்கிறார். ஆனால் மந்திரிகளாக இருந்து அரசியலை கையாண்டவர்களும் கூட்டமைப்பில் இல்லை. அப்போ அரசியல் அனுபவம் என்றால் சிவாஜிலிங்கம், ஆனந்த சங்கரி, சித்தார்த்தனையா சொல்கிறார். இவர்கள் இளைபாறாதவர்களா? தான் குறிப்பிடும் பெயர்களை யத்தீந்திரா கூறியிருந்தால் அவரின் ஆய்வுக்கு பதில் எழுத முடியும்.

 

உண்மையில் யத்தீந்திராவுக்கு படிப்பறிவு, அரசியல் அனுபவம், தொழில்துறை அனுபவம் மூன்றையும் எப்படிக்கலந்து மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்பது புரியவில்லை போலிருக்கு. இதனால் அரசியல் அனுபவத்தை மட்டும்தான் தூக்கிபிடிக்கிறார். இளைப்பாறியவர்களை வெறுக்கிறார்.   அவர் அதைப்பற்றி கவலைபடவில்லை. அவரின் அக்கறை கூட்டமையில் யாரைக் குத்தலாம் என்பதே. அவர் பலகாலம் குத்த குறி வைத்துத்திரிந்த மனிதன் விக்கினேஸ்வரனே. ஆனால் அவருக்கு நேராக குத்தும் துணிச்சலும் இல்லை போலிருக்கு. ஏனெனில் அவர் சறுக்கி சறுக்கி குத்துகிறார். கூட்டமைப்பு தன்னிடம் தரமான ஆட்கள் இல்லாததால் வெளியில் இருந்து கொண்டுவர முயல்வதாக விக்கினேஸ்வரனை குத்தியிருந்த பதிவு யாழில் பதியப்பட்டிருந்தது. இப்போதும் அவர் "இளைப்பாறிய திணைக்களம்" என்று குத்துவது விக்கினேஸ்வரனை.

 

தெளிவான சிந்தனையும் வலுவான அடிப்பவை அறிவும் யத்தீந்திராவுக்கு இருந்தால் கூட்டமைப்பின் மந்திரி தேர்வை பற்றி முறையான ஒரு ஆராய்வு செய்திருக்க வேண்டும்; சில பதவிக்கு தோதானவர்களை பற்றி ஆதரித்து சிபார்சு செய்தும், எதிர்த்தும் எழுதியிருக்க வேண்டும். யத்தீந்திரா ஒருவரை ஆதிரித்து ஒருவரை எதிர்த்து கருத்து எழுதினால் இப்போது குத்தல் எழுதுவது போல பின்னர் அந்த வேட்பாளரை பற்றி எழுதமுடியாமல் போய்விடும் என்பதால் இப்போது  இந்த பொதுக் குத்தல் எழுதிறார். 

Edited by மல்லையூரான்

ஒரு அரசியல் கட்டுரை அவர் என் சொல்ல வருகிறார் என்ற விடயம் தெளிவாக இல்லாமல் முழுக்க குழப்பங்கள் அள்ளி தெளிக்கப்பட்டிருந்தால் அது யதீந்திராவின் கட்டுரை என்று எளிதில். கூறிவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.