Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சாமானியனின் சவால் மடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சாமானியனின் சவால் மடல்!

 

TNA_Trinco_Rally_3_23303_435.jpg

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் வட மாகாணசபைக்கு தெரிவாகிய கட்சிகளின் அங்கத்தவர்களுக்கும், தங்களின் வெற்றிக்காய் பணி செய்த சாமானியனின் அன்புமடல் அல்லது ஆவேசத்துடன் கூடிய சவால்…

 

எனது மடலை வாசிக்கும் சூழல் தங்களுக்கு இருக்கும் என்று அடியேன் கருதவில்லை ஆனாலும் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களை வாட்டும் ஒரு விடயம் பற்றி எவரும் நேரடியாக தங்களது கவனத்துக்கு கொண்டு வந்ததாக யான் இந்நேரம் வரை அறியவில்லை ஆதலால் இம்மடலை வரைகின்றேன்.

வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீங்களும் உங்களைப் போன்றசிலரும் அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மாகாண சபையை நாங்கள் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவோ அல்லது தீர்வுக்கான தொடக்கமாகவோ கருதவில்லை இலங்கை அரசாங்கம் உலகத்திற்கு தன்னை நல்ல பிள்ளையாக காட்ட நடாத்துகின்ற நாடகம் இது.

 

எனவே இச்சந்தர்ப்பத்தை அரசுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் வழங்காமல் எமது மக்களின் உரிமைக்கான குரல்களை வெளிப்படுத்தும் களமாக மாகாணசபையை பயன்படுத்தப் போகின்றோம்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதி அந்த வெற்றியானது சாதாரண வெற்றி அல்லாமல் அறுதிப் பெரும்பான்மையான ஆறில் ஐந்து பெரும்பான்மை தேவை என்று மக்களை அஞ்சாது வாக்களிக்கச் செல்ல வேண்டும் அப்போதுதான் நாங்கள் மக்களின் உரிமைக்கு உரத்து குரல் கொடுக்க முடியும் என்றே உங்களினதும் உங்கள் கட்சிகளினதும் பிரசாரமாக இருந்தது.

 

எந்த அமைச்சை யார் அலங்கரிக்க ஆவலாய் உள்ளீர்கள் என்பது பற்றி யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே உங்கள் அனைவரையும் எமக்கான உரிமைக் குரல்களாகவே வாக்களித்து தெரிவு செய்தோம்.

 

இலங்கையின் விகிதாசார தேர்தல் முறைமையே எதிர் தரப்புக்கான ஆசனங்களை மாவட்டங்கள் தோறும் ஒன்று அல்லது இரண்டு என்று எட்டு ஆசனங்களை வழங்கியதே தவிர தமிழ் மக்களின் வாக்குகள் அல்ல என்பதை அனைவரும் புரிதல் வேண்டும். அவ்வாறன்றி சாதாரண தொகுதி வாரி தேர்தல் முறையாக இருப்பின் எதிரி மட்டுமல்ல உங்களில் பலரும் காணாமல் போயிருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

 

முதலமைச்சர் வேட்பாளராக ஒரு பொது மனிதரை கட்சி சார்பின்றி நிறுத்துவதாக நீங்களும் உங்கள் கட்சித்தலைவர்களும் தீர்மானித்ததாகவே எமக்குத் தெரிவிக்கப்பட்டது?

 

திரு விக்னேஸ்வரனைப் பற்றி எந்தவிதமான தெரிதல், புரிதல் இன்றி நீங்களும் உங்கள் கட்சித்தலைவர்களும் கூறியதற்கு இணங்க நாமும் மக்களும் அமோக ஆதரவு தெரிவித்து தெரிவு செய்தோம் முதலமைச்சர் பிரச்சினை எதுவும் இன்றி தெரிவானார் மகிழ்ச்சி.

 

ஆனால் அவருடன் இணைந்து செயற்பட வேண்டிய அமைச்சர்கள் நான்கு பேரை தெரிவு செய்வதில் நீங்களும் உங்கள் கட்சித்தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உங்களின் சுயரூபங்களை காட்டி நிற்கின்றீர்கள்.

இது நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று அல்லும் பகலும் தீவிர பணி செய்த எமக்கு மனதுக்கு வருத்தமாக உள்ளது. எனவே இதற்கு என்னதான் தீர்வு? என்று தலையை பிசைந்தபோது அய்யன் வள்ளுவன் குறள் நினைவுக்கு வந்தது உங்களில் எத்தனைபேர் உலகப் பொதுமறை திருக்குறள் அறிவீர்களோ? தெரியாது இருந்தும் மன்னித்து நோக்குவீர்களாக ….

 

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும். வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, பொருந்தும் படியாகச் செயற்பட வேண்டும் என்பது பொருள்.

நோயை தணிப்பதற்கு நோய்கான காரணிகளையும் கண்டறிந்து தணிக்க வேண்டுமாம். இங்கே நோய்க்கான காரணிகள் என்று யான் கண்டுகொண்டது காலம் காலமாக பதவிகளை அலங்கரித்து கட்சிகளை நடாத்துகின்ற தலைவர்களும் அவர்களை தாங்கிநின்று. தாமும் பதவிகளுக்கு வரவேண்டும். அதற்கு தலைவர்கள் உதவ வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ள கட்சிகளும், உறுப்பினர்களும்தான் இதனை நீங்கள் ஒப்புக்கொள்ளாவிடினும் உங்கள் மனட்சாட்சி ஒப்புக்கொள்ளும் என நம்புகின்றேன். எனவே மாகாண சபை தேர்தல் அறிவித்தல் வெளியாகும் போது இவ்வாறான கட்சிகளில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் இன்று உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பின் நீங்களும் இந்த பதவி நோய்க்கு காரணிகள்தான்.

எனவே நீங்கள் சுயமாக நோய் தணிக்க முன்வர முடியுமா? அப்படியானால், நாங்கள் பதவிக்காக கட்சி நடத்தவில்லை, பதவிக்காக கட்சியில் அங்கத்தவராக இருக்கவில்லை. இந்த அமைச்சு பதவிக்கு பொருத்தமானவரை முதல்வரே சுயமாக தகுதியானவர்களை தெரிவு செய்ய ஒத்துழைக்கின்றோம் என்று ஒருபகிரங்க அறிக்கை வெளியிட முடியுமா?

 

நீங்கள் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்றால்? தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்தவர்கள் என்றால்? அதிகாரங்கள் இல்லாத மாகாணசபையில் வெறும் அலங்கார அமைச்சு பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள் என்றால்? கட்சி சாராத முதலமைச்சரை ஒன்றுபட்டு தெரிவு செய்தது அவர் வெற்றிபெற வேண்டும் என்று பணி செய்தது உண்மையாக இருந்தால்? யான் கீழே அடையாளம் காட்டுகின்ற வடக்கு மாகாணசபைக்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிடுவீர்களா? என அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

1.திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தெரிவுசெய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம்)

2.திரு.மகாலிங்கம் சிவாஜிலிங்கம் (அரசியல் பிரிவுத் தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழரசுக்கட்சி நகரசபை உறுப்பினர் வல்வெட்டித்துறை, தெரிவுசெய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம். )

3.திரு. சி வீ.கே .சிவஞானம் (தமிழரசுக்கட்சி சிரேஸ்ட தலைவர், தெரிவு செய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம்)

4.திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன் (சிரேஸ்ட உறுப்பினர், ஈ பி ஆர் எல் எப் சுரேஷ் அணி, தெரிவு செய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம் )

5.திரு. கந்தையா சர்வேஸ்வரன் ( மத்திய குழு உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஷ் அணி, தலைவரின் சகோதரர் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர் யாழ்.மாவட்டம்)

6. திரு.விந்தன் கனகரத்தினம், (உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம், யாழ் மாநகரசபை, தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர் யாழ் மாவட்டம். )

7.திரு. அரியகுட்டி பரம்சோதி, (உறுப்பினர் தமிழரசுக் கட்சி, யாழ் மாநகரசபை தெரிவு செய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம்.)

8. திரு. கஜதீபன் (உறுப்பினர் தமிழரசுக் கட்சி, பிரதேச சபை, வேட்பாளர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தெரிவு செய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம்.)

9.திரு. சுகீர்தன் (உறுப்பினர் தமிழரசுக்கட்சி, பிரதேச சபை, தெரிவு செய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் யாழ் மாவட்டம்)

10 .திரு ரி.லிங்கநாதன் ( மத்திய குழு உறுப்பினர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தெரிவுசெய்யப்பட்ட மாகாணசப உறுப்பினர் வவுனியா மாவட்டம்.)

 

இங்கு அடையாளப்படுத்தப்பட்ட கெளரவ உறுப்பினர்களாகிய நீங்கள்? தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னர், ஊடகங்கள் வாயிலாக குறித்த அரசியல் கட்சிகளில் அங்கத்தவர்களாக இருந்தமை உறுதி செய்யப்படுகின்றது.

 

எமது கோரிக்கையினை ஏற்று அறிக்கை விடுவீர்களாக இருந்தால்? கெளரவ முதலமைச்சர் அவர்கள் மாகாணசபையை சுயாதினமாக இயக்குவதற்கு இசைவானவர்களை நியமித்து வினைத்திறனுடன் செயற்பட முடியும் என்று நம்புவோமாக.

 

இவை நடைபெற்றால் நீங்கள் பத்துப்பேரும் உன்னதமான உத்தமர்கள் இல்லையெனில் பதவிக்கு காத்திருக்கு…….கள் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.

 

நன்றி,

 

என்றும் தமிழ் தேசியக் கூட்டமப்புக்காக

பணி செய்ய மட்டும் காத்திருக்கும்,

 

சாமானியன்

 

http://www.canadamirror.com/canada/16377.html

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.