Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதியமைச்சர்கள் சிலர் புதிதாக இன்று சத்தியப்பிரமாணம்! நாமல், ஶ்ரீரங்கா, திகாம்பரம் ஆகியோரும் பட்டியலில்?

Featured Replies

Ministry_New.jpg
 
21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பிரதியமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சத்தியப்பிரமாணம் இன்று காலை 9 மணி முதல் 11 வரையில் இடம்பெறும் என அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
13 முதல் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இதன் உறுதியான எண்ணிக்கை குறித்து எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை.
 
இரண்டு முறை மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய 12 எம்.பிக்களுக்கும், கடந்த பொதுத் தேர்தலின் போது, அதிக விருப்பு வாக்குகளை பெற்ற 04 பேருக்கும், சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பேருக்கும் இந்த அமைச்சப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
 
இதில் முக்கியமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 18ஆவது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா, தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ப.திகாம்பரம் ஆகியோருக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் சில பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

புதிதாக ஒன்பது பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை காலை புதிதாக ஒன்பது பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பிரதியமைச்சர்களாக நியமனம் பெற்ற மேற்படி ஒன்பது நாடளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய (மாத்தறை), லக்ஷ்மன் வசந்த பெரேரா (மாத்தளை), விக்டர் அன்டனி (புத்தளம்), சரத் வீரசேகர (அம்பாறை), மொஹான் லால் கிரேரோ (கொழும்பு), நிஷாந்த முத்துஹெட்டிகம (காலி), வை.ஜி.பத்மசிறி, ஹிமால் குணசேகர மற்றும் சரத் முத்துகுணரத்ன ஆகியோரே பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

tamil.dailymirror

  • தொடங்கியவர்

பிரதியமைச்சர்களாக ஒன்பது பேர் சத்தியப்பிரமாணம்!

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று காலை பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய (மாத்தறை), லக்ஷ்மன் வசந்த பெரேரா (மாத்தளை), விக்டர் அன்டனி (புத்தளம்), சரத் வீரசேகர (அம்பாறை), மொஹான் லால் கிரேரோ (கொழும்பு), நிஷாந்த முத்துஹெட்டிகம (காலி), வை.ஜி.பத்மசிறி, ஹிமால் குணசேகர, சரத் முத்துகுணரத்ன ஆகியோரே பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் சில தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பி.க்கள் சிலரும் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளக் கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும் சிங்கள எம்.பிக்கள் மாத்திரமே பிரதியமைச்சர்களாக நியமனம் பெற்றனர்.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.