Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலேஸ் சர்மா மீது கனடா நேரடித் தாக்குதல் – சிறிலங்காவின் கைக்கூலி என்று விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்காவுக்கு உடந்தையாகச் செயற்படுவதாக, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மீது கனடா நேரடித் தாக்குதலைத் தொடுத்துள்ளது. 

சிறிலங்கா தலைமையையும், அதன் எல்லா தவறுகளையும் தற்காத்துக் கொள்ள உடந்தையாக இருப்பவர் என்று கமலேஸ் சர்மாவை, கொமன்வெல்த்துக்கான கனேடிய சிறப்புத் தூதுவர் ஹியூ சீகல், விமர்சித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டதால், கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். 

அத்துடன், கொமன்வெல்த்துக்கு நிதியுதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடான கனடா, கமலேஸ் சர்மா தலைமையிலான கொமன்வெல்த் செயலகத்துக்கு ஆண்டு தோறும் அளித்து வரும் 12 மில்லியன் பவுண்ட் நிதியுதவியை மீளாய்வு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, கொமன்வெல்த் பேச்சாளர் றிச்சர்ட் உக்கு, கனடாவின் முடிவை மதிப்பதாகவும், ஆனாலும், 2009இல் கொமன்வெல்த் தலைவர்கள் ஒருமனதாக எடுத்த, 2011இல் உறுதிப்படுத்திய முடிவுக்கமையவே கொழும்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும், அனைத்துலக சட்டத்தை மீறும் வகையிலும், சிறிலங்காவின் தலைமை நீதியரசரை பதவி நீக்கிய ராஜபக்சவுக்கு, மறைமுகமாக முக்கியமான சட்ட ஆலோசனையை இந்திய இராஜதந்திரியான கமலேஸ் சர்மா வழங்கியதாக, ஹியூ சீகல் குற்றம்சாட்டியுள்ளார். 

கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்கா நடத்தக் கூடாது என்றும், அதனை, கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“கடந்த ஏப்ரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சரின் சார்பில், சிறிலங்கா உண்மைகண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். 

ரொறன்ரோவுடன் போட்டியிடும் அளவுக்கு அதிசயமான புதிய நெடுஞ்சாலைகளையும் கட்டடங்களையும் கொழும்பில் பார்த்தேன். 

யாழ்ப்பாணத்தில், தமிழ் நாளிதழ் ஒன்றினது ஆசிரியரின் பணியகத்தில், குண்டுதுளைத்த ஆசனத்தையும் நான் பார்த்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20131009109223

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.