Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடிக்குள் சிக்கியுள்ள கொமன்வெல்த்தும் கொழும்பும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அண்மைக்காலங்களில் கொமன்வெல்த் மாநாடு ஒன்று இந்தளவுக்கு விமர்சனங்கள், சர்ச்சைகளைச் சந்தித்ததில்லை. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாடு அந்தளவுக்கு மோசமான சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், மாநாட்டைப் புறக்கணிக்கும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது ஒன்றும் மாநாட்டைப் பாதிக்கப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் கனடாவின் முடிவு குறித்தும் கருத்துகள் குறித்தும் எதிர்கால உறவுகள் குறித்தும் விவாதிக்க கனேடிய தூதரக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது இருதரப்பு இராஜதந்திர முறுகல்களை இன்னும் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை மட்டும் கனடா எடுக்கவில்லை. கொமன்வெல்த் அமைப்பின் செயற்பாட்டுக்காக அளிக்கும் நிதியுதவியையும் மீளாய்வு செய்யப் போவதாக எச்சரித்துள்ளது.

ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே கொமன்வெல்த அமைப்பின் தலைவராக இருக்கப் போகிறார். மனித உரிமைகளை மதிக்காத இலங்கையின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் கொமன்வெல்த் அமைப்பை தள்ளாடச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டது கனடா.

கொமன்வெல்த் அமைப்புக்கு அதிகம் பங்களிப்புச் செய்வது பிரித்தானியா, அதற்கடுத்த நிலையில் உள்ள நாடு கனடா.

ஆண்டுதோறும் கனடா தான் வழங்கிவரும் 10 மில்லியன் பவுண்ட்ஸை இடைநிறுத்தினால் அல்லது வெட்டிக் குறைத்தால் கொமன்வெல்த் அமைப்பின் செயற்பாடுகள் கணிசமானளவுக்கு முடங்கிவிடும்.

கனடா மட்டுமன்றி பிரித்தானியா கூட இதே முடிவுக்குத் தான் வந்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1.5 மில்லியன் பவுண்ட்ஸ் வீதம் 3 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியா ஆண்டுக்கு 16 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியை கொமன்வெல்த் செயலகத்துக்கு வழங்கி வருகிறது. இலங்கை தலைமை வகிக்கப் போகும் அடுத்த இரண்டு ஆண்டுகளும் கொமன்வெல்த் செயலகத்துக்கு சோதனை தான்.

போதிய நிதி இல்லாமல் திட்டங்களைச் செயற்படுத்த முடியாத நிலை ஒன்று உருவாகும் போலத் தெரிகிறது.

கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினாலும் கூட கொமன்வெல்த்துக்குள்ளே தோன்றியுள்ள நெருக்கடிகள் தீரப் போவதில்லை. இலங்கை தலைமை வகிக்கும் இரண்டு ஆண்டுகளும் கொமன்வெல்த் அமைப்பு கலகலப்பு மிக்கதாகவே இருக்கப் போகிறது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் கருத்தில் கொண்டு கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனேடியப் பிரதமர் அறிவித்துள்ளார்.

இது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் சிக்கலான நிலைக்கு கொண்டு செல்லும் போலத் தெரிகிறது.

அதேவேளை கொமன்வெல்த் மாநாட்டினால் நெருக்கடியை எதிர்கொள்ளும் மற்றொருவர் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன்.

அவர் புறக்கணிக்க முடிவு செய்யவில்லை என்ற போதிலும் இந்த மாநாட்டை இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது. கொமன்வெல்த் அமைப்பின் கதாநாயகனாக இருப்பது பிரித்தானியாவே.

இந்த மாநாட்டில் இருந்து ஒதுங்கிவிட்டால் ஒரு காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கடைசி எச்சமாக உள்ள கொமன்வெல்த் அமைப்பும் தனது கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடும் என்ற கவலை அந்த நாட்டுக்கு உள்ளது.

அதனால் தான் இலங்கையின் உரிமைகள் நிலை குறித்த அதிருப்திகள் இருந்தாலும் பிரித்தானியப் பிரதமர் புறக்கணிப்பு முடிவை எடுக்கவில்லை.

இதுவே வேறொரு அமைப்பினது மாநாடாக இருந்திருந்தால் கனடா எடுத்த முடிவை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இந்த மாநாட்டில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை பற்றிய கவலைகளை எழுப்புவேன் என்று நடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

இது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தப் போகும் ஒரு விடயம். இந்தச் சிக்கலை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் கரிசனை கொண்டுள்ள நிலையில் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத நாடாக அவுஸ்திரேலியா உள்ளது.

சர்வதேச அரங்கில் இந்த மூன்று நாடுகளும் பெரும்பாலும் ஒரே நிலைப்பாடுகளைத் தான் வெளிப்படுத்தின.

ஆனால் அவுஸ்திரேலியா மட்டும் இலங்கை விவகாரத்தை கண்டும் காணாமல் இருக்கிறது.

அதற்குக் காரணம் தமது நாட்டுக்கு வரும் படகு அகதிகளை கட்டுப்படுத்த இலங்கை அரசின் உதவியும் ஆதரவும் அவுஸ்திரேலியாவுக்குத் தேவைப்படுகிறது.

அதனால் அவுஸ்திரேலியாவுக்கு மனித உரிமைகள் பற்றிய கவலைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு கொழும்பு வரப் போகிறார் அவுஸ்திரேலியப் பிரதமர் ரொனி அபோர்ட்.

இந்த மூன்று நாடுகளையும் விட கொமன்வெல்த்தில் உள்ள மிகவும் வலிமையான நாடு இந்தியா.

கொமன்வெல்த மாநாட்டு விடயத்தில் இந்தியா இன்னமும் மதில்மேல் பூனையாகவே நிற்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டுக்குச் செல்லக் கூடாது என்று தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்ற நிலையில் அவர் இது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டைப் புறக்கணித்தால் அது இலங்கைக்கு முழுமையான தோல்வியாகி விடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வரவழைக்க இலங்கை அரசாங்கம் எத்தகைய பிரயத்தனங்களை எடுத்தாலும் அவர் வருவாரா என்ற சந்தேகம் நீடிக்கவே செய்கிறது.

எல்லா கொமன்வெல்த் உச்சி மாநாடுகளிலும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்குபற்றியிருக்கவில்லை.

இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடந்த மாநாட்டுக்குக் கூட அவர் செல்லவில்லை.

அவையெல்லாம்மாநாட்டுப் புறக்கணிப்பாகக் கருதப்படவில்லை. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் நிலைமை அப்படியில்லை.

எத்தனை நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள் என்று ஒன்றுக்குப்ப பலமுறை எண்ணப்படுவார்கள்.

ஏனென்றால் புறக்கணிப்பு அழைப்புகள் விடுக்கப்படும் சூழலில் இந்த மாநாட்டுக்கு எத்தகைய காரணத்தை முன்வைத்து தழைலவர்கள் வராது போனாலும் அவர்கள் மாநாட்டைப் புறக்கணித்ததாகவே கணிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது இலங்கைக்கு பாதகமானதொரு விடயம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சில தனிப்பட்ட காரணங்களினால் மாநாட்டுக்கு வராது போனாலும் அவர் மாநாட்டைப் புறக்கணித்ததாகவே கருதப்படும். இதற்கிடையே கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள காலப் பகுதியில் எதிர்ப்புப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் கறுப்புக்கொடிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளமை இன்னும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது கொமன்வெல்த் மாநாட்டுத் தலைவர்களின் கண்களில் எந்த எதிர்ப்பும் தெரியாமல் மறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையாக இருந்தாலும் இதுவும் இலங்கை மக்களின் மனித உரிமைகளை நசுக்குகின்ற செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.

2011ல் பேர்தில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போதது அங்குள்ள பூர்வ குடிகள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த அவுஸ்திரேலியா தாராளமாக அனுமதித்தது.

ஆனால் அத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதன் மூலம் இலங்கை மனித உரிமைகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையே வலுப்படுத்தப் போகிறது.

இப்படியெல்லாம் சர்சசைகளுக்கு மத்தியில் கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் இலங்கை அரசாங்கம் அந்த அமைப்பின் கடந்தகால வரலாற்றை மறந்து விட்டது. கொமன்வெல்த் அமைப்பை பயன்படுத்தி உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முனைவதாக கனடா மீது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் பிஜி, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் மீது கொமன்வெல்த் அழுத்தங்கள், தடைகளை விதித்ததெல்லாம் இலங்கையின் கண்களுக்கு உள்நாட்டு விவகாரங்களின் மீதான தலையீடாகத் தெரியவில்லையா?

எவ்வாறாயினும் இலங்கை விவகாரத்தில் கொமன்வெல்த் அமைப்பு, எடுத்துள்ள நிலைப்பாடு எதிர்காலத்தில் இது போன்ற கடுமையான முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலைக்குள் கொமன்வெல்த் அமைப்பை தள்ளிவிடப் போகிறது.

எனவே கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாடு இலங்கைக்கு மட்டுமன்றி கொமன்வெல்த் அமைப்புக்கும் கூட சிக்கல்களையே ஏற்படுத்தப் போகிறது. அது குறுங்காலத்தில் தீர்ந்துவிடாது. நீண்ட நாட்களுக்கு நீடிப்பதாகவும் இருக்கப் போகிறது.

சுபத்ராhttps://www.facebook.com/RajhSelvapathi?ref=stream&filter=2

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.