Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகர்க்கப்படும் தமிழர்களுக்கான நியாயங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தகர்க்கப்படும் தமிழர்களுக்கான நியாயங்கள்

அக் 13, 2013
 
 
உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான நியாயங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம் அதனை மறுபரிசீலனைக்கு நிர்ப்பந்தப்படுத்தியது. 
 
vignes_003.jpgபயங்கரவாதக் குற்றச்சாட்டுடன், ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்குக் களம் அமைத்துக் கொடுத்த உலக நாடுகள் முள்ளிவாய்க்கால் கற்றுக்கொடுத்த பாடங்களுடன் சிங்கள ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்றம் சுமத்துகின்றன. 
 
இலங்கைத் தீவில் பாரியதொரு பேரவலம் நிகழப் போகின்றது என்று தெரிந்தும், அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிய ஐ.நா. பெருமன்றம், தனது கடமையிலிருந்து தவறித் தான் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டுள்ளது. 'நடைபெற்று முடிந்த கொடூரங்களுக்கு நீதி வழங்கத் தவறினால், சர்வதேச பொறிமுறை ஒன்றினூடாக சிங்கள ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படலாம்' என்ற எச்சரிக்கை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டும் உள்ளது. 
 
சிங்கள தேசத்தின் இரட்சகர்களாக இருந்து தமிழினப் படுகொலையை நிகழ்த்தவும், அதற்குப் பின்னரான காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களை உலக நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றவும் முடிந்த இந்திய ஆட்சியாளர்களால் இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாத நிலையும் உருவாகிவிட்டது. பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடாத்துவதன் மூலம் உலக நாடுகளின் அழுத்தங்களைக் குறைக்கலாம் என்ற இந்திய சூத்திரம் கனடாவினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் செயலாளராக உள்ள இந்தியரான கமலேஷ் சர்மா சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளதுடன், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
சிங்கள தேசத்தின்மீதான இத்தனை அழுத்தங்களுக்கும் தமிழீழ மண்ணில் சிங்கள தேசத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளும், போர்க் குற்றங்களும் ஆதாரங்களுடன் உலக அரங்கில் வெளிப்படுத்தத் தவறியிருந்தால், அத்தனையும் இலங்கைத் தீவினுள்ளேயே அடங்கிப் போயிருக்கும். 'இலங்கையில் நடைபெற்றது பயங்கரவாதத்திற்கெதிரான போர். தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லாமலேயே பயங்கரவாதிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுத்தோம்' என்ற சிங்கள ஆட்சியாளர்களின் முதல் அறிக்கையே முடிவறிக்கையாக வெளிவந்திருக்கும். 
 
IMG_3711.JPG
 
சிங்கள ஆட்சியாளர்களின் பெருமிதத்தைத் தாண்டி இலங்கைத் தீவிலிருந்து எந்தக் குரலும் கரை தாண்டி ஒலித்திருக்கமாட்டாது. அந்தச் சிங்களக் கனவை நிர்மூலமாக்கியவர்கள் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழகத்தின் தமிழுணர்வுக் கரங்களும்தான். புலம்பெயர் தமிழினம் பொங்கி எழுந்து, புலம்பிச் சரிந்த நிலையிலும், தமிழகத்தின் தமிழுணர்வு ஆன்மாக்கள் இன்னொரு பெரும் போரை சிங்கள இனவெறிக்கு எதிராக நடாத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தமிழகத்தின் ஆட்சிபீடத்தையே மாற்றி அமைத்தவர்கள், இந்திய ஆட்சியாளர்களையும் கிலி கொள்ள வைக்கின்றார்கள். 
 
இந்த நிலையில்தான், எந்தத் திசையிலிருந்தும், எந்த அழுத்தங்கள் மூலமும், எந்த ஆசை காட்டலூடாகவும் நீர்த்துப் போகச் செய்ய முடியாக பெரு நெருப்பாக எரியக்கூடிய தமிழகத்தின் தமிழின உணர்வுப் போர்க் களத்தின்மீதான எதிர்த் தாக்குதல் ஒன்றுக்கான திட்டம் மிக நுட்பமாகத் தீட்டப்பட்டது. தமிழீழ அரசியல் தளத்திலேயே அந்த எதிர்ச் சமருக்கான தளபதிகள் உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் மூலமான சமரும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 
 
அதாவது, எதிரியைத் தோற்கடிப்பதற்கு முன்னதாக, அவனது வளங்களையும், பலங்களையும் சிதைப்பது போலவே, இப்போது தமிழினத்தின்பால் எஞ்சியுள்ள அவர்களுக்கான நியாயங்கள்மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழர்களுக்கான நியாயங்கள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டால், அவர்களை முற்றாகத் தோற்கடித்துவிடலாம் என்பதே இந்தப் போர்ச் சூத்திரம். 
 
இப்போது, தமிழ்த் தேசிய தளத்தில் முன் நிறுத்தப்பட்டுள்ள விக்னேஸ்வரன் அவர்களது பணியும் அதை நோக்கியதாகவே உள்ளதை இத்தனை நாட்களில் தமிழ் மக்கள் நள்றாகவே உணர்ந்திருப்பார்கள். அதாவது, விக்னேஸ்வரன் மூலமாக 'தமிழர்களுக்கான நியாயங்கள்' மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. 
 
'எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கின்றோம். கணவன், மனைவி பிணக்கினுள் அடுத்தவர் தலையீடு அவசியமற்றது. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்க வேண்டும். பொதுநலவாய மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாதது கவலையைத் தருகின்றது.' என்ற விக்கினேஸ்வரனின் கருத்துக்களும், போர்க் குற்றவாளியாக உலகமும், தமிழின அழிப்புக் கொடூரனாகத் தமிழர்களும் கருதும் சிங்கள தேசத்தின் அதிபர் ராஜபக்ஷே முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதும் 'தமிழினத்தின் நியாயங்கள்' மீதான போர் நடவடிக்கைகளேயன்றி வேறில்லை. விக்னேஸ்வரனுக்கான நியாயங்கள் ஒருபோதும் தமிழினத்திற்கான நியாயங்களாக மாறப்போவதில்லை. 
 
- இசைப்பிரியா

 

நன்றி - சங்கதி24

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.