Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீ பீ சி யில் காடாற்று பற்றி -சேரன் .

Featured Replies

இணைப்புக்கு நன்றி அர்ஜுன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளில் நகரும் வரலாறு    

'Every poem is an attempt to reconcile history and poetry for the benefit of poetry.’
– Octavio Paz
 
விதையிற்குத் தமிழில் நீண்ட பராம்பரியம் இருக்கிறதுதொன்மையும் தொடர்ச்சியும்கொண்ட தொடரோட்டம் அதுகவிதைகளிற்கும் ஈழத்துத் தமிழர்களுக்கும் இடையில் இன்னும் நெருங்கிய உறவிருக்கிறதுபோராட்டங்களுக்கான அழைப்புக்களையும்,சுவரொட்டி வாசகங்களையும் மட்டுமில்லாது போராட்டங்கள் திசைமாறிப் போகின்றவிமர்சனங்களையும் கவிதைகளே அதிகம் முன்வைத்திருக்கின்றனநாளாந்த வாழ்வுஎந்தக் கணத்திலும் அறுபடலாம் என்கிற பதற்றம் உள்ள சூழ்நிலையில் எளிதாய்வாசிக்கவும்தங்கள் கருத்துக்களைப் பரப்புரை செய்யவும் கவிதை மிகச் சிறந்தஊடகமாய் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றதுஇங்கே நான் பரப்புரை எனச் சொல்வதுதமிழ்நாட்டில் வானம்பாடிகளின் கவிதை வகைமையை அல்லஇல்லாத புரட்சியைவலிந்து திணிப்பதற்கு மாறாக ஈழத்துக் கவிதைகளை அதன் சூழ்நிலையே பிரசவித்து,மெருகுபடுத்திகண்ணீரும் குருதியுமாய் வாசிப்பவருக்கு பரிமாற்றம் செய்திருக்கின்றன.
 
போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பை எவரும் மறுக்கவோ மறைக்கவோமுடியாதவளவிற்கு கவனிக்கத்தொரு நீண்ட பெண் கவிஞர்களின் தொடர்ச்சி ஈழத்தில்இருக்கின்றதுஇன்னமும் அந்தப் பரம்பரை 'சொல்லாத சேதி'களில் தொடங்கி 'ஒலிக்காதஇளவேனில்ஆகி, 'பெயரிடாத நட்சத்திரங்கள்எனத் தொடர்ந்து ஓளிர்ந்துகொண்டிருக்கின்றதுஅநேக பெண் கவிஞர்கள் -தொகுப்புக்களின் எண்ணிக்கையில்அல்லகவிதைகளின் தரத்தில்தான் என- சில தொகுப்புக்களோடு உறங்குநிலைக்குப்போய் விடஆண் கவிஞர்களோ நிறையத் தொகுப்புக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்இந்த விடயம் நல்லதா அல்லதா என்பதைக் கவிதையின் இரசனையாளர்களுக்கு விட்டுவிட்டு அண்மையில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளைப் பார்ப்போம்
 
kaadaatru-500x500.JPGசேரனின் இரண்டு தொகுப்புக்கள்அண்மையில் வெளிவந்திருக்கின்றன. ‘காடாற்று’ சேரனின் ஏழாவதுகவிதைத் தொகுப்புஇத்தொகுப்பிலிருக்கும் அநேககவிதைகள் 2009 மே மாதப்பேரழிவிற்குப் பிறகு எழுதப்பட்டவைஎன கவிதைகளில் காலம்குறிப்பிடாமலிருப்பினும்கவிதைகளை வைத்துத் துணிந்துகூறலாம்மற்றத் தொகுப்பு ‘A Second Sunrise’ என்கின்ற ஆங்கிலத் தொகுப்பு.இதுவரை சேரன் எழுதியகவிதைகளில் 50 கவிதைகள்தமிழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ‘காடாற்று’ என்பது  ஒருவகையில் நீத்தார் கடன் செய்வது. 1981ல் சேரனின் முதலாவது தொகுப்பான ‘இரண்டாவது சூரிய உதயம்’போராட்டத்திற்கான அழைப்பாய் இருந்திருக்கின்றதுஇன்று ஈழத்தில் தமிழருக்கானபோராட்டம் எங்கெங்கோ எல்லாம் -நாம் எவரும் நினைக்காதபடி- அலைபாய்ந்துகாடாற்றில் உள்ள முதற் கவிதையான ‘ஊழி’யில் வந்து நிற்கின்றதுஒருவகையில்இதுவரையான சேரனின் கவிதைத் தொகுப்புக்களை வைத்து, ஈழப் போராட்டவரலாற்றில் ஒரு மெல்லிய கோட்டையேனும் வரைந்து பார்க்க முடியும்.
 
சங்கக் கவிதைகளிலிருந்து எப்படி அன்றைய கால வாழ்வை ஒரளவுக்கு மீட்டுயிர்க்கமுடிகிறதோ, அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலங்களாய் நடந்தஆயுதப்போராட்டத்தை எதிர்காலத்தில் ஒருவர் ஆராய இக்கவிதைகளும் முக்கியஆதாரங்களில் ஒன்றாய் மாறிவிடவும் கூடும்.. 1980களில் யாழ் நூலகம்எரிக்கப்பட்டதிலிருந்து பல ஆவணக்காப்பகங்கள் போரின் நிமித்தம் கைவிடப்பட்டதன்பின், இன்றுவரை எஞ்சியிருக்கும், எளிதாய்க் காவிக்கொண்டிருக்கக் கூடியதுமானபதிவுகளாய் எஞ்சியிருப்பது கவிதைகள் மட்டுமாய்த்தான் ஈழத்தமிழருக்குஇருக்கின்றனஇந்த வகைக் கவிதைகளே இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்துபாலஸ்தீன நிலப்பரப்புக்கள் வரை தோற்றுப் போன புரட்சிகளை மட்டுமின்றிஇன்னமும்முடிந்துவிடாத போராட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.
 
காடாற்று தொகுப்பு ‘ஊழி-கடல்திணை மயக்கம்’ என மூன்று பிரிவுகளாய்ப்பிரிக்கப்பட்டிருக்கின்றது. 'எங்களுடைய காலத்தில்தான்ஊழி நிகழ்ந்தது...' எனத்தொடங்குகின்ற கவிதை  ‘அகாலத்தில் கொலையுண்டோம்/சூழவர நின்றவர்களின்நிராதரவின் மீது’ என மேற்சென்று இறுதியில் 'எல்லோரும் போய்விடோம்/கதைசொல்ல யாரும் இல்லை/  இப்போது இருக்கிறது/காயம்பட்ட ஒரு பெரு நிலம்அங்குமேலாய்ப் பறந்து செல்லஎந்தப் பறவையாலும் முடியவில்லைஎன இறந்தவர்களின்குரலில் சேரனால் கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.
 
உடல் என்கின்ற கவிதை..
.'கடலோரம் தலை பிளந்து கிடந்த
உடல்.
 
இறப்பினும் மூட மறுத்த கண்களின்
நேர்கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு.
ஆச்சரியம்.
தவிப்பு.
தந்தளிப்பு.
கொதிப்பு.
ஆற்றாமை.
முடிவற்ற ஒரு பெருங்கனவு.
 
இந்த உடல் எவரின் உடலமென்று வாசிப்பவருக்குச் சொல்லித்தான்தெரியவேண்டுமென்பதில்லை.
 
A Second Sunrise தொகுப்பிலிருக்கும் Colour என்கின்ற கவிதை பற்றி எனக்கிருக்கும்ஒரு விமர்சனத்தையும் இங்கே வைக்க வேண்டியிருக்கின்றது. இது ‘நிறம்; என்கின்ற பெயரில் ஏற்கனவே ‘மீண்டும் கடலுக்கு’ தொகுப்பில் வந்த கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பே. இக்கவிதையில் வீட்டற்றவன் அல்லது இரந்து காசு கேட்கும் ஒருவன்தெருவில் தனக்கு சில்லறைகளை அளிப்பவர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொண்டிருக்கின்றான்அந்த சமயம் கவிதைசொல்லி சில்லறை எதையும் அவனுக்குப் போடாமற் போகும்போது, அவன்  கெட்டவார்த்தையைதுவேசத்துடன் சேர்த்துப் பேசுகிறான் (F*** you, Paki) என்பதாய் கவிதை நீளும்.
 
second+sunrise.jpg
பொதுப்புத்தியில் இப்படி வீடற்றவர்களையும் இரந்து காசு கேட்பவர்களைப் பற்றியும் என்னவிதமானஅபிப்பிராயங்கள் இருக்கும் என்பதைப் பற்றி விதந்துகூறத்தேவையில்லைகனேடிய அரசு வழங்கும் நலவாழ்வு சம்பந்தமான உதவித்தொகை இருந்தாற் கூட -ஒருவர் ஒழுங்கான வேலையில்லாதவிடத்தில்-அந்தப் பணத்தை வைத்து மட்டும் உயிர் வாழ்ந்துவிடமுடியாது என்பதே இங்கு யதார்த்தம்சாதாரண வீட்டுவாடகையே அரசு கொடுக்கும் நலஉதவியை விடமேலதிகமாய்த்தான் ரொறொண்டோ போன்றபெருநகரங்களில் இருக்கின்றனஆனால்இதையெல்லாம் ஆராய்ந்தறியாமல்பல விசயங்களைத்தெரிந்த என் நண்பர்கள் கூட இந்த வீடற்றவர்களைப் பார்த்து 'ஏன் இவர்கள் எதையாவது ஒரு வேலைசெய்து பிழைக்கலாந்தானேஎன எளிதாகக் கூறிவிட்டுச்செல்கின்றவர்களாய் இருக்கின்றார்கள்.  இதே மாதிரியான கருத்தையே Occupy Wall street நீட்சியிலும் கனடாவிலும் முற்றுகைகள் நீண்டபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒழுங்காய் ஒரு முழுநேர வேலையில்லாதவர்கள் தான் என்ற கருத்து பலரால் பரப்புரை செய்யப்பட்டதும் நினைவு கூரக்கூடியது..
 
இன்றைய நெருக்கடியும்போட்டியுமுள்ள உலகில் ஒழுங்கான ஒரு வேலையைஎடுப்பது என்பது கூட எவ்வளவு கடினமென்று நம்மில் பலருக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லைஆக இப்படியான விளிம்புநிலை மனிதர்கள் பற்றி நாம்விமர்சனங்களை வைக்கும்போது மிகவும் கவனமாய் இருக்கவேண்டும்அதுவும்மானுடவியல்/சமூகவியல் சார்ந்த பேராசிரியராக இருக்கும் சேரனுக்கு இதைப்பற்றிச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லைஇவ்வாறு எழுதப்பட்டிருப்பதை யாரேனும் ஒருவர், இது தனிப்பட்ட ஒருவரின் அனுபவம் என்ற ரீதியில்எடுத்துக்கொள்ளக் கூடாதா எனக் கேட்கலாம்ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதந்தான். ஆனால் சேரன் போன்ற பொதுச்சமூகத்தில் நீண்டகாலம் இயங்குகின்ற ஒருவர் இவ்வாறு எழுதுகின்றார் என்றால் அது சோர்வையே தரக்கூடியது. ஆகவேதான் இது குறித்து கேள்வியெழுப்புதல் அவசியமென நினைக்கிறேன்.மேலும் எம் சமூகத்தில்சும்மா கெட்டவார்த்தை சொல்லும்போதே ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின்பெயரை முன்னே போட்டு (ப**** பு***) எனத் திட்டும்போது, அதற்கெதிராய்க் கொதித்தெழாது, எந்தச் சலனமும் செய்யாது -எருமைத்தோலின் மீது மழைபெய்தது மாதிரி- கடந்துபோவதாகவே நம் 'தமிழ்கூறும் நல்லுலகம்' இருக்கின்றது என்பதையும் இக்கணத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
 
(இன்னும் வரும்)
நன்றி: 'அம்ருதா'- ஜூன் 2012

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.