Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை - பொ.ஐங்கரநேசன்

Featured Replies

inkranesan.jpgவடக்கு கிழக்கு மாகாணத்துக்கு, அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு இயற்கை அளித்த மிகப்பெரும் கொடை பனைவளம். அந்தப் பனைமரங்களை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் நாம் யாரிலும் தங்கி வாழவோ அல்லது யாருக்கும் அடிபணிந்து வாழவோ வேண்டிய அவசியம் இல்லை என்று விவசாய அமைச்சர் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை றோட்டரக்ற் கழகம் முன்னெடுத்துள்ள இலங்கையில் ஒரு இலட்சம் பனைமரக் கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்க வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை (18.10.2013) சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பனைமரங்கள் இலங்கையில் தமிழர்தாயகமான வடக்குக்கிழக்கிலேயே பெருவாரியாகக் காணப்படுகின்றன. இங்கு ஏறத்தாழ 11 மில்லியன் பனைமரங்கள் உள்ளன. இவற்றில் 9.5 மில்லியன் பனைமரங்கள் வடமாகாணத்தில் வளர்ந்துள்ளன. உலகில் அதிக அளவு பனைமரங்கள் இந்தியாவிலே உள்ளது. அங்கும் 50 விழுக்காடுக்கும் அதிகமான பனைமரங்கள் தமிழ்நாட்டிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் பனைமரம் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம். வரண்ட வலயமான எமது பிரதேசத்தில் பெருங்காடுகள் இல்லாத குறையைப் போக்குபவையும் இந்தப் பனங்கூடல்கள்தான். ஆனால், சூழலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இந்தப் பனைவளத்தின் பயனை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ளாது இருக்கிறோம்.

எல்லா நாடுகளும் தங்களது இயற்கைத் தாவர வர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டே தமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் நாம் பனைமரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குரிய மரமாக ஒதுக்கி வைத்துள்ளோம். உலகில் ஒரு மரத்தை ஒரு சமூகத்துக்குரிய மரமாக ஒதுக்கிய சிறுமை அநேகமாக தமிழர்களையே சாரும். இதனால் கற்பகதருக்களான  பனைமரங்களின் பொருளாதாரப் பயனை இன்னும் நாம் குறைந்தபட்ச அளவிலேனும் அறுவடைசெய்யவில்லை. இந்நிலை மாற்றப்படவேண்டும். பனைப்பொருளாதாரத்தை  வளர்த்தெடுக்கும்முகமாக அது தொடர்பான கல்வியையும்,  நவீன தொழில் நுட்பங்களுடன்கூடிய தொழில் முறைமைகளையும் அறிமுகப்படுத்தவேண்டும்.  சமூகவேறுபாடுகள் அற்று எல்லோரும் இத்துறையில்  ஈடுபடக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும்.

போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தாவரம் பனைவளம்தான். பதுங்கு குழிகளையும், காப்பரண்களையும் அமைப்பதற்கு வெட்டி வீழ்த்தியதாலும், எறிகணை வீச்சுகளாலும் ஏறத்தாழ  4.5 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதும் பனை அழிப்புத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் அரச தரப்பினரின் ஆதரவோடு புதுக்குடியிருப்பில் மரக்காலை அமைப்பதற்காக 250 பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இயற்கையிலேயே பனை எவரது கவனிப்பும் அற்று வளரக்கூடியதாக இருந்தபோதும் அது  முளைதிறன் குறைந்ததொரு மரமாகும். நூறு பனைவிதைகள் நட்டால் அவற்றில் 35 விதைகளே முளைக்கின்றன. இதனால் இவ்வாறான பனைமர நடுகைத் திட்டங்களின் மூலமே இழந்த பனைவளத்தை நாம் ஈடுசெய்யமுடியும். வீதியோரங்களிலும் அரச காணிகளிலும் மாத்திரம் அல்லாது தரிசாக விடப்பட்டிருக்கும் தனியார் காணிகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் வலி.கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ப.சீவரத்தினம், றோட்டரக்ற் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் நாற்றுகளை நாட்டிவைத்தனர். இதன்போது நடப்பட்ட ஆயிரம் பனை நாற்றுகளையும் பராமரிக்கும் பொறுப்பை வலி.கிழக்குப் பிரதேச சபை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் பனை வழம் காக்கப்பட வேண்டும். அதற்கு முதல் பாதிக்கப்பட்ட இடங்களில் கைமேல் பலன் தரும் விவசாயம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

 

சும்மா பொருள் இல்லாமல் எல்லாம் பேசக்கூடாது. கவனமாக மக்களுக்கு ஏற்ற்வைகளை சொல்லி அவர்களின் வாழ்க்கைக்கு நேரடியாக உதவ வேண்டும்.

 

இயற்கையிலேயே பனை எவரது கவனிப்பும் அற்று வளரக்கூடியதாக இருந்தபோதும் அது  முளைதிறன் குறைந்ததொரு மரமாகும்

 

<_<

பனை வளத்தை பெருக்கினால் கையேந்தத் தேவையில்லை: ஐங்கரநேசன்

 

 

IMG_9960%20copy.jpg

-எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா

வடமாகாணத்தில் பனை வங்களை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்தால் நாம் யாரிடமும் தங்கியோ அல்லது அடிபணிந்து வாழவேண்டிய அவசியமில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை மற்றும் மாலைதீவு றோட்டறிக் கழகங்கள் ஆகியன இணைந்து இலங்கையில் ஒரு இலட்சம் பனம் விதைகள் நடும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

இதன் முதற் கட்டமாக சிறுப்பிட்டியில் 1000 பனம் விதைகள் நடும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தினை  ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு அமைவாகவே சிறுப்பிட்டியிலுள்ள இரண்டரை கிலோ மீற்றர் நீளமான விவசாயக் காணியில் மேற்படி விதைகள் நாட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி ஜுவரத்தினம், வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார், வெள்ளவத்தை றோட்டரிக் கழக தலைவர் எஸ்.லலித்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

இலங்கையில் பனை மரங்கள் அதிகம் காணப்படுவது தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலே ஆகும். இங்கு சுமார் 11 மில்லியன் பனை மரங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் 9.5 மில்லியன் பனை மரங்கள் இருக்கின்றன.

 

உலகிலே அதிகமான பனை மரங்கள் இந்தியாவில் அதுவும் 50 விழுக்காடுகளுக்கும் அதிகமான மரங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இதிலிருந்து பனைமரங்கள் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம் என்பது புலப்படுகின்றது.

வடமாகாணம் வரண்ட பிரதேச வலையமாகவிருப்பதினால் பெருங்காடுகள் இல்லையென்ற குறையினை இந்தப் பனந்தோப்புக்கள் பூர்த்தி செய்கின்றன. 

சூழவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பனை வளத்தின் பயன்கள் பற்றி நாம் முழுமையாக இன்னமும் உணர்ந்து கொள்ளாது இருக்கின்றோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களது இயற்கைத் தாவர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் நாம் பனை மரத்தை குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்குரிய மரமாக ஒதுக்கி வைத்துள்ளோம்.

உலகத்திலேயே ஒரு மரத்தை ஒரு சமூகத்திற்குரிய மரமாக ஒதுக்கிய சிறுமை மனப்பாங்கு தமிழர்களையே சாரும். 

கற்பகத்தருக்களான (பனை மரத்திலிருந்து கிடைக்கும் பயன்கள்) பனை மரங்களின் பொருளாதாரப் பயனை குறைந்த பட்சமேனும் இன்னும் நாங்கள் அறுபடை செய்யவில்லை. இந்நிலை மாறி பனைப் பொருளாதாரத்தினை வளர்த்தெடுப்பதற்கான கல்வியையும், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் முறைமைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். சமூக வேறுபாடுகளற்று எல்லோரும் இத்துறையில் ஈடுபட வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தாவரமாக பனை மரம் காணப்படுகின்றது. யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பனை மரங்களை பதுங்கு குழிகள், காப்பரண்கள் அமைப்பதற்கு வெட்டி வீழ்த்தியதாலும், எறிகணை வீச்சுகளாலும் ஏறத்தாழ  4.5 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இப்போதும் பனை அழிப்புத் தொடர்ந்து கொண்டோதான் இருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் அரச தரப்பினரின் ஆதரவோடு புதுக்குடியிருப்பில் மரக்காலை அமைப்பதற்காக 250 பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.

 

பனை மரங்கள் இயற்கையிலேயே எவரது கவனிப்பும் அற்று வளரக்கூடியதாக இருந்தபோதும் அது முளைதிறன் குறைந்ததொரு மரமாகும். நூறு பனை விதைகள் நட்டால் அவற்றில் 35 விதைகளே முளைக்கின்றன. இதனால் இவ்வாறான பனைமர நடுகைத் திட்டங்களின் மூலமே இழந்த பனை வளத்தை ஈடுசெய்ய முடியும். வீதியோரங்களிலும் அரச காணிகளிலும் மாத்திரம் அல்லாது தரிசு நிலங்களாக விடப்பட்டிருக்கும் தனியார் காணிகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_9972%20copy.jpg

IMG_9945%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.