Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா-சிறிலங்கா ஆலோசனையில் 'சுதந்திர வர்த்தக உடன்படிக்கை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The%20meeting-%20China%20-%20Slanka.jpg

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, சிறிலங்காவின் ஆடை மற்றும் கைத்தறி தொழிற்சாலைகளின் அபிவிருத்திக்கு உதவுவதுடன், இதன்மூலம் சிறிலங்காவின் வறுமைக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் வறுமைநிலையை இல்லாதொழிக்கும். 

சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், சிறிலங்காத் தீவின் கிராமங்களில் வேலையற்ற பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்காகக் கொண்டு தைத்த ஆடைகளை சந்தைப்படுத்துவதற்கான அனைத்துலக சந்தைகளை கண்டறிவதற்கும் சீனாவுடன் மேற்கொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சீன முதலீட்டாளர்கள் உதவுவார்கள் என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக சீன வர்த்தக அமைச்சின் அனைத்துலக வர்த்தகத்திற்கான பிரதி அமைச்சரான யூ ஜியன்குவ தலைமையிலான சீனப் பிரதிநிதிகள் நேற்றையதினம் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இக்கலந்துரையாடலின் போது, சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியானது முன்னேற்றமடைந்துள்ளதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார். சிறிலங்காத் தீவின் விவசாயத்தை முன்னேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு தனது பாராட்டையும் அமைச்சர் தெரிவித்தார். சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தாம் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாகவும் சீன அமைச்சர் வாக்குறுதியளித்திருந்தார். 

பல பத்தாண்டுகளாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகள் பேணப்படுவதாகவும் இதில் குறிப்பாக 1952 இறப்பர்-அரிசி உடன்படிக்கையானது (Rubber-Rice Pact) மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகவும் சீன அமைச்சர் ஜியான்குவா நினைவூட்டினார். 

சீனாவைப் பொறுத்தளவில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இறப்பர்-அரிசி உடன்படிக்கையிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளில் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள சீன-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது மிகவும் பெரிய முதலீடு என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜபக்ச விரிவாக விளக்கிய அதேவேளையில், வேலைவாய்ப்பற்ற பெண்களின் எண்ணிக்கையைக் குறைத்து பெண்கள் பல்வேறு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

வருகின்ற மாதங்களில் பெருமளவிலான சீனச் சுற்றுப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தருவார்கள் என அமைச்சர் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டதுடன், சீனாச் சுற்றுப் பயணிகள் பெருமளவில் சிறிலங்காவுக்கு வருவதை உந்துதலளிப்பதாக ஏற்கனவே 100 வரையான சீனப் போக்குவரத்து முகவர் அமைப்புக்கள் உடன்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சிறிலங்காவின் தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் செயலர் அனுரா சிறிவர்த்தனே, சீனாவுக்கான சிறிலங்காத் தூதுவர் றஞ்சித் உயன்கொட, சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் வர்த்தக ஆலோசகர் வாங் லிப்பிங் மற்றும் இத்திணைக்களத்தின் பிரதி இயக்குனர் குவாங் சாங்பெங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131019109276

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.