Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் சமகால நகர்வின் போக்கும், ஏமாற்றங்களும்

Featured Replies

        

 

 

     மாகாணசபை தேர்தல் வெற்றியால் இனமான மகிழ்வின் உச்சத்தில்  இருந்த மக்களை சடுதியாக தரையில் இறக்கி  உள்ளனர்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒன்றுபட்டு திரண்டெழுந்து அல்லது திரண்டெழும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி, மக்களிடமிருந்து மகத்தான ஆதரவினை பெற்ற பின் ஒன்றுபட்ட அந்த மக்கள் திரளினை அப்படியே கை விட்டு விட்டு ஏற்கனவே தங்களுக்கென  நிர்ணயிக்கப்பட பாதையில் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளனர் எனலாம். ஒரே பாதையில் பேரணியாக வந்து அந்த பாதை பிரியும் இடத்தில், பதவிகளை கையகப்படுத்தியவர்கள் இரு பாதைகளாலும் பிரிந்து செல்லத்தொடங்க அவர்களால் அழைத்துவரப்பட்ட மக்கள் சந்தியில் நின்றுகொண்டு மீண்டும் தங்களுக்குள் முரண்படத் தொடங்கியுள்ளனர்.

     

       இத்தகைய செயற்பாடுகள் தமிழர் அரசியல் மேடைகளில் முன்னர் பல தடவைகள் அரங்கேறி இருந்தாலும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்பின், ஆயிரமாயிரம் வேங்கைகளின் உயிர்த்தியாகங்களுக்கு பின், ஆயுத அரசியல் வெற்றிடமொன்று உணரப்பட பின்,  இனப்படுகொலை குறித்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் பாரிய போராட்டங்களை நிகழ்த்தும் இன்றைய சூழலில், எல்லாவறையும் விட நியாய பூர்வமான அரசியல் தீர்வொன்றினை கோரக்கூடிய சூழலில்,  ஒரே பிரதிநிதியாக இருக்கும்  அவர்களுக்கு பூரணமான ஆதரவு வழங்க வேண்டும்  என்ற கருதுகோளின் பலனாகவே இவர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரித்திருந்தனர்.

       

       மக்களின் மனங்களில் அதிகாரம் குறித்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அதீதஆவலை உருவாக்கியதுடன், ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவு சக்தியினை அதிகாரங்களுகாகவும் சுயலாபங்களுக்காகவும் தங்களை சார்ந்து இருக்கும் நிலையையும் உருவாக்கினர் கூட்டமைப்பினுள் தனி ஆவர்த்தனம் புரியும் உறுப்பினர்கள் சிலர்.   மக்களுக்கு தங்களால் வழங்கப்பட அந்த அதித நம்பிக்கையை சிதைப்பதன்  மூலம் ஏகோபித்து வாக்களித்த மக்கள் திரளினை பிளவடைய செய்வதன் மூலம் மக்களிடையே ஒரு அரசியல் சலிப்பினை உருவாக்கி மக்களிடம் இருந்து அந்நியப்பட  முனைகிறார்கள்.

 

         உண்மையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் என்பது ஒரு சடங்கே. அதன் மூலம் தமிழர் தரப்போ அல்லது சிங்கள பேரினவாத அரச பிரதானிகளோ பெரிய அளவில்  பயன் அடைவார்கள் என்றால் அது மிகையான ஒரு மனப்படிமம் ஆகும். ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஜனாதிபதி முன்னால் பதவிப்பிரமாணம் செய்யமாட்டோம் என அறிவிப்பு செய்ததே  கூட்டமைப்பின் பேசவல்ல பிரதானிகள்தான். வெற்றி மிதப்பில் இருந்த மக்களுக்கு அந்த செய்தியானது ஒரு அதிகபட்ச பெருமிதத்தை வழங்கி இருந்தது. அதற்கு மாறாக முதலமைச்சர்  ஜனாதிபதி முன்னால் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள அதனை ஏற்றுக்கொள்ள அந்த வெற்றிப்பெருமிதம் இடம் தரவில்லை.ஆனால் இந்த நிலை நோக்கி கூட்டமைப்பினை நகர்த்தியது கூட்டமைப்பினை பிளவடைய செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான். அதில் ஓரளவு வெற்றியையும் பெற்றுள்ளனர் எனலாம்.

         

   சம்மந்தர் யாழ்ப்பாணத்தில் வைத்து சிங்கக்கொடியை ஏந்திய போதிலும், ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த போதிலும், சம்மந்தரின் விடுதலைப்புலிகள் பற்றிய அவதூறுக்  கூற்றுக்களின் போதிலும், சுமந்திரனின் அறிக்கைகளின் போதிலும், ஏன் இறுதியாக முதலைமைச்சர் தெரிவின் போதிலும்  கருத்துக்களோடு மட்டும் நின்றிருந்த கூட்டமைப்பினர், இந்த வடமாகாண சபை தேர்தலின் பின்னான செயற்பாடுகளால் தங்களுக்குள் முரண்பாடுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்றால் அதில் மறைந்திருந்து முரண்பாடுகளை உருவாக்கும்  சக்தியை இனம் காணவேண்டியதும் அவசியமாகும்.

 

   சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசின் மீது  அதிகரித்திருக்கும் இந்த வேளையில் அந்த அழுத்தங்களில் இருந்து இலங்கையை காப்பாற்றும் ஒரு போர்வையாக மாறி மாறி இருந்து கொண்டு இருகின்றன உலக ஒழுக்கில் இரு திசைகளில் இயங்கும் இரு நாடுகளும். அதனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தமது நிறங்களை மாற்றிக் கொள்கிறார்கள் பேரினவாதிகள். கூட்டமைப்பின் மூலம் அரசுக்கு ஒரு நெருக்குதலை கொடுத்து தனது பிடியினை இறுக்கமாக வைத்திருக்கவே இந்திய அரசு விரும்புகிறது. இதை கூட்டமைப்பும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. இலங்கை அரசும் புரிந்து கொண்டுள்ளது. கூட்டமைப்பானது தங்களை  மீறி சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருதரப்புக்களும் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றன. ஆனால் கூட்டமைப்பின் அதிகபெரும்பான்மை உறுப்பினர்கள்   இலங்கை அரசினை சார்வதனை விட இந்திய அரசினை சார்ந்து போவதை அதிகம் விரும்புகிறார்கள். தமது நலன் சார்ந்தே சிந்திக்கும் இந்திய அரச இயந்திரம் தமது நலன் சார்ந்த ஒரு தீர்வினைதான் இலங்கை அரசின்மீது திணிக்க காத்திருக்கிறது. கூட்டமைப்பினராலும் இந்திய அரசின் கரங்களை கடந்து மாற்று உலகினரோடு கைகோர்க்கும் எண்ணமும் இல்லை. எதுவென்றாலும் இந்தியா பார்த்துக்கொள்ளும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.

 

 

           அதேவேளை இலங்கை அரசானது தனது பயணத்தில் மிக நெருக்கமாக   தவிர்க்க முடியாத இரண்டு ஆறுகளை கடக்கவேண்டியும்  உள்ளது. அது கொமென்வேல்த் மாநாடு, மற்றும் ஜெனிவா கூட்டதொடரும் ஆகும். இலங்கை அரசைப்பொறுத்தவரை தமிழ் தேசிய கூடமைப்பு ஆட்சிசெய்யும் வடமாகாண சபை ஒரு நல்ல படகாக இருக்கிறது அதனை முழுமையாக பயன்படுத்தவும் விளைகிறது.

       

          ஒரு மாடு மேய்ப்பவன் எப்படி நாணயக் கயிற்றினை இளக்கிவிட்டு மாட்டினை மேய அனுமதிப்பானோ அதுபோலத்தான் இலங்கை அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வடமாகாணசபையை விட்டுள்ளது. மாடு எப்போது  தனக்கு விதிக்கப்பட எல்லைகளை கடந்து நாக்கினை நீட்டுகிறதோ அப்போது ஆளுநர் என்ற நாணயக்கயிறும் வேலை செய்யும். மாடு தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று துள்ளலாம், குதிக்கலாம் ஏன் பக்கத்து மாடுகளை சண்டைக்கு கூட இழுக்கலாம். ஆனால் விதிக்கப்பட எல்லையை மட்டும் தாண்ட கூடாது. நாணயக்கயிறுக்கு சில மணிகளை அண்மையில் இலங்கை உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாக வழங்கியும் இருக்கிறது.தனது தேவையானது நிறைவேறிய பின்னர் கட்டையில் கொண்டுபோய் காட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் கண்டுகொள்ளாமல் இருக்கிறது அரசு.

 

     ஆக சமகால அரசியல் நகர்வுகளை தங்களுக்கு சாதகமாக்கும் வகையில் தான் இந்திய இலங்கை அரசுகள்  தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்த விளைகின்றன எனலாம். இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் அதிகபட்ச அரசியல் கோரிக்கையில் இருந்து விலகாது,  அந்த கோரிக்கைளை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில் தமது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

 

         இது இவ்வாறு இருக்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது உறுப்பினர்களால் மூன்று திசைகளில் இழுக்கப்படுகிறது. ஒருபக்கம் இந்திய அரசின் கரங்களூடாக தீர்வினை எதிர்பார்க்கும் குழுவினர், மறுபக்கம் மகிந்த அரசின் நம்பிக்கையை பெறுவதன் மூலம் தீர்வினை எட்டலாம் என கருதும் குழுவினர், இவை இரண்டையும் விடுத்து கடும் தேசியவாதிகளாக காட்டிகொள்ளும் அல்லது இருக்கும் ஒரு குழுவினர்.

 

   இந்தநிலை மாற்றப்பட வேண்டியது இன்றைய சூழலில் அவரச தேவையாகும். அதற்கு முதலில் கூட்டமைப்பானது இனப்பிரச்சனை தொடர்பிலான இறுதித்தீர்வு என்ன என்று சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும். அதன் மூலமே கூட்டமைப்புக்குள்ளும் சரி, மக்களுக்குள்ளும்  சரி நிகழும் குழு வேறுபாடுகளை களைய முடியும். மக்களும் கூட்டமைப்பினருக்கு வாக்களித்தோடு தங்களின் கடமை முடிந்துவிட்டது என்ற நிலைப்பாடில் இருந்து மாறி, கூட்டமைப்பினரை கண்காணிக்கவும்,தவறும் பட்டசத்தில் எதிர்ப்பினை பதியவும் முன்வரவேண்டும்.

 

         போராட்டத்துக்கான அடிப்படைக்காரணம் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் அப்படியேதான் இருக்கிறது. சில சலுகைகளை வழங்குவதன் மூலம் தமிழர் தரப்புகளை அமைதிப்படுத்தி, சமரசப்படுத்தும் நோக்கில் இன்றைய புற சக்திகள் இயங்குகின்றன. அந்த புற சக்திகளின் ஆளுகைக்குற்பட்டு தமிழ் தேசியமானது அமைதியடைந்தால் காலப்போக்கில் தமிழினம் அழிக்கப்படுவதோடு நிகழ்ந்து முடிந்த இனப்படுகொலைக்கும் ஒரு நீதி கிடைக்காமல் போய்விடும்.

 

         பெரும் அழிவில் இருந்து இன்னும் மீளாத ஒரு இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் உறுப்பினர்கள் தங்களின் தார்மீக பொறுப்புகளை உணர்ந்து கொண்டு வீண் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிர ஒரு குறுகிய குழுமத்துக்கு சார்பானவர்களாக  தங்களை மூடி வைத்திருக்க கூடாது. மகுடம்  சூட்டுவதும், வெடிகொளுத்தி ஆரவாரிப்பதும் விருந்துகள் மாலைகள் பாராட்டு மேடைகளை நாடுவதும் மக்கள் மனதில் ஒருவகையான ஏமாற்றத்தினை தான் உருவாக்கும். மிகப்பெரிய இடைவெளிகளை உருவாக்கும். அது இனிவரும் காலங்களில் தேர்தல்களில் எதிரொலிக்கும். பேரினவாத அரசும் அரசோடு இணைந்திருப்பவர்களும்  எதிர்பார்ப்பது இதைதான். புரிந்துகொள்வார்களா கூட்ட்டமைப்பின் தலைமையும், உறுப்பினர்களும்.

 

நன்றி      

http://www.ponguthamizh.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=2dff4464-d619-4d0e-a898-6ee460eafde2

   

 

   

  • கருத்துக்கள உறவுகள்

 

     

 புரிந்துகொள்வார்களா கூட்ட்டமைப்பின் தலைமையும், உறுப்பினர்களும்.

  

 

தமிழனைப் பெரும்பாலும் இந்துமத சரித்திர, இதிகாசங்களே அரவணைத்துச் செல்கிறது. இந்துமதத்தின் பூரண உரிமைபெற்ற ஆரியன் கூட அந்த அரவணைப்பில் தமிழனைப்போல் மயங்கி இருப்பதில்லை. இந்துசமயத்தைக் கூர்ந்து கவனித்தால் அது ஒவ்வொரு மனிதனையும் அவனது பிறப்பை நிறுத்தி முக்தி பெறுவைக்கும் நோக்கிலேயே இட்டுச் செல்கிறது. பெரும் சாம்ராஜியங்களை ஆண்ட அரசனைக்கூட முடிவில் தனித்துவத்தை நாடி கானகம் செல்ல வைத்துவிடுகிறது. அதனால் ஒவ்வொரு மனிதனும் தனித்துவ உணர்வையே பெறுகிறான். கூடியிருக்கும் போதும் தனித்த உணர்வின் திறனே அவனுள் ஊற்றெடுக்க அந்த மதத்தின் இயல்பு பழக்கப்படுத்தியும் விடுகிறது. இத்தன்மை தமிழின் இயல், இசை, நாடகம் என்ற முக்கலைகளிலும் ஊறிப்போயுள்ளதால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வேறு மதத்தைத் தழுவி வாழ்பவர்களும், தனித்துவ உணர்வின் திறனிலேயே அழுந்திப்போயிருப்பது தவிர்க்க இயலாது போய்விடுகிறது. ஆகவேதான் தமிழினத்தில் தோற்றம்கொள்ளும் தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் கூட்டமைத்திருந்தாலும் அங்கு ஒற்றுமையாக ஒன்றுபட முடியாத நிலமை ஏற்படுவதைக் காணலாம். <_<   
 
அன்னம் பாலருந்துவதுபோல், இன்றைய உலகின் போக்குகளுக்கு ஏற்றபடி வாழக்கூடியதாக, இந்து மதத்திலிருக்கும் ஆன்மீக வழிகளைத், தமிழர்கள் பின்பற்றிச் செல்லச் செய்வதே அவர்களின் சமுதாயத்திலிருந்து ஒற்றுமை பேணும் நல்ல தலைவர்களையும் தோன்றச் செய்யும். இதற்குப் பல தலைமுறைகளைக் கடக்கவேண்டியதும் தவிர்க முடியாதது. தலைமுறைகள் கடக்கவேண்டிய தேவை இல்லாது இன்றைய சமுதாயத்தில் சிறிது மாறுபட்டுப் பிறந்த ஒரு தலைவனால் மாற்றங்கள்  ஏற்படலாம் என்ற நம்பிக்கை பிறந்தபோது அவன் காணாமல் போகடிக்கப்பட்டது தமிழினத்தின் தூரதிஸ்டமே. :(        
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.