Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ASHES- வரலாறு .

Featured Replies

 

இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில்  ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே  அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள்   TONY GREIG, GEOFF BOYCOTT   லெவலுக்கு   புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை  கேட்டுத்தான்.

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர்  பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இறங்கிவிட்டத்தில் என்னுடன் முரண்பாடும் இடைக்கிடை வரும். அவர்களுக்கு அதை இரத்தத்தில் கலக்க வைத்த பெருமை பிரிட்டிஷ் ஊடகங்களையே சாரும்.

போன மாதமும் இதுதான் நடந்தது.  நான் நண்பனை தொலைபேசியில் அழைக்க, நாட்டில் எவ்வளவோ முக்கிய செய்திகள் இருக்க அவன்,

“மச்சான்  ASHES  தொடங்கிவிட்டது. இரண்டாவது டெஸ்ட் லோட்சில பார்க்க  டிக்கெட் வாங்கி வைத்திருக்கின்றேன். முதல் மாட்ச்சில்  பெரிய விடயமே ASHTON AGAR  இன் 98 ரன்கள் தான். அவன் யார் தெரியுமோ? அவனது தாயார் இலங்கை தகப்பன் ஆஸி . இடது கை சுழல் பந்து வீச்சாளர். பதினோராவது இடத்தில் துடுப்பாட போய் 98 ரன்கள் அடித்து உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்” என்றான்  .

மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் முத்தரப்பு 50 ஓவர் போட்டிகளில் டோனியின் தனிநபர் சாகசங்கள் பற்றி கதைத்தாலாவது  ஆர்வமாக கேட்கலாம், அதுவும் இலங்கையுடன் நடந்த இறுதி ஆட்டத்தில் அந்த கடைசி பந்து சிக்ஸருடன் மாட்சை முடித்த அழகு பற்றி மணிக்கணக்கில் கதைக்கலாம் அதைவிட்டு இப்போ எவனும் பார்க்காத  ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் மாட்ச் பற்றி கதைக்கின்றான் .இந்த நாளில் எவனுக்கு டெஸ்ட் மாட்ச் பார்க்க பொறுமையிருக்கு. ஐந்து நாட்கள் நடந்த கிரிக்கெட் மாட்ச்  ஐம்பது ஓவர்களாகி இப்ப இருபது ஓவர்களில் வந்து நிற்குது .

“ நான் பெரிதாக டெஸ்ட் மாட்ச் இப்போ பார்ப்பதில்லை” என்றேன்

“நானும் தான், ஆனால் ASHES  என்றால் அது ஒரு தனித்தன்மை வாய்ந்தது, இந்த முறை ASHES  மீண்டும் இங்கிலாந்து தக்க வைக்க வேண்டும் ,கட்டாயம் தக்க வைப்பார்கள், எங்கட (இங்கிலாந்து) அந்த மாதிரி டீம் மச்சான் .

மற்றது கேட் மிலிட்டன் பிள்ளை பெறுவிற்கு ஆசிப்பதிரியில் இருக்கும் போது .ஒரு இருபது பவுண்சிற்கு பெடியன் என்று பெட் கட்டி கொஞ்ச காசு வென்றேன் என்று சொல்ல நான் கடுப்பேறி BYE  என்று தொலைபேசியை வைத்துவிட்டேன் .

மச்சான் லோட்சில டெஸ்ட் மாட்ச் பார்க்க டிக்கெட் வாங்கி வைத்திருக்கின்றார் .நானும்  LORDS மைதானத்தில் ASHES  பார்க்க போன ஆள்தான் .அந்த அனுபவமே ஒரு தனி .

வெள்ளைகாரன் தனது பாரம்பரியத்தை எப்படி கட்டி காப்பாற்றுகின்றான் என்று கண்ணால் கண்டு உணர்ந்த நாள் அது.  இளவயதினரில் இருந்து பென்சன் எடுத்தவர்கள் வரை அவர்கள் விதம் விதமாக, சிலர் தமக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள் போல உடுப்பு உடுக்கும் விதமே அழகாக நேர்த்தியாக இருக்கும். மாட்ச் தொடங்க குண்டூசி போட்டாலும் சத்தம் கேட்கும் நிசப்தம் .ஒவ்வொரு பந்து வீச்சு முடியவும் ஆரவாரிப்பு .நல்ல பந்து ,நல்ல மாட்டையடி அல்லது நல்ல தடுப்பு என்றால் ஒரே குரலில் உற்சாகம் .

பியர் வேறு அருந்திக்கொண்டு அவர்கள் மாட்சை ரசிக்கும் விதத்தையே பார்த்துக்கொண்டுஇருக்கலாம் .முடிவு நேரம் நெருங்க எல்லோருமாக தமது நாட்டிற்கே உரித்தான பாடலை ஒருமித்து பாட தொடங்குவார்கள் ,மைதானம் எங்கும் அது எதிரொலித்து முழு பார்வையாளர்களையும் அது மெய் சிலிர்க்க வைக்கும் . இந்த ஒற்றுமை ,நாட்டுபற்று, விளையாட்டில் உள்ள ஆர்வம் இவை அனைத்தும் தான் இன்று வரை அவர்கள் பாரம்பரியத்தை கட்டி காத்து உலகையே வியக்க வைக்கின்றது என்று எண்ணத்தோன்றும்

 

ASHES  என்ற பெயர் வந்ததே சற்று சுவாரஸ்யமான கதைதான் .   1882 ஆண்டு  லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸிஅணி  இங்கிலாந்து அணியை  முதன் முதன் அவர்கள் மண்ணில் தோற்கடித்தது .இதை நக்கலடித்து இங்கிலாந்து பத்திரிகை ஒன்று (SPORTING TIME ) இப்படித்தான் எழுதியது.

                       In Affectionate Remembrance

of

ENGLISH CRICKET,

which died at the Oval

on

29th AUGUST 1882,

Deeply lamented by a large circle of sorrowing

friends and acquaintances

R.I.P.

N.B.—The body will be cremated and the

ashes taken to Australia.

 

  “ இங்கிலாந்து கிரிக்கெட் செத்து போச்சு, அதை எரித்து அதன் சாம்பலை ஆஸி அணியினர் தமது நாட்டிற்கு எடுத்து போகின்றார்கள்” .

அடுத்த முறை இங்கிலாந்து அணி ஆஸிக்கு கிரிக்கெட் விளையாட போகும் போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி காப்டன் IVO BLIGH  “ ஆஸி தனது நாட்டிற்கு எடுத்துச்சென்ற அந்த இங்கிலாந்தின் கிரிக்கெட் சாம்பலை தான் மீட்டு மீண்டும் இங்கிலாந்து கொண்டுவருவேன்” என சுளுரைத்தாராம்.  அவர் சொன்னது போலவே ஆஸியில் நடந்த மூன்று ஆட்டங்களில் இரண்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது .இந்த போட்டிகளின் முடிவில் மெர்ல்போனை சேர்ந்த சில பெண்கள் இங்கிலாந்து காப்டன் IVO BLIGH  இற்கு கிரிக்கெட் விக்கேட்டுக்களின் மேல் வைக்கும் பெயில்சை எரித்து ஒரு டப்பாவில் போட்டு பரிசாக கொடுத்தார்களாம் ,இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பெண்களில் ஒருவரைத்தான் (FLORENCY MORPHY)   இங்கிலாந்து காப்டன் IVO BLIGH  பின்னர் மணம்புரிந்தார்இதன் பின் ஆஸி - இங்கிலாந்து ஆட்டங்கள் ASHES  ஐ யார் தக்க வைப்பது என்று உருவாகிவிட்டது .

1882 தொடக்கம் 2013 வரை இரு அணிகளும் இதுவரை மொத்தம் 134 SERIES விளையாடியிருக்கின்றார்கள் ,இம்முறை இங்கிலாந்து வென்ற தொடர் இரு அணிகளையும் தலா  67 ஆட்டங்கள் என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது . மாட்சுகள்  என்று பார்த்தால் ஆஸி 123 ஆட்டங்களிலும்  இங்கிலாந்து  103  ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். 89 ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

2013 ASHES ஐ இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸி இரு ஆட்டங்கள் வெல்ல கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும் கடைசியில் சொதப்பிவிட்டார்கள் .இந்த ஆட்ட தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த IAN BELL மூன்று முறை சதங்கள் அடித்ததுடன் ஆகக்கூடியதாக 562  ரன்கள் எடுத்திருந்தார் .ஆஸி சார்பில் SHANE WATSON மொத்த ரன்கள்  418  எடுத்திருந்தார் .

பந்து வீச்சில் ஆகக்கூடிய விக்கெட்டுக்களை (26) இங்கிலாந்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் GRAEME SWANN  எடுத்திருந்தார்.  ஆஸி சார்பில் வேக பந்து வீச்சாளர்  RYAN HARRIS  24 விக்கெட்டுகளை எடுத்தார் .

இத்தொடர் முடிய நடைபெற்ற இருபது இருபது ஓவர்கள் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன .இதில் முதலாவது போட்டியில் ஆசியை சேர்ந்த  AARON FINCH  156 ரன்களை அடித்து உலக சாதனை ஒன்றை நிலை நாட்டினார் .

அடுத்து இந்த இரு அணிகளும் ஐந்து ஐம்பது ஓவர்கள் ஆட்டங்கள் ஆட இருக்கின்றார்கள் .இங்கிலாந்தின் கால நிலை எத்தனை ஆட்டங்களை குழப்பபோகின்றது என்று அடுத்த முறை பார்ப்போம் .

பூபாளம்- ஆவணி .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.