Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கிற்கு அடுத்ததாக காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடாக சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

missing.jpg

"நீங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு லலித்தை வேறு இடத்திற்கு அனுப்பப் போகிறீர்களா அல்லது நாங்கள் அவனை கடத்த வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?" என லலித்தினுடைய அப்பாவான ஆறுமுகம் வீரராஜாவிடம் 2011 நவம்பரில் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டது. தொலைபேசி இலக்கம் புதிதாகவும் இருந்தது. "நான் ஒரு தொழிலாளியாக உள்ளேன். தயவுசெய்து எனது மகனை கடத்த வேண்டாம்" என லலித்தின் தந்தையார் இறைஞ்சினார். 

இவரது வேண்டுகோள் வீணாகியது. தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், 28 வயதான தமிழரான, மனித உரிமைச் செயற்பாட்டாளருமான லலித் கடத்தப்பட்டார். ஆயுதம் தரித்த சிலர் லலித் மற்றும் இவரது நண்பர் ஒருவரையும் யாழ்ப்பாணத்தில் வைத்து வெள்ளை வாள் ஒன்றில் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவமானது பட்டப்பகலில் இடம்பெற்றது. இந்தக் கடத்தலுக்கு பலர் சாட்சியாக உள்ளனர். ஆனால் லலித்திற்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை அறியப்படவில்லை. 

"இவன் எனது ஒரேயொரு மகன். இவனைப் பற்றி நினைக்கும் போது சிலவேளைகளில் எனக்குப் புல்லரிக்கும். இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது" என கடத்தப்பட்ட லலித் என்கின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரின் 54 வயதான தந்தையார் திரு.வீரராஜா கூறினார். 

தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறியப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததை அடுத்து கடந்த நவம்பரில் திரு.வீரராஜாவைக் கடத்துவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்து இவர் தப்பித்துவிட்டார். 

அடுத்த மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் மற்றும் பல உலக நாட்டுத் தலைவர்கள் சிறிலங்காவுக்கு வரவுள்ளமையானது தனது ஆட்சிக்கு நற்சான்றைப் பெற்றுத் தரும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நம்புகிறார். 

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் 100,000 வரையான உயிர்களைக் காவுகொண்ட போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதும் இங்கு மனித உரிமைச் சூழலானது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் இங்கு கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈராக்கிற்கு அடுத்ததாக காணாமற் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நாடாக சிறிலங்கா விளங்குகிறது. 

சிறிலங்காவின் ஆட்கடத்தலின் குறியீடாக 'வெள்ளை வான்' காணப்படுகிறது. சிறிலங்கா பாதுகாப்பு படையினருடன் தொடர்புபட்ட கும்பல்களால் வெள்ளை வானில் ஆட்கடத்தல் மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் 46 வயதான டிமுது அற்றிகலே கொழும்பிலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது தனது பின்புறத்தால் தான் இழுக்கப்பட்டு வாய் பொத்தப்பட்டதை தான் உணர்ந்து கொண்டதாக கூறினார். "ரி-56 துப்பாக்கிகளுடன் ஆறு அல்லது ஏழு ஆயுததாரிகள் என்னை கடத்திச் சென்றனர். அவர்கள் எனது கண்களைக் கட்டிய பின் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்கள். தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தனர்" என சிறிலங்காவின் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது மறைந்து வாழ்பவருமான டிமுது அற்றிகலே குறிப்பிட்டார். 

இவர் நான்கு நாட்கள் வரை கைகளும் கண்களும் கட்டப்பட்டு பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களால் துன்புறுத்தப்பட்டார். ஆனால் இவர் கடத்தப்பட்ட அதேவேளையில் கடத்தப்பட்ட இவரது நண்பர் சிறிலங்கா –அவுஸ்திரேலியா இரட்டைக் குடியுரிமை பெற்றவர் ஆவார். இதனால் அவுஸ்திரேலியாவிடமிருந்து தம்மை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படும் என இவர் நம்பினார். 

2009ல் போர் முடிவடைந்ததன் பின்னர் சிறிலங்காவில் கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்த போதிலும், ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டு வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெறுவதாக மனித உரிமைச் செயற்பாட்டாளரான றுக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த எண்ணிக்கையானது இதை விட அதிகமாக இருக்கலாம் எனவும், சில ஆட்கடத்தல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக முறைப்பாடு செய்வதில்லை எனவும் றுக்கி பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் குறைந்தது மூன்று வரையான ஆட்கடத்தல் குழுக்கள் செயற்படுவதாகவும், வடக்கில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளதாகவும் பிறிதொரு செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். 

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பக்கபலமாக உள்ளது என்கின்ற குற்றச்சாட்டை இது நிராகரித்துள்ளது. ஆட்கடத்தல் தொடர்பான சில வழக்குகளையே சிறிலங்கா காவற்துறையினர் விசாரித்து வருவதாகவும், காணாமற் போனவர்களின் நிலை அறியப்படவில்லை எனவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மே 2010ல் வீட்டிற்கு வெளியில் வைத்து தனது இரு மகன்களையும் கடத்தியது தொடர்பில் தான் தொடர்ந்தும் போராடியதாகவும் ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் 62 வயதான அப்துல் ஹமீட் நூர் நஜீப் தெரிவித்துள்ளார். "நான் எனது மகன்கள் தொடர்பாக தகவலை அறிவிதற்காக காவற்துறையை பார்க்கச் சென்றபோது அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நான் தலைமை காவற்துறை பரிசோதகரை அணுகிய போது 'அவர்களைத் தேடுவதில் காலத்தைச் செலவழிக்க வேண்டாம். அவர்களது ஆத்மாக்களுக்காக பிரார்த்தியுங்கள்' என அவர் பதிலளித்தார்" என தனது இரு மகன்களையும் இழந்து தவிக்கும் அப்துல் ஹமீட் நூர் நஜீப் குறிப்பிட்டார். 

செய்தி வழிமூலம் : Robin Pagnamenta - From: The Times 
மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20131022109294

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.