Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழவிடுதலைக்கான வேலைப்பகுப்பு - வ.ஐ.ச ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவிடுதலைக்கான வேலைப்பகுப்பு (Division of Labor for Elam Liberation)

"மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை

133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி

மாவை சேனாதி ராசா அவர்கள் உள்நோக்கத்துடன் திரு விக்னேஸ்வரனை செயல்படாமல் முடக்க முனைபவர்களின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. திரு விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தனது அடிப்படை பணிகளை உறுதியோடு மேற்கொள்ள கடமைப்பட்டவர் அதற்கான மக்கள் ஆணையும் அவருக்குள்ளது. அதேசமயம் தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதுபற்றி பகிரங்கமாக அறிக்கைவிடுவதுக்கு மக்கள் அவருக்கு அணைதரவில்லை. மேற்படி சூழலில் அவர் கூட்டமைப்பின் தலைவர் சமந்தரிடம் மட்டுமே முறைப்பாடு செய்யவேண்டும். ஒரு அனுபவம் மிக்க நீதி அரசருக்கு இதை கூற நேர்ந்தது துர்ப்பாக்கியமாகும். எதிர்காலத்தில் இத்தகைய முரண்பாடுகள் பகிரங்கமாவதை அனுமதிக்கக் கூடாது. எதிர்காலத்தில் உள் முரண்பாடுகளை பகிரங்கமாக்குபவர்கள் கடுமையாக தண்டிக்கபடவேண்டும்.

திரு விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வட மாகாண மண்ணைக் காப்பதும் அங்கு புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், அபிவிருத்திப் பணிகள் போன்ற விடுதலையின் தந்திரோபாயச் பணிகளை நிறைவேற்றுவது மட்டுமே (tactical tasks)  அவரது கடமை. மேற்படி முதலமைச்சர் பணிகளைச்செய்ய அவர் முதலமைச்சர் மகா நாட்டில் கலந்து கொள்வது அவசியமாகும். மாவையின் அறிக்கை காவலுக்கு வைத்த நாய் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எஜமானின் அனுமதி பெற்று மட்டுமே குலைக்கவேண்டும் என்று கோருவது போல் அபத்தமாக உள்ளது. நீண்ட போராட்ட மரபுள்ள பாராளமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசவுக்கு இதைக் கூற நேர்ந்தது துர்ப்பாக்கியமாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டமைப்பினரதும் அதன் பாராள மன்ற உறுப்பிர்களினதும் அடிப்படைப்பணி வட மாகாண சபையின் நிர்வாகமல்ல. அவர்களது அடிப்படைப்பணி ஈழமக்களின் விடுதலையை சாத்தியப்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய பிரதேசிய சர்வதேசிய நிலைமைகளுக்கேற்ப ராஜதந்திரத்துடன் முன்னெடுத்துச்செல்வதாகும்.

ஈழ விடுதலை தலைமைதாங்கும் கூட்டமைப்பினரது பணி மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபை தமிழ் உறுப்பினரது பணி என இரண்டு முக்கிய வேலைப்பகுப்புகளைக் கொண்டுள்ளது. அவை:

  1. கூட்டமைப்பின் பணிகள் - இணைந்த வட கிழக்கு மாகாணத்தின் (ஈழத்தின்) விடுதலையின் அடிப்படையில் சமத்துவமான தமிழ் முஸ்லீம் உறவுகளை கட்டியெழுப்புவதும் மேற்படிப்பலத்துடன் விடுதலையை சரியான  மூலோபாயத் தந்திரோபாயங்கள் மூலம்  வரலாற்றின் பாதையில் முன் நகர்த்திச் செல்வதுமாகும்.

 

2. வடமாகாண சபையினதும் கிழக்கு மாகாணசபை தமிழ் உறுப்பினரதும்  பணிகள்: சமத்துவமான தமிழ் முஸ்லீம் உறவுகளையும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமத்துவத்தை உறுதிசெய்வதின் மூலமும் தமிழ் மண்ணை பாதுகாத்து சமூக நீதியுடன் அபிவிருத்தி செய்தல்.

 

மேற்படி சமகால ஈழ விடுவதலைப்பணியின் வேலைப்பகுப்பை எல்லாத்தரப்பினரும் புரிந்து கொண்டு பணிபுரிவதிலேயே எங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது. வேலைப்பகுப்பும் சரியான புரிந்துணர்விருந்தால் ஊடுருவும் குழப்பி மோதவைக்கும் எதிரியின் தந்திரோபாயம் தோற்றுப்போகும்.

வ.ஐ.ச ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்கள் தலைவர் மக்கள் நாயகன் மக்கள் திலகம்

மாவை சேனாதி ராஜாவை எதிர்த்து அங்கே விக்கியால் அரசியல் நடத்த முடியாது மாவை சொன்னதில் என்ன தப்பு? அமைந்திருபதோ கூட்டாட்சி அந்த வகையில் எந்த முடிவாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவது தான் அழகு அது தான் கூட்டணி தர்மம்

குலோபல் செய்தியில் அடைப்படையில் கூட்டமைப்பின் தலைமை, இரண்டாம் மட்டத்தை கவனியாமல் செயல்படுவத்தாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த செய்தி இன்னொரு திரியில் மிக விரிவாக ஆராயப்படுவிட்டது. செய்தியின் உண்மை பொய்வரைக்கும் தெளிவாக அந்த திரியில் ஆராயப்பட்டிருக்கு. 

 

ஒரு உறவு அதில் சரவணபவன் பங்களிப்பதும் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் ஊடக துறை மேதாவிகளான குலோபல் இதில் நடந்தவற்றை முறைப்படி வெளியே கொண்டு வந்ததாக பார்த்து இல்லை. இரகசிய தொடர்பு ஒன்று முலம் கூட்டமைப்பிற்க்குள் தெண்டி விடுவது போல செய்தி போடப்படிருந்தது.

 

ஆனால் இங்கே மேற்கோள் காட்டப்படாமல் விடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை பார்ர்க்கும் போது அதாவது விக்கினேஸ்வரன் அல்லது மாவை வெளிவிடாத அறிக்கை ஒன்றுக்கு அதை பகிரங்க அறிக்கை என்று அழைத்துக்கொண்டு அறிக்கை விடுவது ஊடகத்திரிப்புக்களில் ஒருவகை.

 

இன்று நாம் பார்க்கும் கூட்டமைப்புக்குள் இருக்கும் இழுபறி விக்கினேஸ்வரனை தெரிவதில் ஆரம்பித்தது. பண்பான மத தலைவர் மன்னர் ஆயர் பகிரங்க பிரச்சார பாடங்கள் நடத்தாமல் கூட்டமைப்பு அங்கத்தவர்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை அழுதங்கள், ஆலோசனகள் முலம் தீர்த்து வருகிறார்.  பலர் அவரின் இந்த செயலை தன்னடக்கமான தமிழ்மக்களுக்கான தொண்டாக போற்றியும், மெச்சியும் வருகிறார்கள்.

 

கூட்டமைப்பின் தலைமை இந்த முரண்பாடுகளுக்கு ஒரு காரணமான தானது சர்வாதிகாரமாக செய்ல்ப்படும் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வந்தும் பார்த்தில்லை. இது கூட்டமைப்பில் எல்லா அங்கத்தவர்களுக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுகிறது. மாவைக்கும், விக்கின்ஸ்வரனுக்குமிடையில் மட்டும்தான் என்றில்லை. இந்த முரணுதல்கள்  மேலே காட்டப்பட்டபடி ஒரு தனிச் சம்பவமும் அல்ல. அதாவது மாவை முதல் அமைச்சர்கள் கூட்டத்திற்கு விக்கினேஸ்வரன் போவதில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார் என்றில்லை. இது விக்கினேஸ்வரன் கொழும்பில் சத்திய பிரமாணம் எடுத்த போதும் இருந்தது.  இது ஒரு கொள்கை முரண்பாடு. சிங்கள அரசுடன் இணக்க அரசிலை இரண்டாம் மட்டம் எதிர்ப்பதும், சிங்களத்தின் அழுங்கு பிடிகளுக்கு விட்டுகொடுத்து  சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதை மட்டும் உயர் மட்டம் கவனிப்பதும் தான் கூட்டமைக்குள் நடை பெறும் பிரதான இழுபறி.  இததை விவாதிப்பதானால் மாவைக்கு என்ன Subject படிபிக்க வேண்டும், விக்கினேஸ்வரனுக்கு என்ன Subject படிபிக்க வேண்டும் என்பதல்ல விவாத்திக்க படவேண்டும். கூட்டமைப்பு இணக்க அரசியலில் இறங்க வேண்டுமா? அப்படியாயின் சிங்கள அரசை இணக்க அரசியல் காப்பாற்றாமல்  எந்த வீச்ச இணக்க அரசியல் உண்மைகளை சரியான முறையில் சர்வதேசத்துக்கு அறியத்தரும் என்பதாகவே இருக்க வேண்டும்.

 

மேலூம் இந்த பகிரங்க அறிக்கையில் காட்டியிருப்பது போல விக்கினேஸ்வரன் தான் 133,000 வாக்குகளால் தெரியப்பட்டமையால் தனது கட்சி தனக்கு ஆலோலோசனை கூற முடியாது என்பதை பகிரங்க அறிக்கையாக வெளிவிட்டும் பார்த்தில்லை. சில ஊடக தர்மத்தை மதியாதர் தங்களை தாங்கள் உள் நுளைத்துக்கொள்ள, குசுகுசுப்புக்களை செய்திகளாகி அதை பின்னர் அரசியல்வாதிகளின் தலையில் போட்டு பின்னர் அவர்களுக்கு பாடம் படிப்பித்தாக கற்பனை பண்ணிக்கொண்டு, அத்தகைய நிலையில் அரசியல்வாதிகள் இருப்பது ஏளனம் என்கிறார்கள். நடந்த உண்மைகளை மேற்கோள் காட்டாமல் நடத்தும் அநாவசிய பாடங்கள் சொந்த பிரச்சரங்களாக மட்டும்தான் கருத்தபடலாம். 

 

இந்த அறிக்கையின் தலைப்பும் கவனத்தை திருப்ப என்று தாயாரிக்கப்பட்டது. இதில் எந்த இடத்திலும் தலைப்பிற்கும் உள்ளடகத்திற்கும் தொடர்பு காண முடியவில்லை . மேலும் அதில் காட்டப்பட்ட ஆங்கில சொற்தொடர் நகைபிற்கு இடம் அளிக்கத்தக்க வகையில் விவாதிக்க பட்ட பிரதான கருத்துடன் இயைய முடியாமல் இருக்கிறது.  ஏன் அந்த சொற்தொடர் வருகிறது என்பது விவாதத்திற்குடிய கருப்பொருள்.

 

இதில் எந்த இடத்திலும் ஈழ விடுதலைக்கான வேலை பகுப்பு நிரலடிந்த அறிக்கையில் பதியப்பட்டு இல்லை. அது ஏமாற்றம் அளிப்பது.

 


http://www.yarl.com/forum3/index.php?showtopic=131108#entry950463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் ஆரம்பித்து இருப்பது பயனுள்ள ஒரு தொடர் கோட்பாட்டு விவாதமாகும். இவ் விவாத்தை  ஆரோக்கியமான வழியில் வளர்த்துச் செல்ல யாழ் களத்தை பயன்படுத்த விரும்புகின்றேன். இக் கோட்பாட்டு விவாதத்தை ஒரு செய்தியில் ஆரம்பித்தாலும் இது அச் செய்தி பற்றிய விவாதம் அல்ல என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இவ் விவாதத்தை வளமை போல யாரும் திசை திருப்ப அனுமதிக்க வேண்டாம் என்று யாழ் களத்தை பணிவுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். வளமை போல என்னைத் தொடர்ந்து வந்து தொல்லை தருபவர்களிடம் இருந்து  இக் கோட்பாட்டு விவாதத்தை  யாழ் களத்தால் பாதுகாக்க முடியாவிட்டால் நான் விலகிச் சென்று வேறு தளங்களிலோ அல்லது புத்தக வடிவிலோ இக் கோட்பாட்டு விவாதத்தினை நிறைவு செய்ய முடியும். எனது நேரம் பொன்னானது.

மேலே கோட்பாட்டு விவாதம் எதுவும் இருப்பதாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனது கருத்து வரப்போவைக்கு அல்ல. ஏற்கவே பதிந்தவைக்கு மட்டுமே. இன்னும் பதிய இருந்தால் அவற்றை வாசித்த பின்னர்தான் கருத்து வைக்க முடியும்.

 

மாவைக்கு  பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருப்பதாக கூறி பிரபல அரசியல்வாதியும் தனது முதல் அமைச்சர் பதவியை தமிழ் மக்களின் நன்மை கருதி விட்டுகொடுத்த பெருந்தன்மையான மனிதனை அவமானப்படுத்தியிருக்கு. அதே மாதிரியே முதல் அமைச்சரையும் அவமானப்படுத்தியிருக்கு. 

 

மாவைக்கும் முதலமைருக்குமிடையில் போட்டிகளாக எதுவும் அறியப்படவில்லை.  உள்ளே இருக்கும் இணக்க அரசியல் சம்பந்தமான கொள்கை மாறுபாடுகள் மட்டும் இருக்கு. மாவை இணக்க அரசியலை எதிர்ப்பவர். இதனால் தேர்தல் விஞ்ஞாபனம் இணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கருதுகிறார்.  இதனால் அரசுடன் இணங்கி செயல்ப்படுவது கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு எதிர் என்று நினைக்கிறார்பதன் அங்கத்தவர்களால் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகள் கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கருதுகிறார். தலைமை நிச்சயமாக பதவி பிரமாண நேரம் தொடக்கம் வந்த பாதையில் ஒரு திருப்பம் எடுத்தது என்பது உண்மை. கட்சியின் கட்டுக்கோப்பை அழிக்காமல் தாம் செய்பவற்றுக்கு தாம் பொறுப்பு எடுத்தால் தலைமையின் சிறிய விலகல்கள் பெரித்துபடுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமானது வெளி எழுத்தாளர்கள் உள்ளே ஊடறுத்து பிரிவினைகள் விதைக்க கட்சியின் தலைமை இடம் கொடுக்க கூடாது.

 

மிக நொந்த நேரத்தில் தாயக மக்களின் ஒரே ஒரு ஆறுதலாக இருக்கும் கூட்டமைப்பை பிளவுபடத்தக்கதாக வரையப்படும் கட்டுரைகள் இந்த நேரத்தில் யாழில் அவசியம் இல்லாதவை. ******* ****

 

 

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் நியூஸ் ஆதரமில்லாத ஒரு வதந்தியை போடுகிறது. அதை வைத்து விண்ணாணம் கதைக்கவும் சிலர்.

உங்கள் நேரம் மட்டும் பொன்னானது எங்கள் நேரம் தகரத்தால் ஆனதா?

எனக்கு வடபோச்சே பார்க்க நேரம் வந்த்ஹிட்டு. என் பொன்னான நேரத்தை, இல்லாத செய்தியின் அடிப்படையில் வரையப்பட்ட இந்த துனுக்கில் விடயம் செய்ய நான் விரும்பவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என் பதில் நீக்கப்பட்டது?

 

நன்றி விவசாயி விக்.  நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த விவாதம் விடுதலையின் வேலைப்பகுப்பு பற்றிய ஒரு பெரிய கட்டுரையில் கூட்டமைப்பின் பங்குபற்றிய சிறு பகுதி மட்டுமே. நெடுநாள் ஒதுங்கி இருந்துவிட்டு  பரீட்சாத்தமாக இப்பகுதியை  வெளியிட்டேன்..

 

இது மாவை விக்கி தொடர்பான செய்தியில் இருந்து ஆரம்பித்தாலும் இது அச் செய்தியின் வியாக்கியானமில்லை. கோட்பாட்டு விவாதம் என்பதை நீங்கள் மட்டுமாவது உணர்திருப்பது மகிழ்ச்சி.

 

யாழில் நான் எந்த முக்கியமான விவாதங்களை ஆரம்பித்தாலும் முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ளாமல் சிலர் தாம் நக்கீரன் என்ற நினைப்பில் திசைதிருப்புவதும் வசைபாடுவதும் நீங்கள் ததுதானே. நெடுநாள் ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் எழுதினேன். மீண்டும் அதே திசை திருப்பல். இங்கு தீவிரமான கோட்பாட்டு விவாதத்துக்கு இன்னும் காலம் கனியவில்லை. யாழ்க் கலத்தால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் நான் வேறு ஊடகங்களிலோ அல்லது புத்தகமாக்வோ எழுதுவதுதான் சாத்தியம்.

 

யாழ் உறவுகளின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

இது தமிழ்மக்களின் அபிமான அரசியல் வாதியான மாவையை அவமானப்படுத்தவும், 133,000 வாக்குகளால் தெரியப்பட்ட முதல் அமைச்சரை அவமானப்படுதத செய்த முயற்சி போலவே தெரிகிறது.
 
இல்லையாயின்:
 
1.)பலநாடகள் கழிந்த பின்னரும் தன்னை பெரியாள் ஆக காட்டி அரசியல்வாதிகளை அந்த அவமானப்படுத்தும் வசனங்கள் ஏன் இன்னமும் நீக்கப்படவில்லை.
 
2).அறிக்கை தழுவப்பட்ட சந்தேகம் எழுப்பட்ட செய்திக்கு ஏன் ஆதாரம் சமர்பிக்கபடவில்லை.
 
3).தந்னால் ஒத்துகொள்ளபட்ட, பிழையாக இங்கே பதியப்பட்டுவிட்டதாக கூறப்படும் அரசியல் வாதிகள் மீதான சேறடிப்பு, அவை பிழையாக ஒத்துகொள்ளபட்ட பின்னர் ஏன் இன்னமும் வெளிப்படையாக மன்னிப்பு கோரவில்லை.
 
4). அவை இங்கே பிழையாக பதியப்பட்டுவிட்டன என்று கூறும் விளக்கமும் ."பெரிய கட்டுரையில் கூட்டமைப்பின் பங்குபற்றிய சிறு பகுதி மட்டுமே." என்று கூறும் விளக்கமும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகவில்லை. எப்படி மாவையை கிண்டலடிக்க வெளிவிடப்பட்ட குலோபலின் கிசுகிசு  இந்த பெரிய கட்டுரையுடன் சேர்ந்தது என்ற ***** ****** செயலை ஏன் இன்னமும் விளங்கப்படுத்த முயவில்லை.
 
இதனால் இந்த முயற்சி இரு பெரிய மனிதர்களை அவமானப்படுத்த முயன்ற செயலாகவே படுகிறது. 
 
ஊடகவியலார் என்று தம்மை அழைக்கும் மனிதர்கள் மாவை விடும் தவறுகளுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு ஒரு தபால் எழுதி அதன் பதிலையும் சேர்த்துத்தான் அறிக்கைகளில் போடுவார்கள். மாவைக்கு விவாதத்தில் இணையில்லாதவர்கள், மாவையிடமிருந்து பதில்கள் வந்தாலும் என்று அஞ்சுபவர்கள்  மாவைக்கு  கிடைக்கபோவதில்லாத இடங்களில் கிண்டல் அடித்துவிட்டு அவர் பதில் அளிக்க மாட்டார் என்ற தைரியத்தில் ஓடி ஒழிக்கலாம்.  **** ************. அதில் ஊடகவியல் இல்லை.
 
யாழில் சிலர் தாங்கள் எழுவதுதற்கு கேள்வி கேட்கக்கூடாத மேட்டுக்குடி அந்தஸ்த்து கேட்டு வலிக்கிறார்கள். நான் எல்லா திரிகளிலும் கேள்விகள் கேட்டு எழுதும் எனது நக்கீரன் தொழிலை இந்த வருடம், அடுத்தவருடங்களில் கைவிடும் ஐடியாவில் இல்லை. 

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

கண்ணில்லாக்குருடன் குளோபலில் கதைபடித்து ,கரி யானையின்

எண்ணில்லாத்தும்புவாலை துடைப்பம் என்றான்-மண்ணில்

மடமைகோர் முன்னுதாரணமானர்,மானஸ்தன் நக்கீரனாம் நான்,

நடராஜ முக்கண்ணன் தாமுமென்று தடுமாறினான் குருடன் தானே! 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“யாழ்க் கலத்தால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் நான் வேறு ஊடகங்களிலோ அல்லது புத்தகமாக்வோ எழுதுவதுதான் சாத்தியம்...”

 

புலவரே.. wrong timing at the wrong place.. யாழ் ‘கலம்’ வேறு அலுவல்களில் பிசி. பேசாமல் புத்தகத்தை வெளியிடுங்க..

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் முன்வைத்த division of labour என்பது கோட்பாட்டு விவாதமாக வரவேற்கப் படவேண்டும். ஆயினும் இதற்குள் ஆதாரமில்லாத ஒரு செய்தியை இணைத்து, விக்கியர், மாவை மேல் பழிபோடும் பாணியில் எழுதியதால், தனது தலைப்பை தானே திசை திருப்பி விட்டார் புலவர்.

புத்தகம் எழுதுவதும் எழுதாததும் உங்கள் இஸ்டம் ஆனால் இங்கே கருத்து கேட்டால் நாம் எமது சிற்றாறிவுக்கு ஏற்றபடிதான் கருத்து சொல்லலாம்.

விடயதானத்துக்கு வருவோம்.

வேலையாட்கள், 1) கூட்டமைப்பும் நிலத்து மக்களும் 2) தமிழக ஆதரவாளர் 3) புலத்தவர் என்று 3 வகைப்படுகிறனர்.

Division of labour என்பதை சிந்த்ஹிக்கும் முதல், objective என்ன என்று சிந்த்ஹிக்கணும். இதில் கூட்டமைப்பு சம்ஸ்டியே objective என்கிறது. மற்ற இருவரும் தனிநாடே objective என்கிறனர். இதில் ஒரு common ground எட்டப்படாத விடத்து division of labour சாத்தியமில்லை.

இந்த common ground ஐ எப்படி எட்டலாம்? இதுதான் முதலில் ஆராயப்பட வேண்டிய கேள்வி.

தொடர்ந்து ஆப்பிறுக்கி பிரிக்கும் தத்துவங்களுக்கு பெயர் "Division of Labor"  .அல்ல. அது பொறுப்பையும், வளங்களையும் பங்கிடும் ஒரு திட்டம். இது பொருளாதார விற்பனரான ஆதாம் சிமித்தின் ஆங்கில மொழி தொடரில் காணப்பட்டாலும் சிந்து வெளித்தமிழரால் கண்டிபிடிக்கப்பட்ட ஒரு மூலோபாயம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. 

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் பாகுபாட்டை இனம் கண்டு சாதியை ஏற்படுத்தி வளத்தை மக்களுக்கிடையில் சமனாக பங்கிட்டது சிந்து வெளிநாகரீகம். இதை, 3000 வருடங்களுக்கு முன்னர் அதிராகாரத்தையும் சுரண்டலையும் வைத்து வர்ணமாக்கி சர்வநாசம் செய்தது ஆரியம். எனவே தொழில் பிரிவு அல்ல இன்றைய அரசியலில் கவனிக்கப்பட வேண்டியது. அதன் நோக்கமே. 

 

பொறுப்பை பகிர கொண்டுவரும் தொழில் பகுப்பில் முஸ்லீம்களும், பெண்களையும் மட்டும் காணும் மையோபியாக் கண்களுக்கு குரல் இல்லாத பிரிவுகள் ஏன் தெரியவில்லை. இவர்கள் அல்லாவா கடந்த தேர்தலை ஊடகவியாலாரின் தேர்தலாக்கா வேண்டும் என்று தீபன் செல்வனை தேர்தலில் நிற்கவைக்க யாழை பிரச்சாரக்களமாக்க பாவித்தவர்கள். அடக்கப்பட்ட ஊடகவிலாளர்கள் எங்கே? எங்கே மற்றைய குழுக்கள். 

 

விடுதலையை நோக்கி செல்லும் போராட்டத்தில் தொழில் பகுப்பு தேவையா, சாத்தியாமனதா என்ற விவாதம் ஏன் முன்னால் வைக்கப்படவில்லை? தொழில் பகுப்பு என்ற காரியாலய பாணி கட்டுக்கோப்பு ஜனநாயக போராட்டத்திற்கு எப்படி பிரயோக்கிக்கப்படுகிறது? இதற்கான உதாரணங்கள் உண்டா?. இது போல்சுவிக்குகள் போன்றதொரு பரீட்சாத்தமா? இப்படியான தலைப்பொன்றில் கிட்லரின் குணம் படைத்தவர்கள் கேள்வி கேட்டால் தண்டனையாக யாழால் விலத்த வேண்டுமாம். எந்த கருத்துக்கு பதில் வைப்பது என்பது கருத்தாளன் மட்டும்தான் தெரியப்போகிறான். 

 

வரதரும் ரோவின் செயல் திட்டங்களை தமிழ் மக்களுக்குள் புகுத்த முடியவில்லை என்று கைவிட்டவர். வரதரினதை போன்று ரோ எழுதனாலும் சரி அல்லது யார் எழுதினாலும் சரி எந்த திடடமும் தமிழ் மக்களால் கேள்வி கேட்கப்படும். எதுவும் பகவான் அருளிய கீதையாக இங்கே இருக்க முடியாது.

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.