Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்; நாவற்குழி புதுக்குடியேற்ற மக்கள் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்; நாவற்குழி புதுக்குடியேற்ற மக்கள் கவலை
23 அக்டோபர் 2013


'எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள்இ நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்'? என நாவற்குழி ஐயனார் கோயிலடிப் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியேற்றத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் அங்கு நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். இந்தக் குடியேற்றத்தில் 3 குடும்பங்கள் மட்டுமே நிரந்தரமாகத் தங்கியுள்ளன.

இந்த நிலையில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை அளவீடு செய்து அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரகாலமாகச் சீருடையினரின்  அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன.

3 குடும்பங்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ள நிலையில் 136 குடும்பங்களுக்குக் காணிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புதுக்குடியேற்றத் திட்ட தமிழ் மக்கள் கடந்த 4 வருடங்களாக  தங்கியுள்ள தமக்கு இன்னமும் காணி அளவீடு செய்து தரப்படவில்லயென்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
'எங்களைக் காணிகளைத் துப்பரவு செய்யுமாறும் சிங்கள மக்களுக்குக் காணிகள் அளந்து முடிந்ததும் எங்களுக்கு அளந்து தரப்படும் என்று இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகள் அளந்து வழங்கப்பட்டுவிட்டன. எங்கள் காணிகளை அளப்பதற்கு யாரும் வரவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக நாங்கள் தொழிலுக்குச் செல்லாமல் காத்திருக்கின்றோம்'' என்று கூறினார்கள் அந்த மக்கள்.

இதேவேளை சிங்கள மக்கள் பிடித்துள்ள காணிகளுக்கு அருகில் தங்கியுள்ள 98 தமிழ்க் குடும்பங்களையும் வெளியேற்றுவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

'எங்களுக்கான காணி உறுதிகள் இன்னமும் கிடைக்காமையால் எதுவித உதவிகளும் இல்லாமல் அந்தரித்த வாழ்வு வாழ்கின்றோம். தற்போது மழை தொடங்கிவிட்டது. ஒலைக் கொட்டில்களின் ஒழுக்கினால் நாம் வீட்டில் இருக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.

இரவில் பாம்புத்தொல்லை என்பதால் மின்சாரத்துக்கு விண்ணப்பித்தோம் காணி உறுதி இல்லாததால் எங்களுக்கு மின்சாரம் வழங்க மறுக்கின்றனர். இதனால் சட்டவிரோத மின்சாரம் எடுக்க வேண்டி ஏற்படுகிறது. இவ்வாறு செய்தால் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். சிங்கள மக்கள் சட்டவிரோத மின்சாரம் பெறுவதை யாருமே கண்டு கொள்வதில்லை' என்று  தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
'நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளின்றி வாழஇ சிங்களவர்கள் எங்கள் மண்ணில் குடியேறி எல்லா வசதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஏன் இந்தப் பாகுபாடு காட்டப்படுகின்றது' என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் தென்மராட்சி பிரதேச செயலருடன்  தொடர்புகொண்டு கேட்டபோதுஇ 'மக்களுக்குக் காணி உறுதி வழங்கப்படாமல் எங்களால் உதவிப்பொருள்கள் வழங்க முடியாது' என தெரிவித்தார்.
 
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97994/language/ta-IN/article.aspx

DSC_0559.JPG
எஸ்.கே.பிரசாத்

யாழ். நாவற்குழியில் தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கபடாததினைக் கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் காணிகள் அளந்து கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் அப்பகுதி தமிழ் மக்களுக்கு எவ்வித காணிகளும் இதுவரையிலும் அளந்து கொடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக கருத்துக்கூறிய நாவாற்குழி தமிழ் மக்கள்,

சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கிய பின்னர், தமிழ் மக்களுக்கு காணிகளை பிரித்து தருவதாக இராணுவம் உறுதியளித்திருந்த போதும் தற்போது சிங்கள மக்களுக்கு மட்டும் காணிகள் அளந்து கொடுத்து விட்டு தாங்களை புறக்கணித்துள்ளனர்.

நாங்கள் இப்பிரதேசங்களில் 4 வருடங்களாக வசித்து வருகின்றோம், எனினும் 6 மாதங்களுக்கு முன்னர் வந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, வீடுகள் அமைப்பதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எவரேனும் எமக்கு எதுவித உதவியும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை.

இப்பிரதேசத்தில் 150 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு காணி தருவதாக கூறி எங்கள் காணிகளைத் துப்பரவு செய்து காணி அளப்பதற்குரிய கட்டைகளை வெட்டி வைக்குமாறும் இராணுவத்தினர் கூறியிருந்தனர். இருந்தும் எமக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் ஏமாற்றி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவுளளோம்' என அம்மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
DSC_0564%282%29.JPG
DSC_0574.JPG
DSC_0579%281%29.JPG
DSC_0583%282%29.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.