Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். குடாவின் தற்போதைய நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பொருள்கள் ஏற்றிவந்த 60 லொறிகள் முகமாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன எனவும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பின்போது தெரியப்படுத்தினர்.

அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவர ஏற்பாடு செய்யும்படி அவர்கள் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தனர். இதேவேளை பதுக்கல், அபரிமிதமான விலை உயர்வு என்பவற்றைத் தவிர்த்து உணவுப்பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யுமாறு யாழ்ப்பாணம் அரச அதிபர் கே.கணேஷ் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரியுள்ளார். இது விடயமாக யாழ்ப்பாண அரச அதிபர் க.கணேஷ், பலநோக்கு கூட்டுறவு.சங்கங்கள் மற்றும் சகல தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் நேற்றுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள பிரதேச செயலர்கள், உதவி அரச அதிபர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இது தொடர்பாக, அரச அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இருப்பிலுள்ள உணவுப் பொருள்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார். கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்களை சீரான முறையிலும், நீதியான விலையிலும் விற்பனை செய்வதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுள்ள யாழ் அரச அதிபர், அனைவரும் தமது விற்பனை நிலையங்களை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் இயங்குவதனை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

athiruv.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்தாயிரம் மெற்றிக்தொன் உணவு உனடியாக வேண்டும்.

யாழ் அரச அதிபர்.

யாழ்ப்பாண குடா நாட்டிற்கு தேவையான 5 ஆயிரம் மெற்றித் தொன் அத்தியவசிய உணவுப் பொருட்களை உடன் அனுப்பி வைக்குமாறு அரசாங்க அதிபர் கே.கணேஷ் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிர்வு.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பட்டினிச்சாவு அவலத்துக்கு முகம் கொடுக்கப் போகும் 5 இலட்சம் தமிழர்கள்

[வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 04:40 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலால் தமிழ் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனிதக்கேடயங்களாக குடியிருப்புக்களுக்குள்ளேய

யாழ்ப்பாண குடாநாட்டில், என்றும் இல்லாத வகையில் மோசமான பண புளக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரச வங்கிகள் மூடப்பட்ட நிலையில் உள்ள அதே வேளை சில தனியார் வங்கிகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக மட்டுமே பண கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னர் 20 ஆயிரம் ரூபா வரை பண கொடுப்பனவுகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக பெற கூடிய வசதி இருந்த பொழுதிலும், 10 ஆயிரம் ரூபாவாகவும், பின்னர் 3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருந்தது.

அந்த தொகை இன்று முதல் 900 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெறுவதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நேரங்களில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தே இந்த பணத்தை பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக பலாலி இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ள வங்கிகளின் மேலதிக நிதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகளுக்கு எடுத்து வரப்படாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, தற்சமயம் யாழ்ப்பாண வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணத்தை வைப்பிடுவதில்லை எனவும், மீள பெறுவதிலேயே ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

யாழில் ஒரு வாரக் காலமாக நடைபெற்ற சண்டையில் 88 புலிகள் பலி

யாழ் குடாப் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மோதல்கள் காரணமாக 88 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையின் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவத் தரப்பில் 485 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படகு கட்டும் துறைதான் பாதிக்கப்பட்டது என்றும் இலங்கை இராணுவத்தினர் கூறுவது போல புலிகளின் படகுகள் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்குடாப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வது குறித்து செஞ்சிலுவை சங்கம் வைத்துள்ள திட்டத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் இளந்திரையன் தெரிவித்தார்.

யாழ் குடா நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

img]http://www.bbc.co.uk/worldservice/images/2006/08/20060816120649jaff203b.jpg

இலங்கையின் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வரும் யாழ் குடாநாட்டில் இன்று 5 மணித்தியாலங்கள் ஊடரங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்தத் தளர்வு கடந்த தினங்களைப் போலல்லாமல் குடாநாடு தழுவியதாக நடைமுறைபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையடுத்து, இன்று பலர் ஏ9 வீதியில் கொடிகாமம் வரையிலும் சென்று வந்ததாக பலரும் தெரிவித்தனர். கொடிகாமம் பிரதேசத்திலிருந்து இந்த வீதிவழியாக இன்று யாழ் நகருக்கு வந்த நிவாரணப் பணியாளர் ஒருவர், கொடிகாமத்திற்கு அப்பால் ஏ9 வீதியில் பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை என எம்மிடம் தெரிவித்தார்.

ஊரடங்கு அமுலில் இருந்த நேற்றிரவும் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட சில நிமிட நேரத்திலும், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் கோவில் வீதி ஆகிய இடங்களில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலும் இளைஞன் ஒருவர் ஆயதபாணிகளினால் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் செய்திப்பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தமான, கேப்பாய் இராசவீதி பகுதியில் உள்ள களஞ்சியத்திற்கு நேற்றிரவு ஆயுதந்தாங்கிய நால்வர் தீ வைத்ததாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான செய்திப்பத்திரிகை அச்சிடும் தாள் மற்றும் கணணி உதிரிப்பாகங்கள், இலத்திரனியல் பொருட்கள் என்பன சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் சிரமங்களுக்கு மத்தியிலும் 6 மணித்தியாலங்கள் இரவிலும் பகலிலும் வெவ்வேறு நேரங்களில் மின்சார விநியோகம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

போர்முனை பகுதிகளில் தற்போது மோதல்கள் தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சண்டைகள் ஓய்ந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என யாழ் குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் குடாநாட்டில் அரச மற்றும் தனியார் வங்கிகளில் புழக்கப்பண பற்றாகுறை

20060819172752jaffna_bank_203.jpg

தற்போதைய போர்ச்சூழல் காரணமாக பல்வேறு பற்றாக்குறைகளுக்கு முகம் கொடுத்துள்ள யாழ் குடாநாட்டின் அரச மற்றும் தனியார் வங்கிகள் புழக்கப்பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல்வேறு இடங்களில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. ஊரடங்கு உத்தரவும் அங்கு நடைமுறையில் உள்ளது. சகல தொழிற்துறைகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தைப் மீளப் பெறுவதற்காக முண்டியடிக்கின்றார்கள். ஆயினும் பண வைப்புக்கள் வங்கிகளில் நடைபெறாத காரணத்தினால் பல வங்கிக் கிடைகளில் பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமராட்சி பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் பலவற்றில் ஆயிரம் ரூபாவுக்கும் குறைந்த பணத்தையே மீளப் பெறக் கூடியதாக இருப்பதாகப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

வங்கிகள் தமது கையிருப்பில் உள்ள பணத்திற்கு ஏற்றவாறு மீளப் பெறும் பணத்தின் தொகை அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கொழும்பிலிருந்து பணத்தைப் பெறுவதற்காக தமது தலைமையகத்துடன் தாங்கள் தொடர்புகொண்டு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்

[

யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினரது ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் இடம்பெயர முடியாமல் இருக்கின்றது. ஆனாலும் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் மக்கள் இடம் பெயரும் போது கணிசமான அளவு மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயர முடியாத நிலை காணப்படுகின்றது.

அடுத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. வர்த்தகர்கள் பதுக்கல் நடவடிக்கையிலும் ஈபடுகின்றனர். இதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி;;ன்றனர். பெருமளவான பொருள்கள் குடாநாட்டில் முடிவுற்ற நிலையில் உள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் இளைஞர்கள் வகை தொகையின்றி சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதனை யார் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கொல்லப்படுவதற்கான காரணமும் தெரியவில்லை. இதனால் இளைஞர்களிடையே ஒர் பயப்பீதி காணப்படுகின்றது. வீதியில் நடமாட அஞ்சும் நிலை காணப்படுகின்றது.

சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக பெருமளவான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

குடாநாட்டின் மின்சார விநியோகம் நேற்று முதல்கணிசமான அளவு சீராக்கப்பட்டுள்ளது என்று யாழ்.அரசாங்க அதிபர் க.கணேஷ் தெரிவித்தார். இதன்படி இன்றுமுதல் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் அதேபோல், ஊர டங்கு உத்தரவு தளர்த்தப்படும் போது ஒரு மணி நேரமும்

இரவு 7 மணிமுதல் 9.30 மணிவரை சுழற்சி முறையிலும் மின்சார விநியோக ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார். இரவு 9.30 மணி முதல் முன்னிரவு 11 மணி வரை சகல இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

வலிகாமம், தென்மராட்சி மற்றும் வடமராட்சி பகுதிகளில் நேற்றைய தினம் சம நேரத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து, தென்மராட்சியில் சிக்குண்டிருந்த பெரும் எண்ணிக்கையானோர் அங்கிருந்து வெளியேறினர்.

இவ்வாறு வெளியேறியோரில் கணிசமானோர், வடமராட்சிப் பகுதிக்கும் மற்றும் பலர் வலிகாமம் பகுதிக்கும் இடம்பெயர்ந்து வந்ததை அவதானிக்க முடிந்தது.

வடமராட்சி நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் முள்ளிவெளி, வரணிக் காடு ஊடாக கால்நடையாகவும், டிராக்டர்களிலும், லாண்ட் மாஸ்டர்களிலும் வந்து சேர்ந்தனர் என்று வடமராட்சி செய்திகள் தெரிவித்தன.

உடுபுடவைகள் மற்றும் முக்கிய பொருள் களைத் தம்முடன் எடுத்து வந்த இவர்கள், ஆடு, மாடு, கோழி முதலிய வளர்ப்பு பிராணிகளையும் தம்முடன் வாகனங்களில் ஏற்றிவந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தோர் வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஆறு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்துவந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது என்றும்

உலர் உணவு மற்றும் சமையல் பாத்திரங் களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இதற்கிடையில் தென்மராட்சியிலிருந்து புத்தூர் மணல் பகுதியூடாக ஆவரங்காலுக்கு இடம்பெயர்ந்துவந்த பொதுமக்கள் இடை வழியில் பல இடங்களில் சீருடையினரின் கெடுபிடிகளுக்கு இலக்கானதாகக் கூறப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.