Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர்கள் கொழும்பில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர்கள் கொழும்பில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்:-

30 அக்டோபர் 2013

 

IFJ_CI.JPG

(ஹேட்டேலுக்கு சென்ற குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டவரையும் விசாரணை செய்கின்றனர்)

சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர் ஜக்கி பார்க், பிரதிப் பணிப்பாளரும் திட்ட இணைப்பாளருமான ஜான் வுறோத்திங்ரன் ஆகியோர் கொழும்பில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

ஊடக அமைப்புகளுக்கான வேலைத் திட்டம் ஒன்று தொடர்பாக கொழும்பு ஜானகி ஹேட்டேலில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் ஹேட்டேலுக்கு சென்ற குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டவரையும் விசாரணை செய்தனர்.

அப்போது கலந்துரையாடலில் பங்குபற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் சர்ச்சைப்பட்டனர். அதேவேளை விசாரணை செய்யச் சென்ற அதிகாரிகளில் ஒருவர் கலந்துரையாடல் நடைபெற்ற மண்டபத்தையும் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களையும் படம் எடுத்தார் இதனால் அங்கு மேலும் சர்ச்சை ஏற்பட்டது.

IFJ1.jpg

சர்ச்சைக்கு மத்தியில் இரண்டு வெளிநாட்டவர்களையும் குடிவரவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஆனாலும் கலந்துரையாடலில் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை.

ஊடக அமைப்புகளின எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் ஊடக அமைப்புகள் அனைத்தையும் ஒன்றினைக்கும் உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பது தொடர்பாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி கலந்துரையாடல் ஆரம்பமாகியது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் இடையூறு ஏற்பட்டாலும் கலந்துரையாடல் மாலை 5 மணி வரை நடைபெற்றது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாளை மூன்றாவது நாளாகவும் கலந்துரையாடல் தொடரும் எனவும் இன்றைய தினம் வேலைத் திட்டம் தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அநத ஊடகவியாளர் கூறினார்.

இதேவேளை சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிபாளரும் பிரதி பணிப்பாளரும் நாளை வியாழக்கிழமை நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்றமையினால் நாடுகடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98324/language/ta-IN/article.aspx

தமிழ் ஊடகவியலார் அல்லாத சர்வ்தேச ஊடகவியலாரின் இந்த நடத்தையைப்பற்றி தமிழ் ஊடகவியலார் மீது காட்டமான கருத்துக்களை வைக்கும் சபேசன் தனது கருத்துக்களை, தான் இந்த விசாரணை பற்றி அறிந்தவற்றை முன்னால் வந்து எழுதலாம். 

 

கருத்தரங்கில் பங்கு பற்ற கருத்தரங்கு விசாவை இந்த ஊடகவியார் வைத்திருக்க வேண்டுமா? கோவில்களுக்கு சுற்றுலா சென்ற ஒருவர் தான் போன கோவிலில் நடந்த கருத்தரங்கில் பங்கு பற்றினால்  அவரை வெளியேற்ற வேண்டுமா?

 

முதல் கண் இந்த ஊடகவியலார் தமது பாஸ் போட்டில் தாங்கள் ஊடக வியலார் என்றதை மறைத்திருந்தார்களா? இவர்களுக்கு வீசா அளிப்பவர்கள் இலங்கையின் ஊடகவியலார் மீதான  சட்டங்களை விளக்கி ஊடகவியலார் சுற்றுலா வீசா கேட்கும் ஒரு ஒரு துண்டு பிரசுரம் கொடுக்கும் பழக்கம் தூதுவராலயங்களில் இருக்கா? ஊடகவியலார் தாம் சுற்றுப் பயணம்  செய்யும் இடங்களில் படம் எடுப்பது செய்தி சேகரிப்பது எவ்வளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கு? அண்மையில் தமிழ் நாடு சென்று அரசியல் நிலைமைகளை தான் அவதானித்தாக வந்து சீமானின் திரியில் கருத்து எழுதிய சபேசன் தான் அரசியல் விபரங்கள் சேகரித்திருந்தை தமிழ் நாட்டில் எங்காவது அதிகார பூர்வமாக வெளியிட்டிருந்தாரா?

 

இவரை இன்னொரு மேரி கொலினாகவா இலங்கை காண்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநேரத்தில்

இவ்வாறு ஒரு நடவடிக்கையை  எடுக்கிறார்கள் என்றால்

விசயம் பெரிதாகத்தான் இருக்கும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.