Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்

ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்:

ஆண்களுக்கு மேலான சுதந்திரம் ஒரு காலத்தில் பெண்களுக்கும் இருந்தது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் தொடர்பில் பெரியளவில் அறியப்படாவிட்டாலும் இராணுவ வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

எமது சமூகத்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத் தப்பட்டால் அதைப் பெரிது படுத்திப் பாதிக்கப்பட்ட பெண் இழிவுபடுத்தப்படுவதுபோல உலகத்துக்கே தெரியப்படுத் துகின்றனர். வன்புணர்வு செய்திகளில் பெண்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படுவதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த வன்முறைகளை வெளியே கூற அஞ்சுகின்றனர்.

பெண்களை மேலும் வலுவூட்டப்பட வேண்டிய நிலைமை இங்கு காணப்படுகின்றது. சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் எதையும் மாற்றிவிட முடியாது. மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். சமூகத்தில் மாற்றம் வேண்டும். மக்களுக்கு பெண்கள்தான் வன்முறை பற்றிய விழிப்புணர்வை வழங்கக் கிராம மட்டத்தில் இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=690062409131873080#sthash.GAlwozdJ.dpuf

யாழ் புத்தூர் கிணற்றில் மீட்டக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி…..

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போய் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

புத்தூர் கிழக்கைச் சேர்ந்த மைதிலி அமிர்தலிங்கம் (வயது-26) என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேளை திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி சிவசொரூபனால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னரே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

மேற்படி சம்பவம் யாழ் மக்களிடையே ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

kinaru1.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் மட்டும் இங்கு குற்றவாளியல்ல. அந்தப் பெண்களை சீரழிப்பவர்களை தப்ப விடுவதும் குற்றமே. அனந்தி அக்காவும் மறைமுகமாக பெண்கள் சீரழிக்கப்படலாம்.. சமூகம் தான் தன் பார்வையை மாற்றிக்கொள்ளனும் என்று சொல்ல வாறாவா..????! சீரழிக்கப்பட்டவர்களை.. சீரழிக்கப்படுவதை சமூகத்தின் சிந்தனையில் ஏற்படும் மாற்றம் மட்டும் தீர்த்துவிட முடியாது. பாதிக்கப்படுபவர்களின் சுயமனநிலை என்ற ஒன்றுள்ளது. அதனை.. சீர்செய்வது என்பது அவ்வளவு இலகு அல்ல. அதற்கு முதலில் தப்புச் செய்தவன் தண்டிக்கப்படனும். தவறுகள் எனியும் நடக்காது என்ற நிலையை சமூகம் அவர்களுக்கு உணர்த்தனும். அப்போதுதான் அவர்களால் பாதிப்புக்களில் இருந்து வெளிவர முடியும். சிங்கள இராணுவமும் அதன் கைக்கூலிகளும் உள்ள வரை இது நடக்குமா..????! அனந்தி அக்கா அந்தப் பக்கத்தைப் பற்றி பேசாமல்.. சமூகத்தை மட்டும் சாடி என்ன பயன்..????! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.