Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் அழைப்பை பிரதமர் மன்மோகன் ஏற்றுக்கொண்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமரிடம், விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் தேர்தல் நடாத்துவதற்கும் ஏனைய விவகாரங்களுக்கும் இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு விக்னேஸ்வரன் நன்றி பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98383/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமரிடம், விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் தேர்தல் நடாத்துவதற்கும் ஏனைய விவகாரங்களுக்கும் இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு விக்னேஸ்வரன் நன்றி பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98383/language/ta-IN/article.aspx

போனால் நல்லது.

விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார்.

 

 

இவ்வளவும்தான் செய்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போவாரா.. மாட்டாரா என்கிறதை குதிரைக்கு முன்னால் கட்டின கரட் போலை ஆட்டுறாங்கள்.. நாங்களும் பெரிது படுத்துகிறோம்.. 

போனாலும், போகாவிட்டாலும் மகிந்ததான் அடுத்த தலிவர்.. ஆள் மேலே போனால் தவிர..

மன்மோகன் சிங்கை வடக்கு மாகாணத்துக்கு அழைத்ததால் சர்ச்சை.

இலங்கையின் வடமாகாணத்துக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் விஜயம் செய்ய வேண்டும் என்று இலங்கையின் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கைக்கு வரக்கூடாது என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்தக் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தான் வடமாகாணத்துக்குத்தான் பிரதமரை அழைத்தேனே ஒழிய மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இவை குறித்த தகவல்கள் அடங்கிய, வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்தி ஒலிக்கீற்றை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_manmohanvicky.shtml

 

மனித உறவின் அடிப்படையிலேயே இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன் : சி.வி.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் எழுதிய கடிதம் மனித உறவின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமில்லை. இதற்கும் பொதுநலவாய மாநாட்டுடன் முடிச்சுப் போட முடியாது எனவும் அவ்வாறு செய்தால் அதற்கு தான் பொறுப்புக்கூற முடியாது என வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.cv-wigneswaran--manmohan-singh_0.jpg
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிற் டெலியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தக்கடிதம் மனித உறவின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமில்லை. கடந்த 25 வருடங்களுக்கு  பின்னர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இழுபறிநிலையிலிருந்த இந்தத் தேர்தலை நடத்த இந்தியாதான் அதிகம் நெருக்கடி கொடுத்தது என்பது எனது கருத்து.
இந்தியாவின் நெருக்குதலினால் இடம்பெற்ற தேர்தல் என்பதனால் நன்றிகளைத்தெரிவிப்பது மனித உறவின் வெளிப்பாடு என்ற காரணத்தினாலேயே கடிதம் அனுப்பினேன்.
 
அத்தோடு இலங்கைக்கு எப்போதாவது வரும்போது தான் யாழப்பாணத்திற்கும் வருமாறு கோரிக்கை விடுத்தேன் இதற்கும் பொதுநலவாய மாநாட்டுடன் முடிச்சுப் போட முடியாது எனவும் அவ்வாறு செய்தால் அதற்கு தான் பொறுப்புக்கூற முடியாது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
virakesari

 

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு? மன்மோகன் சிங் யாழ். செல்லும் வகையில் பயணத்திட்டம்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.manmohan-singh_0.jpg
 
கொழும்புவுக்குச் சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன், யாழ்ப்பாணத்திற்கும் பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவுத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. 
 
இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற முடியும் என மத்திய அரசு கருதுகிறது. 
 
யாழ்ப்பாணத்திற்கு மன்மோகன் சிங் சென்று வருவது தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் வெளியுறவுத்துறை யோசனை தெரிவித்துள்ளது. என்றாலும் இது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
 
மன்மோகன்சிங்கின் சுற்றுப் பயண விவரத்தை வெளியுறவுத்துறை தயார் செய்தபின்பு இலங்கையிடம் அளிக்கும். அதன் பிறகே இறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய குழுவினருக்கு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இட வசதி போன்றவை செய்யப்படும்.
 
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சிலரும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மன்மோகன்சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று  அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும் chogm_0.jpgஎன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து  வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
 
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்றும் கடிதம்மூலம் கோரியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இக்கடிதம்பற்றிய செய்திக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில்  பொதுநலவாயமாநாடு பற்றி விக்னேஸ்வரன் கடிதத்தில் எதுவும் எழுதவில்லையென்றும் கொழும்பு வரும்போது யாழ்ப்பாணத்திற்கும் வாருங்கள் என்று மட்டுமே எழுதியதாகவும் முதலமைச்சரது அந்தரங்க செயலாளர் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். 
 
ஆனாலும்  இதற்கு முன்னர் கடந்த செப்ரெம்பர் முற்பகுதியில் இந்தியன் எக்ஸ்பிறஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாயமாநாட்டிற்கு வரவேண்டுமென்று  கூறியிருந்தார்.
 
இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலிவடக்கு வீடுடைப்பு விவகாரமானது அரசியல் விடயம். ஆகவே அரசாங்கத்தோடுபேசியே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
 
இவற்றை வெளிநாடடிலிருந்து வருகின்றவர்களோடு பேசி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியவர் மறுபுறத்தில் இந்தியப் பிரதமர்  யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைப் பார்வையிட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியுள்ளார். இவ்விரு சம்பவங்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்வதேயன்றி வேறில்லை என்பதனை தெட்டத்தெளிவாக காட்டுகின்றது.
 
விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதியமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினுடைய ஒப்புதலில்லாமலோ, அல்லது கூட்டமைப்பினருக்கு தெரியாமலோ நடைபெற்றதல்ல. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது இந்தியப்பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்வதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்றும், பொதுநலவாய மாநாட்டை தாம் பகிஸ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. கூட்டமைப்பின் இவ் இரட்டை அணுகுமுறையானது தமிழ்மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து தமது மறைமுக நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
 
பொதுநலவாயநாடுகள் இம்மாநாட்டை புறக்கணிப்பதானது இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் நெருக்கடிநிலை உருவாக்கியுள்து. குறிப்பாக பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா கலந்துகொள்ளாதிருக்குமாயின் இலங்கைக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவை உண்டாக்கும். இந்த  ஆபத்திலிருந்து இலங்கை அரசை காப்பாற்றவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முற்படுகின்றது. 
தமிழ்நாட்டுமக்கள் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு வலிமையான பின்பல சக்திகளாவர். 
 
விக்னேஸ்வரனின் இக்கடிதமும் இதற்கு முன்னர் கணவன்-மனைவி பிணக்கில் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என்ற கருத்தும் ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து தமிழகமக்களை அகற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளேயாகும். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதற்காக மக்கள் வாக்களித்து அவர்களின் விரல்களிலுள்ள மை காய்வதற்கு முன்னரே தமிழ்மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த
 
போராட்டத்தையும், தமிழகமக்களின் தொடர்ச்சியான ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டத்தையும் பலவீனப்படுத்த முற்படுகின்றனர்.  
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனதும், தமிழத்தேசியக்கூட்டமைப்பினரதும் திட்டமிட்ட இச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 
 
அத்துடன் இம்மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் கோருவதுடன், இதனை வலியுறுத்தி தமிழக மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
virakesari

 

மன்மோகன் சிங் யாழ்ப்பாணம்(வடக்கு) போவதை யாரும் எதிர்க்கவில்லை. பலரும் விரும்புவார்கள் மட்டும் அல்ல தாங்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நிறுதூளிகளை இனித்தன்னும் நேரில் சென்று கண்டு ரசித்து வரவேண்டும் என்பது தமிழ்மக்களின் கோரிக்கை. ஆனால் தமிழ் நாட்டின் சட்டசபை தீர்மானத்திற்க்கு வடமாகாணத் தமிழர் எதிர் என்பது போலக்காட்டி பொதுநலவாயத்துக்கு போக இந்தியா இதை பாவிக்க கூடாது.

 

1987ல் தமிழ் மக்கள் பட்ட கஸ்டத்துக்கு உதவப் போவதாக தமிழக  தமிழ் மக்களை ஏமாற்றி விட்டுவந்து சிங்கள படைகளுடன் சேர்ந்து அன்றைய இசைப்பிரியா கொலைகளை செய்தது இந்தியா. அதையேதான் இன்றும் வடமாகாண பயணம் என்று கூறி வந்து பொதுநலவாயத்தில் சிங்களத்தை தாக்குவோரை சமநிலைப்படுத்தி இலங்கையை காப்பாற்ற முயல்கிறார்கள். 

 

டேவிட் கமறுன். நியூசிலாந்து பிரதம மந்திரி ஜோன் கீ இவர்களின் இலங்கைக்கு எதிரான கண்டங்கள் பொது நலவாயத்தில் முழுத்தொனியில் ஒலிக்க வேண்டுமாயின் இந்தியா அங்கே இருக்க கூடாது. இலங்கை திடுதிப்பாக சந்திரசிறியை மாற்றித்தன்னும் இந்தியாவை வரவைக்க முயல்கிறது. இதுதான் இராமாயணத்து மாரிசன் என்ற மாயமான் என்பதை வட இந்தியர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு றால் கூட போடாம்ல் இந்தியாவின் பாதுகாப்பு என்ற சுறாவை எல்லா சர்வதேச கூட்டங்களிலும் அனுபவித்து வரும் இலங்கை இப்போது  தேர்தல், சந்திர சிறி என்று இரண்டு மூன்று இறால்களைப் போடுவதில் தெரிய வேண்டும் இந்த மகாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு தனக்கு எவ்வளவு அவசியம் என்று கருத்துகின்றது என்பது. இதில் மன்மோகன் சிங்கை சமூமளிக்கவிட்டால் அது தமிழரின் சுதந்திர தீர்வுக்கான கனவில் இன்னொரு முள்ளி வாய்க்காலுக்குச் சமன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.