Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவலவாய மாநாடு (CHOGM) தொடர்பில் எனது நிலைப்பாடு: மன்னார் ஆயர் ஆயர், இராயப்பு யோசப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி விடயம் தொடர்பில் என்னை மேற்கோள் காட்டி எனக்கு இணக்கம் இல்லாத சில செய்திகள் வெளிவந்து உள்ளமையால் இம் மாநாடு தொடர்பில் பின்வரும் விடயங்களை  தெளிவுபடுத்த விரும்பு விரும்புவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மன்னார் ஆயர் கூறி உள்ளார்:-

1. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே CHOGM மாநாடு கொழும்பில் கூட்டப்படுகின்றது. தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இம்மாநாடு நடத்தப்படுவது பொருத்தமில்லை என நான் கருதுகிறேன். கொழும்பில் இம்மாநாடு நடாத்தப் படுவது பொதுநலவாய நாடுகளின் பட்டயத்திற்கு (Commonwealth Charter) முரணானது எனவும் நான் கருதுகிறேன். பேராயர் தெச்மண்ட் டுட்டு (Desmond Tutu) குறிப்பிட்டுள்ளவாறு CHOGM மாநாட்டிற்கு வராமல் விடுவதன் மூலமே இலங்கைக்குப் பொருத்தாமான செய்தியை விடுக்கலாம் என நான் கருதுகிறேன்.

2. வட மாகாண முதலமைச்சர் கௌரவ C.V. விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று கௌரவ இந்தியப் பிரதமர் தமிழ்ப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும். ஆனால் இஃது CHOGM மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்படக்கூடாது.  

அதி வணக்கத்துக்குரிய ஆயர், கலாநிதி. இராயப்பு யோசப்
மன்னார் ஆயர்
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98703/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆயர் அவர்களே.. தெளிவான கருத்துக்கள்..!

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மன்மோகனுக்கு மன்னார் ஆயர் அழைப்பு
Written by Tamil   //  November 8, 2013   //
Mannar-Bishopஇலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டும் எனவும், வட மாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்திய பிரதமர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்தால், யுத்தத்தின் பாதிப்புக்களை புரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் போது என்ன நேர்ந்தது என்பது பலருக்கு தெரியும் எனவும் அவ்வாறான ஓர் சூழ்நிலையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் இந்திய பிரதமருக்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போதல்கள் இடம்பெறவில்லை, மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும் உலகம் உண்மையை அறியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மக்களுக்கு சேவையாற்றுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சேவையாற்றுவார்கள் என மக்கள் திடமான நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

http://news.tamilstar.com/archives/52977#more

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.