Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் மாநாடு இன்று தொடங்குகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு:  காமன்வெல்த் மாநாடு பெரும் சர்ச்சைக்கிடையே இன்று கொழும்பில் தொடங்குகிறது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடங்குகிறது.

இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவங்களால், காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ராஜபக்சே போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னிலையில் சந்திக்க வேண்டிய நிலையில், இம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காமன்வெல்த் மாநாடு திட்டமிட்டபடி இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது.

இந்த மாநாட்டில், ‘9-வது காமன்வெல்த் இளைஞர் மன்றம்’ என்ற பெயரில் 5 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த காமன்வெல்த் இளைஞர் மன்றம், ‘அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வலுவாக ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் அமைகிறது. காமன்வெல்த் நாடுகளின் இளைய தலைவர்கள் இதில் பங்கேற்று, விவாதிக்கிறார்கள்.

 

 

காமன்வெல்த் மாநாட்டின் தலைமை விருந்தினராக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்கிறார். லண்டன் வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக அவர், “இலங்கையில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவேன்.

உள்நாட்டு போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் பேணல் ஆகியவற்றில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை உலகளாவிய அளவுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க இந்த பயணத்தை பயன்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21182

பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பம்

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று கோலாகலமாக ஆரம்பமானது. அதனடிப்படையில், பொதுநலவாய இளைஞர் மாநாடும், மக்கள் மன்ற மாநாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலும் மக்கள் மன்ற மாநாடு ஹிக்கடுவயிலும் நடைபெறுகின்றது.
 
பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொள்கின்ற அதேவேளை, இலங்கை சார்பாக 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
 
இந்த மாநாட்டில் 8 முக்கியத் தலைப்புக்கள் தொடர்பில் ஆராயப்படுவதுடன் இலங்கை அரச தலைவர்களுடன் இளைஞர் மாநாட்டின் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Untitled-0540648.jpg

UntitleD06545d-12.jpg

Untit605265led-12.jpg

Un546464titled-4.jpg

D25454545454.jpg

Unti2015151tled-13.jpg

Untitled-2101512_0.jpg

Untitl5064ed-7_0.jpg

Unti54204546tled-5.jpg

Un5452453titled-4.jpg

Untitle5045454d-10.jpg

Unti505424045tled-3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.