Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரும் உடன் படிக்கையும்

Featured Replies

போரும் உடன் படிக்கையும்

 

NYTimes-Page1-11-11-1918.jpg

 

கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம்  கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , அரச பொது விடுமுறையாக அறிவித்து இந்த நாளை மனதில் இருத்துகின்றன .

 

commemoration-11-novembre-2009-arc-de-tr

 

இன்று காலை 11 மணியளவில் நான் வேலை செய்யும் சார்ல்ஸ் து கோல் எத்துவால் இல் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபியான  ஆர்க் து திறியோம்ப் இல் , நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து முதலாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த அனைத்துப போர் வீரர்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்ததுடன் ஜனாதிபதி பங்குபற்றிய முன்னாள்    படைவீரர்களையும் கௌரவித்தார் .

 

1902848_11novembre.jpg

எனக்கு இந்த நிகழ்வுகள் நான் வாழும் நாடும் அந்த மக்களும் போர்வீரர்களை எந்த அளவுக்கு நேசிகின்றார்கள் என்று உணர்த்தினாலும் ஏனோ எனது மனம் இந்த நிகழ்வில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை . எனது இனமும் மண்ணும் இவர்களுக்கு ஈடாகவே பல இன்னல்களையும் இழப்புகளையும் நிகழ் காலச் சாட்சிகளாகச்  உலகின் மனச் சாட்சிகளை உலுக்கி எடுத்தும் எமக்கான விடிவு தூரத்து  விளக்காகத் தெரிவதும் ஒரு காரணம் என்ற வகையில் எனது மனம் ஒன்றுபட முடியவில்லை . இருந்தபோதிலும் நான் வாழுகின்ற இந்த நாட்டை பாதுகாத்த அந்தப் போர்வீரர்களுக்கு எனது அஞ்சலிகள் .

இந்த நிகழ்வுகள் சம்பந்தமான சில புகைப்படங்கள்

 

1918 டொரோண்டோ வில் நடைபெற்ற போர்வீரர் நினைவு நிகழ்வு

 

800px-1918Toronto_BayandKing_Armistace_D

 

தொடரூந்தில் ஒபந்தம் கைச்சாத்திடப்படல்

 

image%2BArmistice.jpg

 

போர்காட்சிகளில் ஒன்று

 

11-11guerre-14-18.jpg

நானும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறன்,  :)

  • கருத்துக்கள உறவுகள்

இது முதலாவது உலகப்போர்.. இரண்டாவதில், ஹிட்லர் ஃபிரான்சை கைப்பற்றிவிட்டு இதே தொடருந்தில் காட்சி தந்தார்.

முதல் உலகப்போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஜேர்மனி கொடுப்பனவுகள் செய்யவேண்டி இருந்ததும் இரண்டாம் உலகப்போர் உருவாக ஒரு காரணியாக அமைந்தது என அறிந்தேன்.

  • தொடங்கியவர்

நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் பின் ஜனாதிபதி திரும்பும் பொழுது தீவிர இடது  சாரி ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கெதிரான கோசங்களையும் அவரை அவமானப் படுத்தும் விதமாக நடந்து கொண்டிருந்தனர். இதுவரை 70 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைதாகி உள்ளனர் . ஒரு நாட்டின் தேசிய நிகழ்வின் பொழுது அந்த நாட்டின் முதல் குடிமகனை அவமானப் படுத்தும் நிகழ்வானது பிரெஞ்ச் மக்களிடயே கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள அதே வேளையில் , நிகழ்வின் பொழுது ஜனாதிபதிக்கு அதியுச்சப் பாதுகாப்பினை வழங்கிய பிரெஞ்ச் காவல் துறையினரும் , உளவுத் துறையினரும் மக்களுடன் மக்களாக நின்று இறுதியில் கலகத்தை விளைவிதவர்களை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி மூலம் நாட்டின் பாதுகாப்பு நிலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது . எது எப்படியிருந்த பொழுதும் ஒரு நாட்டின் தேசிய நிகழ்வின் பொழுது ஜனாதிபதியை அவமதிப்பது பிரான்சில் புதியதாக உள்ளது . முன்பு ஒருமுறை உதைபந்தாட்டப் போட்டியில் பிரான்சின் தென்கோடியில் உள்ள பாஸ்டியா சுதந்திர ஆதரவாளர்கள் மைதானத்தில் தேசிய கீதம் பாடப் படும்பொழுது பாஸ்டியா கொடியை பிடித்தபடி உள்ளே நுழைந்ததிற்க்கு  அபோதைய ஜனாதிபதி ஜாக் சிராக் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறியமை குறிபிடத்தக்கது .

  • கருத்துக்கள உறவுகள்

ஃபிரான்சிலுள்ள நீசுவா.. பூசுவா எல்லாருக்கும் சுதந்திரம் குடுத்தா என்ன?! :(:D

  • தொடங்கியவர்

இது முதலாவது உலகப்போர்.. இரண்டாவதில், ஹிட்லர் ஃபிரான்சை கைப்பற்றிவிட்டு இதே தொடருந்தில் காட்சி தந்தார்.

முதல் உலகப்போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஜேர்மனி கொடுப்பனவுகள் செய்யவேண்டி இருந்ததும் இரண்டாம் உலகப்போர் உருவாக ஒரு காரணியாக அமைந்தது என அறிந்தேன்.

 

முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்சிய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்கு பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாக சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்கு பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.

ஜெர்மன் பேரரசு 1918-19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியில் இருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் லண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தை கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியை பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.

சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையை குறுநில மன்னர்களுக்கு எதிராக தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாக சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தை காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காக கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்தில் இருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன.

அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாக தன்னுடன் இணைத்து கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.

ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளை கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாக பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றி கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்த படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்கு பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்ப பெற்றது.

ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் 'பாசிச தேசியவாத படைகளையும்', சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையை தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்க பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.