Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகம் (Democracy) - தமிழ்நாட்டில் & இந்தியாவில் மாணவர்கள் மீது அரசின் பயங்கரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

601121_545014285592994_696862492_n.jpg

 

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,

ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம்

இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் எங்களை தாக்க துவங்கினார்கள் இதில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மாணவர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பின் விலகி சென்றனர் , அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர் வந்த அதிகாரிகள் பெயரளவிற்கு கூட ஏன் இந்த போராட்டம் உங்களின் கோரிக்கைகள் என்னவென்று கேட்கவில்லை! வந்த உடனே உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம் மரியாதையாக தங்களுடன் வரும்படி மிரட்டினார்கள் , நாங்கள் போராட்டத்தை கைவிடவில்லை, தொடர்ந்து அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டோம் நாங்கள் எதற்கும் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்ட அவர்களிடம் எங்களை கைது செய்ய போதுமான ஆட்கள் இல்லை இதனால் அவர்கள் மற்ற அதிகாரிகளை வரவழைக்கும் பணியில் ஈடுபட்டனர்

இதை சாதகமாக உணர்ந்து கொண்ட நாங்கள் கோஷமிடுவதை நிறுத்திவிட்டு அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடம் ஈழத்தில் இலங்கை மற்றும் இந்தியா சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனஅழிப்பை தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுத்துரைத்து கொண்டு இருந்தோம், சுற்றுலா பயணிகளும் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆர்வமாக கேட்டு உணர்ந்து கொண்டு உங்களுடைய போராட்டத்திற்கு எங்களுடைய ஆதரவு உண்டு தங்களது மாநிலங்களில் உள்ள தங்களது நண்பர்களிடமும் இந்த அவலங்களை எடுத்துரைப்பதாக சொல்லி முக இறுக்கத்துடன் கடந்து சென்றனர். இதை கண்டு சினமுற்ற காவல் (?) துறை அங்குள்ள தனியார் காவலாளிகளுடன் சேர்ந்து ஏவல் துறையாக மாறி எங்களுடன் தள்ளுமுள்ளு செய்ய தொடங்கினர், மாணவர்கள் இருவரை பிடித்து இழுத்து சென்று அவர்களை மண்டபத்தின் கீழ்பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தினர் அவர்களை விடுவிக்க சென்ற 4 மாணவர்களையும் பிடித்து வைத்துகொண்டு அவர்களிடம் உங்களை விட வேண்டுமானால் போராட்டத்தை மற்றவர்கள் கைவிட்டுவிட்டு கைதுக்கு உடன்பட்டு தங்களுடன் வர வேண்டும் என்றும் மீறினால் உங்களை பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இதையெல்லாம் எதிர்கொண்டு மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தையும், பரப்புரையையும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தொடர்ந்தோம். சரியாக 3.30 மணியளவில் தனி படகு மூலம் ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் அணியினர் வந்து சேர்ந்தனர். வந்தவர்களுக்கு முன்பே என்ன செய்ய வேண்டுமென்று உயரதிகாரி உத்தரவிட்டிருந்தார் போலும் எங்களின் அடுத்து வந்த உடனேயே ஆளுயுர லத்தி மற்றும் கட்டைகளை கொண்டு எங்களை அடித்து தனி படகு மூலம் கரைக்கு இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றினர் , வாகனம் கிளம்பியவுடன் அடிக்க துவங்கியவர்கள் மண்டபம் சென்ற பின்னும் விடவில்லை ஒரு ஒரு ஆளாக இறக்கிவிட்டு சுற்றி 6 பேர் நின்றுகொண்டு சரமாரியாக கட்டையால் அடித்து மண்டபத்திற்குள்ளே அனுப்பினார்கள் அனைவரையும் அடித்து உள்ளே இழுத்து சென்ற பின் கதவையை மூடிவிட்டு சிங்களவனுக்கு சற்றும் குறையாமல் மாலை 6 மணிவரை நடக்க முடியாத அளவிற்கு அடித்து அனைவரிடமும் முகவரி மற்றும் போட்டோக்களை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டனர்.

கன்னியாகுமரி கடற்கரை காவல்நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் "தர்மலிங்கம்" (Ph + 91 94426 18847) தலைமையில் தான் மாணவர்களுக்கு எதிரான இத்தனை அடக்குமுறைகளும் , அநீதிகளும் நிகழ்த்தப்பட்டது.
மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதலை நடத்திய அனைத்து காவலர்களும் தங்களது சீருடையில் இருந்த பெயர் பட்டையை நீக்கி இருந்தது குறிப்பிடதக்கது. படுகாயமடைந்த மாணவர்கள் அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இனத்திற்காக போராடும் மாணவர்களை காவல்துறையை விட்டு கண்மூடித் தனமாக தாக்கிய இந்துத்வா மதவாதிகள் !

கன்னியாகுமரியில் 35 மாணவர்கள் நேற்று (10-11-13) விவேகானந்தர் பாறை மீதேறி காமன் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்றும் ,அம்மாநாட்டில் கலந்து கொள்ளும் காங்கிரசு அரசுக்கு எதிராகவும் ,ஈழத்திற்கு ஆதரவாகவும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவேகனந்தர் பாறையை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகளின் கவனம் மாணவர்கள் பக்கம் திரும்பியது. 4 மணி நேரம் போராட்டம் தொடர்ந்தது .காவல் துறையினர் கைது செய்ய முயன்றால் கடலில் குதித்து விடுவோம் என போராடிய மாணவர்கள் எச்சரித்திருந்தனர்.

கூட்டம் கூட்டமாக திரண்ட போலிஸ் 4 மணி நேர முயற்சிக்கு பிறகு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.இதில் இனத்திற்காக போராடிய இளம் மாணவர்கள் படுகாயமடைந்தனர் .

விவேகனந்தர் பாறை சுற்றுலா தளமாக்கப் பட்டு 42 ஆண்டுகள் ஆகிய நிலையில் இதுவரை பாஜக, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் கோட்டையாக திகழும் அவ்விடத்தில் மாணவர்கள் ஈழத்துக்காக வரலாற்றுப் போராட்டம் நடத்தி காயப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்திதாளில் இந்துத்துவா அமைப்பினர் இம்மாணவர்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் இந்துக்களின் புனிதத் தலத்தை இவர்கள் கொச்சைப் படுத்தியதாகவும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தி உள்ளனர்.

இந்துத்துவா , ஆர்.எஸ்.எஸ் , பாஜக இதுபோன்ற மதவாத இயக்கங்கள் சமூகத்தில் பரவிக் கிடக்கும் ஆக்டோபஸ்கள்.

இன நலத்திற்காக வெகு மக்களின் துயர பெருமூச்சை -வேதனை விம்மலை எடுத்துரைக்க தங்கள் பாதுகாப்பை பற்றியும் கவலை படாது போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல் துறையினரை ஏவி தாக்க செய்தது இக்கட்சியினர் தான்.

பின்னர் மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய காவல் துறையினர் இக்கட்சியினரால் ஆபத்து நேரிடக் கூடும் என்று மாணவர்கள் தனது சொந்த ஊர் திரும்ப பேருந்தில் ஏறும் வரை பாதுகாப்பு அளித்துள்ளனர்.

இங்கு நாம் முன்வைக்கும் கேள்விகள்.

விவேகானந்தா கேந்திராவிற்கு தமிழகத்தில் இடம் கொடுத்தது தமிழர்கள். அங்கு தொண்டு செய்தது தமிழர்கள். ஆனால் அங்கு வந்து மக்கள் விழிபுணர்வுக்கு தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி இல்லையா ? தமிழர் மண்ணில் இருந்து கொண்டே வட இந்திய ஆரிய மதத்தை தமிழர்களிடையே பரப்பும் போது தமிழர்களின் துணை தேவைப் படுகிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்கு இந்த இந்துத்வா கும்பல் குரல் கொடுக்காதது ஏன் ? ஒரு முறை கூட ஆர் எஸ் எஸ் தலைவர் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதையை செலுத்தாதது ஏன் ?

தமிழர்களின் பெருமையை மறைக்கும் இவர்கள் ஆரிய மதத்தையும் ஆரிய மொழியை மட்டுமே தூக்கிப் பிடிப்பது ஏன் ? தமிழர்கள் தான் விவேகானந்தாவிற்கு உதவி செய்து வெளிநாட்டிற்கு அனுப்பினார்கள் . ஆனால் இந்த விவேகானந்தா பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் விவேகானந்தா கேந்திரம் தமிழர் பண்பாட்டையும், நூல்களையும் , தமிழர்களையும் மதிக்காதது ஏன் ?

இப்போது தமிழக மாணவர்கள் மீது ஏவப்பட்ட திட்டமிட்ட தாக்குதலுக்கு முழு பொறுப்பு இந்த இந்துத்துவா அமைப்புகள் தான் . விவேகானந்தா கேந்திரா தமிழகத்தில் இருந்து துரத்தி ஏரியப்பட வேண்டிய மற்றுமொரு இந்துத்வா பாசிச அமைப்பாகும்.

கருத்தாக்கம் - ராஜ்குமார் பழனிச்சாமி

1426480_545012342259855_1802572775_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேகானந்தர் பாறையில மாணவர்கள் போராட்டம் நடத்தினாங்களாம். அது அவர் நினைவிடத்தை மாணவர்கள் எப்படிங்கிற போர்வையில நாசப்படுத்த செய்ற சத்தியம். இப்படி எல்லாம் ஒரு கூட்டம் புலம்புது.

இவனுங்க கிட்ட சில கேள்விகள்.

விவேகானந்தர் அமெரிக்கா போக காரணமா இருந்ததே சேதுபதி என்னும் பெயர் கொண்ட என் தாத்தன் தமிழ் மன்னன் தான் என இவனுங்களுக்குத் தெரியுமா?.

இதே சேதுபதி மன்னரின் கட்சித் தீவை இந்தியா சிங்களனுக்கு தாரை வார்த்தது பற்றி இந்த இந்து என்று கூறி ஏமாற்றும் கும்பல் என்றாவது போராடி இருக்கிறதா?.

விவேகானந்தருக்கு பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்து ஒரு மன்னரைப் போல உபசரித்தது ஈழத் தமிழ் மக்கள் என்ற உண்மை தெரியுமா?.

இந்து இந்துன்னு சொல்லி இவனுங்க கொள்ளை அடிக்கிற அதே நேரத்தில தான் ஈழத்தில இந்துக் கோவில்களை சிங்களன் இடிச்சுத் தள்ளினான் தெரியுமா?.

இன்னைக்கும் தமிழன் தான் உலகம் முழுக்க கோவில்களை கட்டறான் அது இவனுங்களுக்கு தெரியுமா?.

இந்துக் கோவிலை இடிக்கும் போது விவேகானந்தர் சிலையில போராடாம வேற எங்கடா போரடாறது?.

விவேகானந்தர் சிலையில போராடறதுக்கு இந்த போலி இந்துக் கூட்டத்தை விட, வங்காளிகளை விட தமிழனுக்குத் தாண்டா உரிமை இருக்கு.

# இவர்கள் நோக்கம் இந்து மதத்தை காப்பது இல்லை. தமிழர்களை அழிப்பது. இந்து மதம் எங்க மதம்டா. நீங்க ஒன்னும் புடுங்க வேணாம். நாங்க பாத்துக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
தமிழக மாணவர்கள் விவேகானந்தர் பாறையில் நடத்திய போராட்டம் தமிழினத்துக்கு எதிரான ஒரு மோசடி நிறுவனத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

அது விவேகானந்தர் பாறைக்கு சொந்தம் கொண்டாடும் விவேகானந்தர் கேந்திரம் என்னும் அமைப்பு.

விவேகானந்தரின் கொள்கைகளை பரப்புவதை தவிர அத்தனை வேலைகளையும் இந்த அமைப்பு செய்வதாக அறிய முடிகிறது.

முதலில் இந்தப் பாறை இந்த அமைப்புக்கு எப்படி சொந்தமானது என்பதைப் பற்றி விசாரணை வேண்டும். விவேகானந்தர் பாறையை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும்.

# ஒண்ட வந்த பிடரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம்.

 

 

தற்போது.... எழும்புர் ரயில் நிலையம் மறியல் !
1393464_544541855620581_738256365_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thirumurugan Gandhi:

கன்னியாக்குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதும், அவர்களிடத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதமும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. (இரு நாட்களாக இணையத்தில் எழுத இயலாது போயிற்று.)

Prabhakaran V Prabha PK, மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன், @விருதை பிரவின், நெய்வேலி காசி , விருதை தினேஷ், நெல்லை முகம்மதுகான் ஆகியத் தோழர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு இன்று தோழர்களுடன் பிற இடங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். தோழர்கள் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சென்று வழக்குகளை கையாண்டார்கள். கடுமையாக தாக்கிய அரசிற்கு பதில் சொல்லும் விதமாகவே இன்று நடக்கும் முழு அடைப்பு சிறந்த பதிலாக இருக்கிறது. கட்சிகள் எல்லை கடந்து அனைவரும் ஒன்றாக களம் இறங்கி இருப்பது தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும், இந்திய தேசிய கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.. ...

தொழிற்சங்கத்தினை கையில் வைத்துக்கொண்டு பஜனை மடத்தினைப் போல நடத்திகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிழைப்புவாதத்தினையும் தமிழ்ச் சமூகம் வரும்காலத்தில் வெற்றிகொள்ளும்.
தமிழ்நாடு வணிகர் சங்கம், மதிமுக, தமுமுக, த.வா.க, நாம் தமிழர், எஸ்டிபிஐ, த.பெ.தி.க, ததேபொக, திவிக, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகோர்த்து கண்ட போராட்டம் பெரிய கட்சிகள் மட்டுமே நிகழ்த்திய கடையடைப்பு போராட்டத்தினை மக்கள் கோரிக்கைக்காக வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது.

இந்திய தேசியப் பற்று மயிறுக்குச் சமம் என்று களம் காண்போம். இந்திய தேசியவாதிகள் முகத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகப் போராட்டங்கள் எட்டி உதைக்கட்டும்.

இந்தப் போராட்டங்களை வலிமையானதாக மாற்றிய அய்யா.வெள்ளையன் அவர்களுக்கு எமது வணக்கங்களும், நன்றிகளும்.

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக்த்தின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். கைகோர்ப்போம்.
தமிழக-இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு ஒடுக்குமுறைகள் உடைக்கப்படட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.