Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடங்கியது வலி.வடக்கு மக்களது போராட்டம்! 15ம் திகதி வரை நீடிக்குமென்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்!!

Featured Replies

நவம்பர் 12, 2013

 

வலி.வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் படைத்தரப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடுகள் இடிப்பினை  தடுத்து நிறுத்தக்கோரியும் வலி.வடக்கு மக்களின்  தொடர் உணவு விடுப்புப் போராட்டம் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

 

mavaddapuram_demo_1212131.jpg

 

வரலாற்றுப்புகழ் மிக்கதும் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுமான மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான  இன்று காலை முதல் ஆரம்பமாகி இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர்த்த வேண்டி இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை இத்தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இச்செய்தி பிரசுரிக்கப்படுகையினில் மக்களது எண்ணிக்கை ஆயிரத்தினை தாண்டியுள்ளது. தொடர்ந்தும் படையினரதும் பொலிஸாரதும் வீதி தடைகளை தாண்டி மக்கள் வந்துகொண்டேயிருந்தனர்.

 

mavaddapuram_demo_1212132.jpg

 

வலி.வடக்கின்  24 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 6382 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் முற்றாக சுவீகரிக்கப்படும் அபாய நிலையினிலுள்ளது. இந்த போராட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையினில் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் முகாம்களிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் சரவணபவன் ஆகியோருடன், வடக்கு மாகாண சபை   அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஜங்கரநேசன், உறுப்பினர்கள் சித்தார்த்தன், அனந்தி, சிவாஜிலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

mavaddapuram_demo_1212134.jpg

 

பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேச தலைவர்களே தமக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருவார்களென நம்புவதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர். இதனிடையே வடக்கிற்கு படையெடுத்திருக்கும் ஊடகவியலாளர்கள் பலரும் செய்தியினை அறிக்கையிட அங்கு திரண்டிருந்தனர்.அதே வேளை நூற்றுக் கணக்கினில் படைப்புலனாய்வாளர்களும் திரண்டிருந்தனர்.

 

mavaddapuram_demo_12121313.jpg

 

 

http://www.pathivu.com/news/28040/57/15/d,article_full.aspx

நியாயமான போராட்டம். போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 23 வருடங்களிற்கும் மேலாக இந்தப்பிரதேசமக்கள் தமது சொந்த இடங்களில் வாழ்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது அநீதியானது. இராணுவம் முன்புபோல் பலாலி, காங்கேசன்துறை முகாம்களினுள் முடங்கினால் முன்புபோல் இப்பகுதி மக்கள் தமது ஊர்களில் குடிபுகமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான வேண்டுகோள் என்னவெனில் பொதுநலவாய நாட்டிற்கு வரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களாகட்டும், யாழ்ப்பாணம் வரும் ஊடகவியலாளர்களாகட்டும், அவர்களோடு நெருக்கமான நட்பினை உருவாக்க முயற்சி செய்யுங்கள். அது தான் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்ல உதவும். இன்று போராட்டம் நடப்பினும், நாளை சிங்களம் இவர்கள் போன பிற்பாடு என்ன செய்யும் என வெளிப்படுத்த வேண்டும்.

போராட்டத்துக்கான காலத்தெரிவும் மிக முக்கியமானது....!  

 

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அனுமதிக்க படுவார்களோ தெரியாது...  ஆனாலும் அங்கு பொதுநலவாய நாடுகள் கூட்டத்துக்கு போய் இருக்கும் ஊடகவியளாளர்கள் விபரம் தெரிந்தால் நல்லது... 

 

அவர்களுக்கு  அழைப்பும் வேண்டுகோளையும் அனுப்பி வைக்கலாம்...  

 

ஆங்கிலத்தில் தான் அனுப்ப வேண்டும் எண்றில்லை...  தமிழில் கூட எழுதலாம் ...  

கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டமொன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (13) இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று காலை 10.45 மணி முதல் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமராட்சியிலிருந்து வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக பொதுமக்களுடன் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது இன்று புதன்கிழமை (13) காலை வடமராட்சியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் பயணித்த பஸ் மீதே இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.