Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்தும் போராட்டம்

Featured Replies

கண்டனப் போராட்டம்

 

கொழும்பில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாடு  நடைபெறும் நாட்களில் நில அபகரிப்புக்கு  எதிராக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் நொவெம்பர் 15, 16 நாட்களில் நடைபெற இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் த் ததேகூ நடத்தும் போராட்டத்துக்கு   ஆதரவு  தெரிவுக்கும் முகமாக  கண்டனப் போராட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிலஅபகரிப்பு இனவழிப்பு, இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல்,  காணாமல் போனவர்கள்சிறைகளில் விசாரணையின்றி ஆண்டுக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  அரசியல் கைதிகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்  போன்றவற்றைக் கண்டித்தும்  அனைத்துலக போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்   எதிர்வரும்

2013 நொவம்பர் 14 ஆம்  நாள்   (வியாழக்கிழமை

டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக (36 Eglinton Ave. West, Toronto, Intersection Eglinton & Yonge)

பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை

ஒரு கண்டனப் போராட்டத்தை  கனடிய தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளன்ன.

இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில்   நடக்கும் இப் போராட்டத்திற்குத்  தமிழ்த் மண்ணையும் மக்களையும் நேசிக்கும்  கனடிய தமிழர்கள் அனைவரும் வருகை தந்து தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு  அன்போடு அழைக்கிறோம்.

"இனப்படுகொலைகளின்  சூத்திரதாரி மகிந்த இராஜபக்சே பொது நலவாய நாடுகளின் தலைவனா

முடிவு காண வாரீர் அணி திரண்டு !! 

தொடர்புகளுக்கு :

கனடிய தமிழர் அமைப்புகள்

 

416-888-1128 ,  நாடு கடந்த தமிழீழ அரசு.

416-240-0078 ,  கனடியத் தமிழ் காங்கிரஸ்

416-917-8951 ,  நாம் தமிழர் - கனடா

416-402-9393 ,  கனடாத் தமிழர் இணையம்

416-281-1165 .  தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு.

 

எனது e-mail இல் கிடைக்கப்பெற்றது .

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

416-888-1128 ,  நாடு கடந்த தமிழீழ அரசு.

416-240-0078 ,  கனடியத் தமிழ் காங்கிரஸ்

416-917-8951 ,  நாம் தமிழர் - கனடா

416-402-9393 ,  கனடாத் தமிழர் இணையம்

416-281-1165 .  தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு

 

இதற்குள்  எல்லோரும் இருக்கிறார்களா??????

 

இருந்தால் சந்தோசம்

நல்ல முயற்சி

தொடர வாழ்த்துக்கள்.........

 

  • தொடங்கியவர்

நவம்பர் 14, 1976ம் ஆண்டு ஈழத் தமிழர் அறப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை. சமஷ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியையே வழி நடாத்தி வந்த ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழ வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த நாள்அதையும் ஜனநாயக ரீதியிலான ஒரு ஆணையாக, அங்கீகாரமாக, முடிந்த முடிவாக வெளியிட்ட நாள் இதே காலப்பகுதியில் தான் இப்போது பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.

இந்தச் சமயத்தில் சனல்-4 ஊடகம் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு சான்றான காணொளியை வெளியிட்டது. ஆம், இது உலகத் தமிழினமே ஒருமித்து உலகெல்லாம் குரலெழுப்ப வேண்டிய தருணம் இதுவரைக்குள், கனடாத் தமிழ்க் கூட்டமைப்புடன் கனேடியத் தமிழக் காங்கிரஸ், கனேடியத் தமிழர் இணையம், கனேடிய நாம் தமிழர் இயக்கம் ஆகியவற்றுடன் கனடா நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்துள்ளது.

இந்த இனவழித் தேசிய முடிவை ஏனைய குழுக்களும் ஊர்ச் சங்கங்களும் தமிழர் அமைப்புக்களும் மேற்கொள்ளலாம்.

இது பிரிந்து நின்று நமது குழுக்களின் பலத்தைக் காட்டும் நேரமல்ல முழுத் தமிழக் குலத்தின் எழுச்சியையும் எதிர்ப்பையும் ஒருமித்துக் காட்ட வேண்டிய நேரம். தாயகத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட உள்ள நேரத்தில் கனடா வாழத் தமிழர்களாகிய நாங்களும் இணைவோம்.

வெளிநாடெங்கும் புலம்பெயர் தமிழர்களும் அதே சமயத்தில் ஒரே அணியில் திரண்டு முழங்க வேண்டும் என்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை.

நிலத்தில் வட கிழக்கெங்கும் நவம்பர் 15 , 16 ம் திகதிகளில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை கூட்டமைப்பினர் நடாத்துவதற்கு ஆதரவாக புவியின் வடதுருவ நாடாம் கனடா தேசத்தின் முன்னணிக் கட்சிகளின் நிலைப்பாட்டின் வழியில் கனடாவின் அரச தலைமையே பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மகாநாட்டை புறக்கணித்ததை வலுப்படுத்தும் முகமாக ரொறன்ரோவில் இடம் பெறவுள்ள ஜனநாயக ரீதியிலான அறவழி அகிம்சைப் போராட்டத்தில் பங்கெடுப்போம்.

புலிகளின் மறப்போராட்டத்தை முள்ளிவாய்க்காலுள் புதைக்க முயன்றபோது உலகின் நகரெல்லாம் திரண்ட தமிழப் படையே ரொறன்ரோவில், 36 எக்லிங்ரன் அலெனியூ மேற்கில் அமைந்துள்ள தமிழரைக் கொல்ல அன்றே வாளேந்திய சிங்கக்கொடியை கொண்ட கொடிய சிறிலங்கா அரசின் தூரகத்தின் முன்னால், நவம்பர் 14 , 2013 வியாழக்கிழமை மாலை 3 .30 தொடக்கம் 6 30 மணிவரை நடைபெறவுள்ள அறப் போரில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

நில அபகரிப்பு, இன அழிப்பு, பாலியல் வல்லுறவு, இனக் கலப்பு, இராணுமயப்படுத்தல், சிங்களமாக்கல், பௌவுத்த திணிப்பு போன்றனவற்றை எதிர்த்தும், காணாமல் போனவர்கள், விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்போர், அரசியற் கைதிகள் ஆகியோருக்காகவும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் நிகழவுள்ள அறப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் அமைப்புக்களின் சார்பில் அழைக்கிறோம் என கனடிய தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

poradam_canada_001.jpg

 

http://www.canadamirror.com

Edited by Gari

  • தொடங்கியவர்

416-888-1128 ,  நாடு கடந்த தமிழீழ அரசு.

416-240-0078 ,  கனடியத்தமிழ் காங்கிரஸ்

416-917-8951 ,  நாம் தமிழர் - கனடா

416-402-9393 ,  கனடாத் தமிழர் இணையம்

416-281-1165 .  தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு

 

இதற்குள்  எல்லோரும் இருக்கிறார்களா??????

 

இருந்தால் சந்தோசம்

நல்ல முயற்சி

தொடர வாழ்த்துக்கள்.........

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சகல நடவடிக்கைகளிற்கும் மேற்கூறிய அமைப்புகள் ஆதரவு வழங்கி ஒத்துழைப்பு

வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ஒற்றுமை... என்ன ஒரு ஒற்றுமை... இந்த ஒற்றுமை அமைப்புக்களுக்குள் NCCT ஐக் காணவில்லையே. பிரச்சனைப்படுவதே அவர்கள் கூடத் தானே...

என்ன ஒரு ஒற்றுமை... என்ன ஒரு ஒற்றுமை... இந்த ஒற்றுமை அமைப்புக்களுக்குள் NCCT ஐக் காணவில்லையே. பிரச்சனைப்படுவதே அவர்கள் கூடத் தானே...

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132002

 

  • தொடங்கியவர்

என்ன ஒரு ஒற்றுமை... என்ன ஒரு ஒற்றுமை... இந்த ஒற்றுமை அமைப்புக்களுக்குள் NCCT ஐக் காணவில்லையே. பிரச்சனைப்படுவதே அவர்கள் கூடத் தானே...

NCCTசார்பாக கனடா TNA  தொடர்பு கொண்டவர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டத்தை செய்தால் முன்மாதிரியாக இருக்கும் என தெரிவிக்க ,TNA ஐ சார்ந்தவர் மற்றைய அமைப்புகளுடன் கலந்துரையாடி மீண்டும் 

NCCT நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர்கள் தொடர்புக்கு வரவேயில்லை .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியில்லை துளசி. அவர்கள் வியாழக்கிழமை, இவர்கள் வெள்ளிக் கிழமை ஒழுங்கு செய்திருந்தனர். இருப்பினும் வெள்ளிக்கிழமை நிகழ்வினை ஒத்தி வைத்துள்ளனர். மற்றும்படி ஒரு மாற்றமும் புதிதாக இல்லை

அப்படியில்லை துளசி. அவர்கள் வியாழக்கிழமை, இவர்கள் வெள்ளிக் கிழமை ஒழுங்கு செய்திருந்தனர். இருப்பினும் வெள்ளிக்கிழமை நிகழ்வினை ஒத்தி வைத்துள்ளனர். மற்றும்படி ஒரு மாற்றமும் புதிதாக இல்லை

 

ஆம், இப்பொழுதுதான் முகநூலில் பார்த்தேன். வெள்ளிக்கிழமை போராட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. :rolleyes:

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.