Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செனல்4 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களா என்பது குறித்து விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செனல்4 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

நேற்றைய தினம் சினமன் கிரான்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறிய போது, ஜனாதிபதி; மஹிந்த்  ராஜபக்ஷவை, செனல்4 ஊடகவியலாளர்கள் நெருங்கி கேள்விகள் சிலவற்றை கேட்டனர்.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நிலைப்பாடு என்ன, சந்திக்க முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

சந்திக்க முடியும் எனவும், தம்முடன் தேனீர் அருந்த வருமாறும் ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.

யுத்தக் குற்றச் செயல் குறித்த கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதியை நெருங்கிய மில்லர் அவருடன் கை குலுக்கியிருந்தார்.

இந்த விடயம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகவியலாளர்கள் எவ்வாறு ஜனாதிபதியை நெருங்கி கேள்விகளை எழுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பிரவேசித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட செனல்4 ஊடகவியலாளர்களுக்கு பூரண அனுமதியளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் செனல்4 ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சில நேரங்களில், சில இடங்களுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கி ரயிலில் பயணித்த செனல்4 ஊடகவியலாளர்களை திரும்பிச் செல்லுமாறு ஆலோசனை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக செனல்4 ஊடகம் புதிய ஆவணப்படங்களை தயாரித்தால் அதனை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் இப்பதாக அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98942/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.