Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கு மக்களது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுக்கப் புறப்பட்ட மக்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் வலிகாமம் வடக்கு மக்களது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்த மக்கள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வடமராட்சியின் உடுப்பிட்டி மற்றும்; பொலிகண்டி இடம்பெயர்ந்தோர்  முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மீதே இன்று காலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நேற்றைய தினம் போன்று போராட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி புறப்பட தயாராக இருந்த வேளையில் தரித்து நின்ற வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு சென்ற  சிலரே கற்களை வீசிய பின்னர் தப்பித்து சென்றுள்ளனர். தாக்குதலில் பொதுமக்களிற்கு சேதங்கள் ஏதும் ஏறபட்டிராத போதும் வாகனங்கள் சேதமடைந்தன.

இதனையடுத்து வாகன உரிமையாளர்கள் மேற்கொண்டு பயணிக்க மறுத்துவிட்டனர். இதனால் இரண்டாவது நாளாக போராட்டத்தில் கலந்து கொள்ள அவர்களினால் முடியாமல் போயிருந்தது. இதே நிலை பரவாலக நீடித்தமையினால் மக்களது பங்கெடுப்பு வீதம் இன்று வீழ்ச்சியடைந்திருந்தது.

இதனிடையே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனும் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியிருந்தார். அவருடன் மாவை.சேனாதிராசா மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களாhன சிறீதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரென பலரும் அங்கு இரண்டாவது நாளாக அங்கு இன்றும் திரண்டிருந்தனர்.

இதனிடையே இன்றைய போராட்டத்தில் பங்கெடுக்க சென்றிருந்த வாகனங்கள் வீதிகளில் தடுக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98928/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.