Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை ஏற்க முடியாது – ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கோரியிருந்தார். இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டு வரும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைளுக்கு இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு விசாரணை நடாத்த அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அரசாங்கம் உள்நாட்டு விவகாரங்களை சர்வதேச மயப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் இலங்கையர்கள் விசாரணை நடாத்தப்படுவது குறித்த சட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக அவா குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99182/language/ta-IN/article.aspx

 

சஜீத்துக்கும் மங்களவுக்கும் இயடையில் நன்றாக மூட்டப்பட்டிருக்கு. இன்னொருதடவை கட்சியை உடையும். சஜீத் வெளியே போகலாம். அவர் ஐ.நா விசாரணையை கேட்டு முடிய இவர் இப்படி பேசுகிரார். 

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்தே ஆகவேண்டும் : ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து தப்பிக்கவே முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி
Written by Tamil   //  November 18, 2013   //
mangala-samaravira2014 மார்ச் மாதத்திற்குள் மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசு நம்பகத்தன்மையுடைய உள்ளக விசாரணையை மேற்கொள்ளாவிடின் ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து தப்பவே முடியாது” என  எச்சரிக்கை விடுத்தது.

பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், 2014 மார்ச் மாதத்துக்குள் மனித உரிமை மீறல் குறித்து இலங்கை கவனம் செலுத்தாவிடின் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது,   பிரிட்டிஷ் பிரதமர் கூறுவதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இப்படியான குற்றச்சாட்டுகளை மறுக்கும் முன் இதுசம்பந்தமாக ஆராய்வதே சிறந்ததாகும். ஆனால், அரசு இவற்றைக் கவனத்தில் எடுக்காது சர்வதேசத்தை ஏமாற்றுவதையே தனது வழமையாக கொண்டிருக்கிறது.

பிரதமர் கமரூன் கூறியதைப் போன்று சுயாதீன விசாரணை வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாமும் பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும், அரசு இதுகுறித்து சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை.    காரணம் இங்கு சர்வாதிகார ஆட்சியே நிலவி வருகிறது.

நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை அரசு செய்திருக்குமானால் எந்த நாடும் சரி அரச தலைவர்களும் சரி இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கமாட்டார்கள். நம் நாடு விடயத்தில் மூக்கையும் நுழைத்திருக்க மாட்டார்கள்.

அத்தோடு, இந்த பொதுநலவாய மாநாடும் அரசுக்கு பெரிய அடியாகவே அமைந்துள்ளது. உறுப்பு நாடுகள் 53 இருந்தும் பெறும் 21 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களே இதில் பங்குபற்றினர். அதுவும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இவர்களின் வருகை இருந்தது.

எது எப்படியிருப்பினும், அரசு இங்கு அர‌ங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் ஐக்கிய நாடுகள் சபையின் பொறியில் இருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது – பதில் கூறியே ஆகவேண்டும் என்றார்.

http://news.tamilstar.com/archives/53654

  • கருத்துக்கள உறவுகள்

65 வருடமாக தமிழர்களை இனப்படுகொலை செய்து மொத்த இலங்கைத் தீவையும் சிங்கள மயமாக்குவதில் ஐ தே கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. அந்த வகையில் கூட்டுக்கொலையாளிகளைக் கேட்டிட்டு தான் கொலையைப் பற்றி விசாரிக்கணுன்னு ஐ தே கட்சி நினைக்கிறதில நியாயமும் இல்லை. ஐ தே கட்சிக்கு சர்வதேச விசாரணைகளை நிராகரிக்கும் எந்தத் தகுதியும் இல்லை. அதுவும் இந்த விசாரணைக்குள் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.