Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் - வவுனியா தனியார் பேருந்தில் ஆபாசப் பாடல்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவரின் துணிகரச் செயலினால் அப் பேருந்தில் ஒலி பரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஆபாசப் பாடல்கள் நிறுத்தப்பட்டதுடன் அப் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களும் நிலத்தில் போட்டு உடைக்கப்பட்டன. 
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குப் புறப்பட்ட சில நிமிடங்களில் இடையில் இவ்விளம் பெண் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்துக்குள் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இறுவட்டிலிருந்து வெளிக்கிளம்பிய இப் பாடல்கள் காதுகளால் கேட்க முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமாக இருந்தன.
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பாடலைக் கேட்டு முகம் சுழித்தனர்.

பலர் தமது பிள்ளைகளோடும், குடும்பத்தாருடனும் பயணம் செய்து கொண்டிருந்த போதும் அப்பாடலை நிறுத்தும் படியாகக் கூறும் துணிச்சல் எவருக்கும் வரவில்லை. 
பாடலைக் கேட்டுச் சகிக்க முடியாத இவ்விளம்பெண் தமது இருக்கையை விட்டு உடனடியாக எழுந்து நடத்துனரிடம் சென்று ஆபாசம் மிக்க  இப் பாடலை ஒலிபரப்புவதை நிறுத்துமாறும் தேவையானால் இப்பாடல்களை உங்கள் வீடுகளில் போட்டுக் கேட்கலாம் என்று கூறினார். நிறுத்தத் தவறினால் இது பற்றி தனியார் பேருந்து சங்கத்திடம் முறையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

பல இளம் பிள்ளைகள் தமது பெற்றோருடன் பயணம் செய்வதாகவும் ,  இப்படியான பாடல்கள் பேருந்துகளில் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 
இதனை ஏற்றுக் கொண்ட நடத் துநரும் , சாரதியும் உடனடியாக ஆபாசப் பாடல்கள் அடங்கிய இறுவட்டை ஒலிபரப்புவதை நிறு த்திக் கொண்டனர். சாரதியினால் அவ் இறுவட்டு நடத்துநரிடம் கையளிக்கப்பட்டது. அனைவர் முன்னிலையிலும் இறுவட்டை நடத்துநர் நிலத்தில் போட்டு உடைத்தார். 

தவறுகளை உணர்ந்து ஆபாசப் பாடல்களை நிறுத்திக் கொண்டதுடன் அவற்றை உடைத்து அழித்துக் கொண்ட சாரதி , நடத்துநரைப் பயணிகள் அனைவரும் பாராட்டிக் கொண்டனர். அத்துடன் துணிந்து இச் செயலை மேற்கொண்ட சுமார் 25 வயதுடைய அந்த இளம் யுவதியின் செயற்பாட்டையும் அவர்கள் வாயாரப் புகழ்ந்தனர். 

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/mutojeowlx4963401704ef7512344tzptl0f5f2e9fc84ed2c5db8292u2jwm#sthash.fOl7fWPq.dpuf

தமிழ் பட்டுத்தானே? (வேற எந்த பாட்டுக்கள் அவ்வளவு மோசமா இருக்கும்)

 

யாரும் வந்து சொல்லும் வரைக்கும் சாரதியும் நடத்துனரும் அதை இரசித்தார்கள் தானே? 

 

 

ஒழுக்கமும் அதன் விழுமியங்களும் நந்தி கடலோடு போய்விட்டது.

 

 

 

இனிமேல் எல்லரும் தமக்கான ஒரு ஐபோனை வாங்கி காதுக்குள்ள வயரை விட்டு வெள்ளை காரனைப்போல் தனிமையில் இதுகளை கேட்கவேண்டும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களிலும்.... ஆபாசப் பாடல்கள் உள்ளதா?
சாம்பிளுக்கு ஒன்றை... ஆராவது இணைத்து விடுங்களேன்.
சும்மா... கேட்டுப் பாப்பம். :D

பாடல்களிலும்.... ஆபாசப் பாடல்கள் உள்ளதா?

சாம்பிளுக்கு ஒன்றை... ஆராவது இணைத்து விடுங்களேன்.

சும்மா... கேட்டுப் பாப்பம். :D

 

 

சிலர் குடிப்பது போலே நடிப்பார்...சிலர் நடிப்பது போலே குடிப்பார்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.