Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூரு ஏ.டி.எம்.மில் பெண் மீது கொடூர தாக்குதல்: வீடியோவால் மக்கள் அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

 

ATM%20woman%20attack%201.jpg

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37) தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியின் தலை, உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

 

ATM%20woman%20attack%202.jpg

பின்னர் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உடனடியாக எஸ்.ஜே. பார்க் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது ஜோதி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் ஜோதியை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிமான்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஜோதி தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

 

ATM%20woman%20attack%203.jpg

ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.ஜே.பார்க் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகிறார்கள். 

வங்கி பெண் அதிகாரி மீது தாக்குதல் நடந்த ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள சாலை, ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். உல்சூர் கேட் காவல் நிலையமும் அருகிலேயே உள்ளது. அந்த சாலையில் காலை நேரத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21482

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.