Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருடா வருடம் ஈகைச் சுடர் ஏற்றினால் மட்டும் அந்தப் புனிதர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைந்து விடுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு தொலைபேசி அழைப்பு... முள்ளிவாய்க்கால் தின்ற லட்சக்கணக்கானவர்களில் ஒருவரது குரல்... தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து என்னை அழைத்த குரல்...

அண்ணை எனக்கு ஒரு உதவி செய்வீர்களா... ஒரு கொஞ்சக் காசு அனுப்பி விடுவீங்களா? ஒரு சின்ன கொட்டில் வீடு ஒன்று அமைத்து வாழ்வதற்கு.... எனக்கு இடுப்பிற்கு கீழ் இயங்காது... மிகுந்த கஸ்ரத்திற்கு உள்ளாகி இருக்கிறேன்... என்று கூறியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு போராளி... தன்னை புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் என்று அழைப்பார்களாம்.. அவருடைய மனைவியும் போராளி.... முகம் எரிந்து தழும்புகள் காணப்படுகின்றன.

அந்தப் போராளி கேட்ட பணம் 6 -7 பக்கற் சீமெந்தும் தகரமும் வாங்கக் கூடிய தொகைப் பணம் மட்டுமே... அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தேன்... ஒரு சில நாட்களில் தனக்கு ஒரு மின் காற்றாடி வாங்கித் தருவீர்களா எனக் கேட்டார்... ஆம் என்று சொன்னேன்... கட்டாயம் எங்களை வந்து நீங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டார்... ஒரு சில நாட்களின் பின் மின் காற்றாடியையும் வாங்கிக்கொண்டு போனேன்... காரில் சென்று பின் அவருடைய வீட்டிற்கு காரில் போக முடியாது ஓட்டோ பிடித்துச் சென்றேன்... கிளிநொச்சி பாரதிபுரத்தில் மிகவும் உட்கிராமத்தில் ஒரு மூலையில்; 4 தடி நட்டு தகரங்களை போட்டு ஒரு தங்குமிடம்... ஒருபக்கத்தில் கணவனின் கட்டில்.. மறுபக்கத்தில் மனைவிக்கு ஒரு கட்டில்... அவை மிகவும் பழைய கட்டில்கள்... அதனை வீடு என்றே சொல்ல முடியாது... அந்த இடத்தில் இவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நான் அனுப்பிய சிறு தொகைப் பணத்தில் இப்போ சிறிய ஒரு வீடு அமைக்க சுவர் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். இடுப்பின் கீழ் இயங்காத அவர் கட்டிலிலேயே படுத்திருந்தார்.  அவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அந்த போராளி மனைவி எப்படித்தான் பார்க்கிறாரோ என நினைத்த போது நெஞ்சு கனத்தது.

என்னால் அதனைப் பார்த்து தாங்க முடியவில்லை... இதற்குத் தானா போராடினோம்? நான் ஏன் இந்த அரசியலுக்குள் வந்தேன் ... என என்னை மிகவும் நொந்து கொண்டேன்...

கிளிநொச்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் என பலரிடமும் உதவி கேட்டேன்.... படம் பிடித்து அனுப்பச் சொன்னார்கள்... எத்தனை படங்கள் பிடித்து அனுப்பிவிட்டோம் எந்தப் பயனும் இல்லை... எம்மை வந்து பார்க்கக் கூட இல்லை... நீங்கள் தான் தேடி வந்திருக்கிறீர்கள்... நீங்கள் செய்த உதவி எமக்கு பெரிய உதவி என்று சொன்னார் புலிகள் பிரிகேடியர் என்று அழைத்த அந்தப் போராளியும் அவரின் போராளி மனைவியும்...

அவர்களுடன் பேசி ஆறுதல் கூறி புறப்பட்டோம்... ஓட்டோவில் ஏறி வந்து கொண்டு இருக்கும் போது கவலை தாங்க முடியாமல் உரையாடிக் கொண்டு வந்தோம்... ஓட்டோ சாரதி சொன்னார்... ஐயா நீங்கள் இன்று இப்போ பார்த்து விட்டு வந்தது வன்னியில் ஒரு சிறு துளிச் சோகம்... இப்படி ஆண்களும் பெண்களுமாக அவயவங்களை இழந்தும், இடுப்பின் கீழ் இயங்காமல் கட்டிலிலேயே படுத்திருப்பவர்களையும், வாழ வழியின்றி வறுமையிலும் வறுமையில், வாழுகின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை முன்னாள் போராளிகளை என்னால் உங்களுக்கு காட்ட முடியும் என பெரு மூச்சு விட்டார்....

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு எமக்குள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறோம்.  பாராளுமன்றக் கதிரைகளுக்காகவும், மாகாணசபை அமைச்சுக்களுக்காகவும் எம்மை பிய்த்துக்கொள்கிறோம். அடுத்து வரும் பாராளுமன்றக் கதிரைகளை இலக்கு வைத்து அரசியல் செய்கிறோம்.

5 ஆம் கட்டப் போரை தலைமை தாங்க தலைவர் வருவார் போராட்டம் வெடிக்கும் என, புலம் பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும்  சொல்லிக் கொண்டும் வருடா வருடம் மிகப் பிரமாண்டமான மாவீரர் தினங்களை உலக அளவில் அனுஸ்டித்துக் கொண்டும் எப்படி எங்களால் இருக்க முடிகிறது என என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்ளும் போது வெட்கத்தால் துவண்டு போகிறேன்....

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் உலக அளவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு அந்த நிதி மூலங்கள் இன்னும் ஆங்காங்கே தனிப்பட்டவர்களிடமும், சில அமைப்புகளிடமும் சிக்கி இருக்கின்றன.

இப்போதும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பெயராலும் வேறு வழிகளிலும் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு இடம்பெறுகிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராளிகள் என ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வு நரகமாகியிருக்கிறது.

சரி போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை விடுங்கள் ... புலிகள் அமைப்பில் இணைந்து தமது வாழ்வை அர்பணித்த ஆயிரக்கணக்காண பெண் போராளிகளதும் ஆண் போராளிகளதும் வாழ்வுக்கு அவர்களின் பெயரால் பணம் சேகரித்தவர்களும், அரசியல் செய்பவர்களும் உதவலாம் தானே?  

இவற்றை எல்லாம் செய்யாது விடுத்து தமது வாழ்வின் கொடூரங்களை தாங்காமல் படையினரிடம் அல்லது அரசாங்க தரப்பிடம்  உதவி கேட்டு சென்றால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள்... காலப்போக்கில் அது துன்புறுத்தல் இல்லாமல் அதுவே அந்தப் பெண்களின் வாழ்க்கை ஆகிவிடுகிறது. உயிருடன் இருந்து வாழ்வை சிறுகச் சிறுக இழந்து உச்ச மட்டக் கொடூரங்களை தாங்கும் இவர்களை தவிக்கவிட்டு மாவீரர்களுக்கு வருடா வருடம் ஈகைச் சுடர் ஏற்றினால் மட்டும் அந்தப் புனிதர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைந்து விடுமா? எம் அன்புக்கு உரியவர்களே சிந்தியுங்கள்...

கௌதமர்:-

இந்தக் குறிப்பு இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது... ஏந்த வித மாற்றங்களும் இன்று இங்கு பிரசுரிக்கப்படகிறது...

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99656/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
சரி போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை விடுங்கள் ... புலிகள் அமைப்பில் இணைந்து தமது வாழ்வை அர்பணித்த ஆயிரக்கணக்காண பெண் போராளிகளதும் ஆண் போராளிகளதும் வாழ்வுக்கு அவர்களின் பெயரால் பணம் சேகரித்தவர்களும், அரசியல் செய்பவர்களும் உதவலாம் தானே?  

 

 

கடைகளில் மாவீரர் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டு இருக்கிறார்களாம். அது போதாதா?? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.