Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள பிரித்தானியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள பிரித்தானியா! 
[saturday, 2013-11-30 19:16:19]
News Service
பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பிரித்தானியா இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் பிரதமர் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து பிரித்தானியா பொருளதார தடைவிதிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது. இதன் ஊடாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள பிரித்தானியா! 

.....எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து பிரித்தானியா பொருளதார தடைவிதிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது....

 

 

2cctdw8.jpg

 

 

நன்றி: பட உதவி: 'காதலிக்க நேரமில்லை'

கற்பனை: அடியேன் தான் ! :)

 

இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் திரையிடப்பட்டது

இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டிஇ ஆகியோரும் அடங்குவர்.

இந்த படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்டான அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய இரக்கமான அன்பான கவனிப்புகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட செஞ்சோலையில் வளர்ந்த தமிழீழ விடுதலைப் புலி பெண் உறுப்பினர் ஒருவரை மையமாக கொண்டே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயவதனி எனும் இப்பெண் மறுபக்கத்தை தீயதாகவே பார்க்கும் வகையில் வளர்க்கப்பட்டவர்.

இந்த படம் ஜெயவதனி பற்றியதாயினும் இது தனி ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்துக்கும் அப்பால் செல்கின்றது. இதில் இவரைப்போன்ற பலரின் கதி காட்டப்பட்டுள்ளது. இது மீட்சிபெற முயலும் இலங்கையிலுள்ள மக்களின் கதையாகும்.

இவர்களுக்கு ஆழமான அனுதாபமும்  உதவியும் தேவை இதனால்தான் இந்த படத்தை தயாரித்தேன் என இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் சந்திமல் கூறினார்.

இந்த படத்தை பார்த்தவர்கள்இ ஒரு நீதியான சமநிலைப்பட்ட ஊடக கவனிப்பு என்ற நேக்கில் இந்தப் படத்தை இயன்றளவு பல இடங்களிலும் திரையிட வேண்டுமெனும் கருத்தை வெளியிட்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91420-2013-11-29-12-55-42.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.