Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கெதிராக யாழில் பிரசார ஊர்வலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு  வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத நீதி கோரும் விழிப்புணர்வு பேரணி இன்று யாழில் பெண்கள் அமைப்புக்களால் நடத்தப்பட்டது.

இந்த பிரசாரம் இன்று காலை 8மணியளவில் நீதிமன்றிலிருந்து ஊர்வலமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியை சென்றடைந்தது.

மேலும் இந்த வருடம் பெண்கள்,சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் இடம்பெறுகின்றமையால் இது பெண்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பெண்கள் உரிமைக்காக பணியாற்றும் செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் மக்களின் வாழ்க்கையையும் சமூக அபிவிருத்தியையும் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சமாதானமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சமூகங்களுக்கு அடித்தளமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற சமுகம் அமைய வேண்டும் என கோரி  பெண்கள் அமைப்பு 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

துரிதமாக விசாரணைகள் இடம்பெற்று சாட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும், சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டு சாட்சிகள் போதவில்லையென தள்ளுபடி செய்வதை நிறுத்த வேண்டும்,சட்ட வைத்திய பகுப்பாய்வின் பின் உரிய காலத்திற்குள் முடிவுகள் அறிக்கைகள் வன்முறைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் வைத்திய அதிகாரி அனுப்பி வைத்தல், நீதி விரைவாக வழங்கல்,பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை சட்ட கோவை அமுலாக்கல், நீதித்துறையிலுள்ளவர்கள் உண்மையான நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் பாடுபடல், தமிழ் பேசும் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தலை உறுதிப்படுத்தல் மற்றும்  அனைவரும் இணைந்து இது பற்றிய விழிப்புணர்வை செயல்வாத பயணங்களாக தொடர வேண்டும் ஆகிய 8  கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த பிரசாரத்தில் பெண்கள்,சிறுவர்கள் என பலர் பங்கு பற்றி இருந்தனர்.

 

இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதியப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களின் விபரம்.

 

IMG_0011%281%29.jpg

 

sssssssssssss%281%29.jpg

 

wwwwwwwwwwwwwww%281%29.jpg

 

wwwwww%281%29.jpg

 

ww%281%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=873862498309365661#sthash.UGP6ykTg.dpuf
DSC00922%20copy%281%29.jpg

DSC00947%20copy.jpg
DSC00953%20copy.jpg
DSC01015%20copy.jpg
DSC01019%20copy.jpg
DSC01052%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.